Advertisment

" இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை...." - பிரதமர் மோடி வருத்தம்

ஐரோப்பாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி நேற்று லண்டன் பிரதமர் தெரசா மே வை சந்தித்து இருநாட்டு வியாபாரம் உள்ளிட்ட பல விஷயங்களைப்பேசினார். பின்னர்மோடிக்கும்,இந்திய வாழ் மக்களுக்கும் இடையே கேள்வி பதில்கள் 'பாரத் கி பாத், சப்கே சாத்'என்றநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர் பிரசூன் ஜோஷி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய சிலஅம்சங்கள்....

Advertisment

pm modi

  • "நானும் உங்களை போன்ற ஒரு சாதாரண மனிதன்தான். நான் இருக்கும் பதவி, நான் பார்க்கும் வேலை மட்டும்தான். நான் ஒரு வாழ்நாள் மாணவன். அனைத்து இந்தியமக்களும் எனக்கு ஒன்றுதான் நான் முடிவுகளை ஒரு சாரருக்காக எடுக்க மாட்டேன்.நான் தவறுகள் செய்யலாம், ஆனால் அது தவறான நோக்கத்துடன் இருந்ததுஇல்லை."
  • "என்னால் மட்டும்இந்தியாவை மாற்றிவிட முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததேஇல்லை. ஆனால், லட்சம் பிரச்சனைகள் நமக்கிருந்தாலும் அதனை தீர்க்க கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்என்பவன் நான். அதுதான் எனக்கு உறுதியளிக்கிறது."
  • "நான் விமர்சனங்களை கண்டு வருத்தப்பட்டதில்லை. தயவு செய்து எங்களை விமர்சனம் செய்யுங்கள் அப்போது தான் நாங்கள் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க முடியும். ஆனால், தற்போது விமர்சனங்கள் எல்லாம் தரம் குறைந்து குற்றச்சாட்டுகளாகவே இருக்கிறது. மக்கள் யாரும் ஒரு விமர்சனத்துக்கு வலுவான வழியில் ஆராய்ச்சி செய்வதில்லை. மக்கள் என்னை பார்த்து, "அவர் விமர்சனத்துக்கு பதிலளிக்க மாட்டார்" ,என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் நான் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், விமர்சனம் என்ற ஒன்றிர்க்குநம்பிக்கை தருகிறேன்".
  • "வரலாற்று பக்கங்களில் மோடியின் பெயர் இருக்க வேண்டாம். நான் இங்கு என் வேலையை பார்க்க வந்தவன், அதற்குமேல் ஒன்றுமில்லை. என் பெயர் அழிவற்ற வரலாற்று பக்கங்களில் இருக்க வேண்டாம்."
  • "தற்போது நாம் எங்கு இருக்கிறோம், எங்கே இருக்கிறோம் என்பதை பாருங்கள். நான் நினைக்கிறேன் மக்கள்இவற்றைஎல்லாம் உணர்ந்திருப்பார்கள் என்று. அதாவது நாட்டை சுத்தம் செய்யும்போது, கற்களைநாங்கள் விட்டுச் செல்லவில்லை என்று."
  • "பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் வன்புணர்வு தான், அதைநாம் எப்படி ஏற்றுக்கொள்வது. இச்சம்பவம் நாட்டுக்கே ஒரு அவமானம்."
  • "எனக்கு மூன்றே விஷயங்கள் வேண்டும், மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்குவேலை, முதியவர்களுக்கு மருத்துவம்."
  • "பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறுகையில், " இந்திய மக்கள் உண்மைக்கும், வெளிப்படையான அரசாங்கத்திற்காகவும்சிறு தியாகத்தை செய்வார்கள் என்று நான் நம்பினேன்".
  • "நான் கூட்டுறவு கூட்டாட்சி முறையை போட்டிக்குரிய கூட்டுறவு கூட்டாட்சி முறையாக மாற்ற நினைத்தேன்."
  • "18,000 கிராமங்களில் மின்சார வசதியில்லை. பல பெண்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகள் இன்றும் இந்தியாவில் இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. நான் ஒரு உறுதியுடன் இருக்கிறேன், இந்திய ஏழைகளுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று."
  • "ஆம், மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள், அவர்களுக்கு எங்களால் வழங்கமுடியும் என்பதால் தான் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் என்ன சொன்னாலும், அரசாங்கம் அவற்றை எல்லாம்கவனிக்கிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது."
  • "ரயில் நிலையத்தில் நின்ற மனிதரின் பெயர் நரேந்திர மோடி. தற்போது இந்த ராயல் அரண்மனையில் உங்கள் முன்னால்இருக்கும் மனிதர்125 கோடி இந்திய மக்கள் ."
Demonitization europe tour Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe