tvk Photograph: (sengottaiyan)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று 06/02/2026) முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது.

Advertisment
அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிலர் என அதிமுகவை சைலன்ட் கில்லர் செய்ததால் அதிமுக நேரடியாக விஜய்யை விமர்சிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அதிமுக வைக்கும் விமர்சனத்திற்கு அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையனை வைத்தே தவெக பதிலடி கொடுத்து வருகிறது.
Advertisment
நக்கீரன் டிவியில் வெளியாகி வரும் 'சூடா ஸ்ட்ராங்கா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி சூர்யா பல்வேறு அரசியல் பார்வைகளை பகிர்ந்துகொண்டார்.
தவெகவிற்கு போன செங்கோட்டையன் எப்படி இருக்கிறார்? மனத் திருப்தியாக இருக்கிறாரா? அரசியல் சீனியர் என்ற மரியாதை இருக்கா அங்கு அவருக்கு?
கல்யாணத்துக்கு பிறகு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என் சொல்வது மாதிரி தவெக கட்சிக்குள் போகும் போது நல்லாத்தான் இருக்கும். என்கிட்ட கூட செங்கோட்டையன் பேசும்போதெல்லாம் 'நீ ஏன்பா இப்படி இருக்க வாப்பா நம்ம கட்சிக்கு' எனச் சொல்கிறார். செங்கோட்டையன் இப்போது ஊரில் யாரை பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடுறேன் என்று வடிவேலு, சத்யராஜ் ஒரு படத்தில் ஆள் தூக்குவார்களே அது மாதிரி யாரை பார்த்தாலும் என்கிட்ட ஒரு ரெண்டு மூணு சொல்லிருக்காங்க. செங்கோட்டையன் வீட்டுபக்கம் போக முடியவில்லை என்கிறார்கள்.

ஆனால் செங்கோட்டையன் கட்சிக்குள் உள்ளே நுழையும் போது நல்ல கணக்குடன் தான் வந்தாரு. 21 சட்டமன்ற தொகுதிக்கு நான் தான் இன்சார்ஜ். கேண்டிடேட் யாருன்னு நான்தான் முடிவு பண்ணுவேன். அந்த தொகுதிகளுக்குள்ளார நீங்களோ உங்கள் பொதுச்செயலார்களோ, ஆதவ் அர்ஜூனாவோ யாரும் வரக்கூடாது. எலக்ஷன் வேலையில இருந்து கேண்டிடேட் யார் என்பது வரை எல்லாம் நான்தான் பண்ணுவேன். எனக்கு இந்த பதவி வேண்டும், எனக்கு இந்த தொகுதி வேண்டும் என செங்கோட்டையனுக்கு என்ன தேவை என்பதை ரொம்ப கிளியரா பேசிட்டு தான் கட்சிக்குள் போனார்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யால் வெளியே வர முடியாமல் போயிடுச்சு. சரி பாண்டிச்சேரிக்கு போவோம். நம்ம அங்கு போனால் நாளைக்கு பாண்டிச்சேரி கவர்மெண்ட் நம்மள சப்போர்ட் பண்ணும். திமுக அரசுதான் எதிர்க்கிறார்கள். புஸ்ஸி ஆனந்தும், ரங்கசாமியும் ஒன்றாக பிணைத்துள்ளார்கள். அதனால் அவர் செய்வார் என நினைச்சுட்டு போனாங்க. அங்கு ரங்கசாமியையே பிஜேபி ஆட்டி வச்சுக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் என்னடா செய்றது என திணறிக்கொண்டு இருந்தபோது செங்கோட்டையன் திரும்ப ஈரோடில் விஜய்யை வைத்து கூட்டம் நடத்தினார். அதில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து இருந்தா மக்களே சொந்த காசுல திண்டுக்கல் புட்டு வாங்கிட்டு பனையூரை பூட்டி இருப்பாங்க. ஆனால் ஈரோடு கூட்டம் நன்றாக முடிந்த பின்னர் இப்போது புஸ்ஸி ஆனந்த் எல்லாரும் பிரீ ஆகிட்டு அவங்கவங்க தங்கள் ஐம்பதை காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
Follow Us