தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில்  காங்கிரசின் அலீம் அல் புஹாரி தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
தமிழ்நாடு காங்கிரஸ்-திமுக கூட்டணிக்குள் பெரிய சலசலப்பு இருப்பதாக பார்க்க முடிகிறது. பிரவீன் சக்கரவர்த்தி தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறாரா அல்லது அவர் செய்வது எல்லாம் காங்கிரஸ் தலைவருடைய ஒப்புதலுக்கு கீழதான் நடக்கிறதா?
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்தியா முழுக்க இளைஞர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள். எடுத்த உடனே விஷயத்துக்கு வரவேண்டும் என்றால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? யாருக்கெல்லாம் கட்சியில்  அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்வதற்கான திராணி இல்லையோ.. இப்போது பிரவீன் சக்கரவர்த்தி என்று ஒருவர் பேசுகிறார். கிரவுண்டில் உள்ளவர்களுக்கு இவரெல்லாம் யாருக்குமே தெரியாது. இதுதான் உண்மை.
Advertisment

 

205
'If you know Praveen Chakravarthy, do you know Lawrence?' - An angry Aleem Al-Bukhari Photograph: (congress)

சில விஷயங்களை உடைத்து பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனக்குமே அவர் யார் என்று தெரியாது. கட்சியில் இருக்கும் எனக்கே தெரியவில்லை, மக்களுக்கு தெரியுமா? அவர் ஒரு பெரிய தலைவராக கூட இருந்துவிட்டு போகட்டும். இதுவரை கட்சிக்காக அவர் எத்தனை முறை சிறை சென்றிருப்பார்: எத்தனை முறை வந்து களத்தில் இறங்கி போராடி இருப்பார். கட்சியுடைய அடிப்படை பிரச்சனையே இதுதான். அடிக்கடி சில பேர் காங்கிரசை விமர்சனம் செய்யும் போது பண்ணையார் கட்சி என்று சொல்றாங்க. ஆனால் அதை உண்மைப்படுத்தக்கூடிய வகையில்தான் இதுபோன்ற மேல்மட்டத்தில் அறிவுக்கு புறம்பாக, மடத்தனமாக எதையாவது ஒன்றை உளறிக்கொண்டு தன்னை ஒரு லைம் லைட்டில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடிய மடையர்களால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் தான் இவைகள் எல்லாம்.

'என்னுடைய கடன் ஆறு லட்சம் அதானியுடைய கடன் பல லட்சம் கோடி. நான்தான் பொருளாதாரத்தில் உயர்ந்தவன்' என்ற ஒரு ட்வீட்  பார்த்தேன். நல்லா இருந்தது. தனி நபருக்கும் ஒரு பெரிய  ஆன்டர்பிரனுக்கும் உள்ள வித்தியாசமாக கூட இருக்கலாம்.  நான் ஒரு நிறுவனம் நடத்துறேன் என் கடன் கம்மியா இருக்கு. இன்னொரு நிறுவனம் என்னோட மிக பெருசா இருக்கு அதனுடைய கடன் அதிகமாக இருக்கிறது என்றால் வெறும் கடனை மட்டுமே மையப்படுத்தி பேசக்கூடாது. அதே மாதிரி சசிகாந்த் செந்தில் ஒரு டிவீட் போட்டிருந்தார். ஒருவருடைய வெறும் உடல் எடையை வைத்து மட்டும் முடிவு பண்ணக்கூடாது. அதில் எத்தனை சதவிகிதம் பேட், எவ்வளவு மசில் மாஸ் எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.  
தொடர்ந்து கருத்தியலுக்கும் சித்தாந்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய தமிழ்நாட்டில் நீங்கள் ஆயிரம் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது வைத்தாலும் பாஜகவை விட, தொண்டை வலிக்க கத்தக்கூடிய சீமானை விட, எல்லா மற்ற கட்சிகள் அனைத்தையும் விட இரண்டாம், மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் தன்னை தக்க வைத்துக் கொள்கிறது என்றால் அதனுடைய சித்தாந்த வலிமை மக்களுக்கு பிடித்திருக்கிறது.
இன்னைக்கும் திமுக கூட்டணியில் அதிகபட்சமாக சீட்டு வாங்கக்கூடிய ஒரு கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்தோம் என்பது முக்கியமான காரணம். இன்னொரு முக்கியமான காரணம் ஆட்சியில் இருந்ததால் பட்டிதொட்டி எங்கும் களத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இருக்கிறார்கள். வேதனையான விஷயம் என்னவென்றால் பிரவீன் சக்கரவர்த்தி பேசுறீங்க ஆனால் லாரன்ஸ் என்ற யாரையாவது தெரியுமா? லாரன்ஸ் கன்னியாகுமரியில் இருக்கிறார். பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டம் வெடித்தது. அப்போது ஒரு கல் அவரை தாக்கி மண்டையில் இரத்தம் ஒழுகியது.
ரத்தம் ஒழுக ஒழுக காங்கிரஸ் கொடியை பிடித்துக் கொண்டிருந்தார். அவரை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிய முடியவில்லை. அதற்கு காரணம் இதுபோன்ற மூடர்களும், பண்ணையார்களும் தொடர்ந்து வந்து லைம்லைட்டில் இருந்து கொண்டு எதையாவது பேசுகிறார்கள். நீங்க இந்த மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசக்கூடிய பண்ணையார்களை எல்லாம் பாருங்கள் கட்சிக்காக, ஒரு சின்ன எப்ஐஆர் கூட வாங்கி இருக்க மாட்டார்கள். இவங்களை கைது செய்து தூக்கி உள்ள போட்டால் ஒரு நாய்கூட வந்து சீண்டாது.