Advertisment

என்னைய மீறி அவளைத் தொட்டுப் பாரு பார்க்கலாம்னு...சாதியக் கொடுமை!

"டேய் கனகா... என்னைய கைவிட்ற மாட்டியல்ல...''

""என்ன ப்ரியா பேசறே? நீ என்னோட உசுருடா. எப்பவுமே நான் உங்கூடத்தான் இருப்பேன்

Advertisment

""இல்லடா, எனக்கு உங்க அண்ணன் வினோத்தை நெனச்சாத்தான் பயமா இருக்கு'

"அவனை எங்க அப்பா சமாதானம் பண்ணிருவாரு, நீ பயப்படாதே'' என கடந்த மூன்று நாட்களாக இப்படித்தான் கனகராஜ், அவன் திருமணம் செய்ய ஆசைப்பட்ட தர்ஷினி ப்ரியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

Advertisment

"ஆனால்...' என கனகராஜின் நண்பர்கள் நம்மிடம், "கடந்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் 5:15 மணிக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார், கனகராஜும் ப்ரியாவும் தங்கியிருந்த வீட்டிற்குள் போயிருக்கிறான்.

"டேய்... இந்த கீழ்சாதியைச் சேர்ந்தவளை கல்யாணம்பண்ண நினைக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன்... அப்படி அவ கழுத்துல நீ தாலி கட்ட நெனச்சே... இவ கழுத்து மேல தலை இருக்காது'ன்னு சொல்லியிருக்கிறான்.

girl

"என்னைய மீறி அவளைத் தொட்டுப் பாரு பார்க்கலாம்'னு கனகராஜ் சொல்லியிருக்கான். சட்டுன்னு முதுகுல சொருகியிருந்த அரிவாளை எடுத்து கனகராஜை... தம்பின்னும் பார்க்காம வெட்டித் தள்ள... தடுக்க வந்த அந்த ப்ரியாவின் தலையிலயும் முகத்துலயும் வெட்டிட்டான். ரத்த வெள்ளத்துல ரெண்டுபேரும் துடிக்கிறதைப் பார்த்து ஓடிட்டான் படுபாவி. சம்பவ இடத்துலயே கனகராஜ் இறந்துபோயிட்டான். அந்த ப்ரியா பொண்ணை இந்த மேட்டுப் பாளையத்துல இருந்து கோயமுத்தூர் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போயிட்டாங்க ...'' என்கிற அவர்களிடம்... "இவுங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டாங்களா?' என கேட்டோம்.

""இல்லைங்க சார். எங்க ப்ரெண்டு கனகராஜ் முத்தரையர் சாதிக்குள்ள வர்ற வலையர் சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த தர்ஷினி ப்ரியா அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணு. பக்கத்து பக்கத்து தெருவுல இருக்கறதால பார்த்துப் பேசி பழகிட்டாங்க. இந்தப் பழக்கத்தை கனகராஜ் அண்ணன் வினோத் பலமுறை கண்டிச்சிருக்கறான். அதையும் மீறி அந்த ப்ரியா பொண்ணு கடந்த மூணு மாசத்துக்கு முன்னால கனகராஜ் வீட்டுக்கு வந்துருச்சு.

boy

கனகராஜ் அப்பா கருப்புசாமி, "பொறுத்து இரும்மா... அவ னோட அண்ணன் கோபத்துல இருக்கறான். நானே அவனை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கிறேன்'னு அந்தப் பொண் ணை திருப்பி அனுப்பி விட் டுட்டாரு. இந்த டைம்லதான் கடந்த 3 நாளைக்கு முன்னால திரும்பவும் கனகராஜ், ப்ரியாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான். அவனோட அப்பா கருப்புசாமி "சரிடா... இந்தப் பொண்ணை இந்த வீட்டுக்குள்ள வச்சா உங்க அண்ணன் பேயா மாறிடுவான். நீ இந்தப் பொண்ணுடன் ஸ்ரீரங்கா ராயன் தெருக்கோடியில காலியா இருக்கற அந்த வீட்ல வாடகைக்கு இரு. ஒரு நல்லநாள் பார்த்து ரெண்டு பேருக்கும் கல்யா ணம்பண்ணி வச்சுர்றேன்' என சொல்லியிருக்கிறார்.

brother

அவர் சொன்னபடியே தான் வாடகைக்கு அந்த வீட்ல ரெண்டுபேரும் தங்கினாங்க. ரெண்டு மூணு நாள்ல கல்யாணம் பண்றதா இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள கனக ராஜ் அண்ணன் வினோத் துக்கு, அவுங்க அப்பா கருப்புசாமி சொன்ன மாதிரியே சாதிப்பேய் புடிச்சு வெட்டி சாய்ச்சுட்டான்'' என்கிறார்கள் சோகமாய். இப்போதுவரை கோவை ஜி.ஹெச். ஐ.சி.யூ. வில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் ப்ரியா. அந்தப் ப்ரியாவை யாரும் சந்திக்கமுடியாத வண்ணம் போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள் ளது. இந்நிலையில் தப்பித் துப்போன வினோத் குமாரை கண்டுபிடிக்க... எஸ்.பி. சுஜித் குமார் உத் தரவின்பேரில் மேட்டுப் பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான டீம் தேடிக்கொண்டிருக்க... 25 வயதே ஆன வினோத் குமார், போலீசில் கடந்த புதன் அன்று காலை சரணடைந்திருக்கிறான்.

"கூடப்பிறந்த தம்பியையே வெட்டிக் கொல்கிற ஆணவத்தை சாதியே கேடாய் வழங்கு கிறது... ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. இனியும் தொடரும்...' எனச் சொல்வது போலத் தான் ஒவ்வொரு ஆணவக் கொலை நடந்தேறும் போதும் வெட்கப்பட்டு சொல்லத் தோணுகிறது "சாதி கொண்டவர்கள் திருந்தாத ஜென்மங்கள்' என.

caste Coimbatore incident marriage public issues
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe