Skip to main content

ராஜாஜி ஹாலில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு எப்படி???

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 


திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வந்தார். அச்சமயத்தில் வி.ஐ.பி வழியில் பொது மக்கள் சூழ்ந்துவிட்டனர். இதன் காரணமாக ராகுல் காந்தி அந்த மக்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டு அரைமணிநேரத்திற்கு எங்கையும் நகரமுடியாமல் தவித்தார். தமிழக காவல்துறை முழுப்பாதுகாப்பு அளிக்க வேண்டிய இறுதிசடங்கான கலைஞரின் இறுதிச்சடங்கிற்கு பிரதமர் மோடி வந்துவிட்டு சென்றபின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதனால்தான் ராகுல் காந்தி வி.ஐ.பி வழியில் வந்தும் மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டார். அப்போது பாதுகாப்பிற்காக இரண்டே இரண்டு தமிழக காவல்துறையினர்மட்டும் தான் உடன் இருந்தனர். அதுபோக எப்போதும் ராகுல் காந்தி பின்னே சபாரி சூட்டுகள் போட்டுகொண்டு இருக்கும் சிறப்பு பாதுகாப்புப்படையினர்தான் அக்கூட்டத்திலும் அல்லோலப்பட்டு அவருக்கு பாதுகாப்பு அளித்தது. ராகுல் காந்தி கூட்டத்தில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்ததும், அப்போது அவருடைய சிறப்பு பாதுகாப்பு படையால் கூட அவருக்கு பாதுகாப்பு ஒழுங்காக அளிக்கமுடியாமல் சிரமப்பட்டதையும் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், என்னதான் சிரமமாக இருந்தாலும் கூட்டத்திலும் அவரின்மேல் துரும்பு கூட படாமல் பாதுகாத்தது அந்த z+ சிறப்பு பாதுகாப்பு படை.  

 

rahul

 


இந்தியாவில் தனிநபர் ஒருவருக்கு சிறப்பு பாதுகாப்பு படை, பாதுகாப்பு அளிக்கின்றது என்றால் அவருக்கு அச்சுறுத்தல் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து எஸ்பிஜி, என்எஸ்ஜி, ஐடிபிபி, சிஆர்பிஎப் போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கான பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்களுக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து பாதுகாப்பு தரப்படுகிறது. இவர்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கிய பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து சிறப்பு பாதுகாப்பது அளிக்கப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு படைகள் z+, z, y, x  என்று நான்கு வகைகளாக இருக்கிறது. இதில் z+ சிறப்பு பாதுகாப்புபடைதான் மிகவும் பலமானது, உயர்ந்தது. ஒருவரின் உயிருக்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை பொறுத்து இதுபோன்ற பாதுகாப்புப்படையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்கின்றனர். முன்னாள் தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையான z+ தரவரிசை படைதான் பாதுகாப்பு அளித்தது. தற்போது அவரது மறைவை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட z+ பாதுகாப்புபடை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது என்று அறிக்கையும் வந்துவிட்டது. அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இது வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் z+ பாதுகாப்பில் 17 பேர் வரை இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இருக்கின்றனர். இந்த z+ பாதுகாப்பில் அப்படி என்ன வசதி இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். இந்த பாதுகாப்பின் கீழ் உள்ளவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்களுடன் சென்று பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும், இந்த படையில் 55 பாதுகாப்பாளர்கள் இருக்க அதனுள் 10 என்எஸ்ஜி  கமாண்டோக்கள் இருப்பார்கள், மற்றவர்கள் எல்லாம் காவல்துறைக்காரர்கள். என்எஸ்ஜி என்பது பிளாக் கேட் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கமாண்டோ படைதான்.  இவர்கள் பாதுகாப்பது அளிப்பதற்காக புதிதுபுதிதாக வந்திருக்கும் ஆயுதங்களை கூட வைத்திருக்கும் அளவிற்கு செல்வாக்கு உண்டாம்.

 

z பாதுகாப்பு, இது z+ க்கு அடுத்தபடியான பாதுகாப்பு சினிமா நட்சத்திரங்கள் முதல் இந்திய பிரபலங்கள் பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 22 பாதுகாப்பாளர்கள் இருப்பார்கள் அதனுள் 5 என்எஸ்ஜி கமாண்டோக்கள் உண்டு. ஐடிபிபி அல்லது சிஆர்பிஎப் போன்ற அமைப்புகளில் இருந்து இந்த பாதுகாப்புப்படைக்கு ஆட்கள் அனுப்பப்படுகிறது. மேலும் ஒரு காரும் தரப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் மற்றும் யோகா குரு ராம் தேவ் ஆகியோருக்கு இந்த z பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதாம். y பாதுகாப்பு, இது இந்திய சிறப்பு பாதுகாப்பில் மூன்றாம் கட்ட பாதுகாப்பு படை. இதில் மொத்தம் 11 பேர் பாதுகாப்பளிக்க இருக்கிறார்கள். அதனுள் ஒன்று அல்லது இரண்டு என்எஸ்ஜி கமாண்டோக்கள் இருப்பார்கள். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பு அளிக்கிறது இந்த z சிறப்பு படை. x படை, இதுதான் நான்காம் கட்ட சிறப்பு பாதுகாப்பு படை. இதில் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு ஆயுதம் ஏந்திய இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த பாதுகாப்பு படை தேவைப்படும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. 

 

protection


இந்த சிறப்பு பாதுகாப்பு படைகளையும் தாண்டி, எஸ்பிஜி என்னும் ஒரு பாதுகாப்பு படை இந்திய பிரதமருக்காகவும், முன்னாள் இந்திய பிரதமருக்காகவும் அளிக்கப்படுகிறது. பிளாக் கேட்ஸ் என்று சொல்லப்படும் என்எஸ்ஜி பாதுகாப்பு அமைப்பு பலர் இதில்தான் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை சம்பவத்திற்கு அடுத்து இந்த எஸ்பிஜி  சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. 

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.