ADVERTISEMENT

அதிமுக, திமுக இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால், தேர்தல் முடிவு வெளியாக காலதாமதம் ஏற்படும் - நக்கீரன் பிரகாஷ் பேட்டி!

02:56 PM Apr 24, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT



தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. வாக்கு எண்ணும் மேஜை குறைக்கப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாக காலதாமதம் ஆகலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் திட்டமிட்டப்படி வருமா, அதில் ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் அவர்களிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT

தமிழகத்தில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்று இரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவு முழுவதுமாக அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. வாக்குப்பெட்டிகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், தேவையற்ற வகையில் மனிதர்கள் நடமாட்டம், ட்ரோன்கள் பறப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையின்போது பங்கேற்கும் கட்சிகளின் முகவர்களுக்கு கரோனா சான்றிதழ் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஆணையத்தின் முடிவா? திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை 2ஆம் தேதி நடைபெறுமா? உங்களின் பார்வை இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது ஒரே சீராக இல்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில்தான் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதும், மற்ற மாவட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது நிச்சயம் வேறுபடும். இந்த முடிவுகள் பற்றி தமிழகம் முழுவதும் ஒரே சீரான கருத்து என்பதே இல்லை. இதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. இதுதொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக எது கேட்டாலும் டெல்லியை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கைகாட்டுகிறார். இதுதொடர்பாக டெல்லி ஆணையமும் இதுவரை எதையும் கூறவில்லை.

தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்டெய்னர் செல்வது, ட்ரோன்கள் பறப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் டாய்லெட் இல்லை என்று கூறி மொபைல் டாய்லெட்களைக் கொண்டு வருவது என பல்வேறு வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மொத்தம் 14 மேஜைகள் போட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மாற்றாக, பத்து மேஜை அமைத்து வாக்கு எண்ணப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது. வாக்கும் எண்ணும் அதிகாரிகள், மற்றும் முகவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது, பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் தமிழக தேர்தல் ஆணையமோ அல்லது டெல்லி தேர்தல் ஆணையமோ இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.


இவை அனைத்துமே சிந்துபாத் கதையைப் போல இருக்கிறது. பூதம் வந்து, ஆற்றில் இறங்கி, கடலில் கலந்து, மரத்தில் மறைந்தது என்பதைப் போல்தான் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்கிறது. சத்தியபிரதா சாஹு போல ஒரு மர்ம கதை எழுத்தாளர் இதுவரை யாரும் தமிழகத்தில் தேர்தல் ஆணையராக இருந்தது இல்லை. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. எல்லோரும் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அனைவருக்கு டெஸ்ட் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மேஜைகள் அதிகரிக்கப்பட்டால் நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும், 2016ஆம் ஆண்டு போல அதிகாரிகள் தேர்தல் முடிவுகளில் விளையாட வாய்ப்பு ஏற்படும். ஒரு கட்சி வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து முன்னணியில் இருந்தால் தேர்தல் முடிவு விரைவில் தெரியவந்துவிடும். எல்லோரும் சாஹுவிடம் மனு அளிக்கிறார்கள். அந்த மனுவை அவர் என்ன செய்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT