Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

மோடிக்கு மீண்டும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

indiraprojects-large indiraprojects-mobile

'கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியுதுனு சொல்வாங்க’ என்பது கிராமத்து சொலவடை. அதை நினைவுபடுதுகிறதுகின்றன, மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கு என்ற கருத்துக்கணிப்புகள். தெரிஞ்சோ தெரியாமலோ பாஜகவும் கூட்டணியும் சேர்ந்தே பெரும்பான்மைக்கு சற்று திணறும் என்கிற அளவுக்கு கருத்துக்கணிப்புகளை அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

 

modi

 

இதற்கு காரணமே, நாடு முழுவதும் வீசுகிற மோடி எதிர்ப்பு அலைதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் வெறுப்பைச் சந்திக்கிற அளவுக்கு மோடி தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார். மக்களுடன் நேரடி தொடர்பே இல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்திக்கக்கூட முன்வராமல் அரசியலை அவர் நடத்தினார். கார்பரேட் முதலாளிகள் மட்டுமே மோடியை சந்திக்க முடியும், அவர்களுக்காகவே புதிய திட்டங்களை அறிவிப்பார் என்ற மனநிலை மக்கள் மத்தியில் பரவிவிட்டது.

 

குறிப்பாக, மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், மாடுகளின் பாதுகாப்புக் குறித்தே அவர் கவலைப்பட்டார். மாடுப்பாதுகாப்பு குண்டர்களின் தாக்குதலுக்கு நான்கு ஆண்டுகளில் மட்டும் 400 பேர் பலியாகி இருக்கிறார்கள். மருத்துவமனைகளின் தேவைகள், கல்வி நிறுவனங்களின் தேவைகள் குறித்து மோடியும் பாஜக அரசும் கவலைப்படவே இல்லை.

 

மோடி தனக்குச் சாதகமாக சொல்லிக்கொள்ள ஒரு சாதனையைக் கூட செய்யவில்லை. அவருடைய அனைத்து நடவடிக்கைகளிலுமே மக்கள் தங்கள் பணத்தையும் பொருளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்களே தவிர அவர்களுக்கு நல்லது எதுவுமே நடக்கவில்லை. ஆனால், கார்பரேட் முதலாளிகளுக்கு மோடி திறம்பட ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் மோடி மீண்டும் பிரதமராவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு சில கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அந்தக் கருத்துக்கணிப்பை படித்துப்பார்த்து மோடியும் அமித் ஷாவுமே சிரி்த்திருப்பார்கள்.

 

தெலங்கானாவிலும் ஆந்திராவிலும் 2,

 

அருணாச்சல பிரதேசத்தில் 1,

 

அசாமில் 7,

 

பிகாரில் 22,

 

சத்தீஷ்கரில் 10,

 

கோவாவில் 2,

 

குஜராத்தில் 26,

 

ஹரியானாவில் 7,

 

ஹிமாச்சலில் 4,

 

காஷ்மீரில் 3,

 

ஜார்கண்ட்டில் 12,

 

கர்நாடகாவில் 17,

 

ம.பி.யில் 27,

 

மகாராஷ்டிராவில் 23,

 

ஒடிஷாவில் 1,

 

பஞ்சாபில் 2,

 

ராஜஸ்தானில் 25,

 

தமிழ்நாடு 1,

 

உத்தரப்பிரதேசத்தில் 71,

 

உத்தரகாண்ட்டில் 5,

 

மேற்கு வங்கத்தில் 2,

 

அந்தமான் 1,

 

சண்டீகர் 1,

 

தத்ரா மற்றும் நாகர் ஹவேலி 1,

 

டாமன் டையு 1,

 

டெல்லி 7

 

பாஜக மொத்தமாக பெற்ற 282 தொகுதிகளில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஸ்டிரா, குஜராத், சத்தீ்ஸ்கர், ஹரியானா, கர்நாடகா, அசாம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும்  252 இடங்களைப் பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் 25க்கு 25 இடங்களையும், மத்தியப்பிரதேசத்தில் 29க்கு 27 இடங்களையும், சத்தீஸ்கரில் 11 இடங்களில் 10 இடங்களையும், உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களில் 71 இடங்களையும், டெல்லியில் 7க்கு 7 இடங்களையும், ஹரியானாவில் 10க்கு 7 இடங்களையும் பெற்றிருக்கிறது. 2014 தேர்தலின்போது ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

 

modi

 

ஆனால், இந்தமுறை இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மோடி அழுது வாக்குக் கேட்டார். ஹர்திக் படேல் என்ற சின்னப்பையன் மோடியை கதறவிட்டான். பிரதமராய் இருந்தும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு 20-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார் மோடி. பாகிஸ்தானுடன் மன்மோகன்சிங் ரகசிய சதி என்று ஒரு பொய்யை தூக்கிப் போட்டார். ஏழை என்பதால்தான் தன்னை ஒழித்துக்க ராகுல் முயற்சி செய்வதாய் பொருத்தமில்லாத பொய்யை கூச்சமே இல்லாமல் சொல்லி தேம்பி அழுது நாடகம் போட்டார். அப்படியும் குஜராத்தில் போன தேர்தலைக் காட்டிலும் 16 இடங்கள் குறைவாகப் பெற்றார். காங்கிரஸின் வாக்குச் சதவீதமும் இடங்களும் அதிகமாகின.

 

நிலமை இப்படி இருக்கையில் மேற்படி மாநிலங்களில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களில் பாதி இடங்களைப் பெறுவதே கஷ்டம் என்பதுதான் நிலைமை.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...