Skip to main content

யாரிடம் எவ்வளவு சொத்து? பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

மிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப் படுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டமன்றத்திலும் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதன் மீது ஒப்புதல் தராமல் கிடப்பிலேயே வைத்திருந்தார் பன்வாரிலால்.

governor-modi

பொதுவாக, அரசு அனுப்பும் கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினால் அந்த கோப்புகளில் உள்ள பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தி இரண்டாவது முறையாக அதே கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைக்கும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்படி அனுப்பப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலளிக்க வேண்டும். இதற்கு காலவரம்பு ஏதுமில்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு, அமைச்சரவை தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டார் கவர்னர்.

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த ஒரு வழக்கில், கவர்னரின் செயல் குறித்த ஆதங்கத்தை வெளியிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார் கவர்னர் பன்வாரிலால். அவரது பயண விவரங்களை அறிந்து டென்ஷனில் இருக்கிறார் எடப்பாடி.

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, ""டெல்லியில் பிரதமர் மோடியை முதலில் சந்தித்தார் கவர்னர். பிரதமரின் செயலாளர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் உடன் இருந்தனர். பிரதமரிடம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து இரு வாரங்களுக்கு ஒரு முறை டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட் தொடர் பான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளேன் என சொல்லி, அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.

தமிழக அரசின் சீக்ரெட்ஸ் என எழுதப் பட்ட அந்த கோப்புகளில், முதல்வர் எடப்பாடி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் ரெக்கார்டுகள் இருப்பதை பிரதமரிடம் விவரித்த கவர்னர், எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பினாமிகள் குறித்த விபரங்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, ""பழனிச்சாமி அரசின் 4 ஆண்டுகால நிர்வாகத்தை உன்னிப்பாகத்தான் dddகவனித்து வருகிறேன். விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றிருக்கிறார் பிரதமர். ""தேர்தலில் தனித்து இயங்குவதற்காக பணத்தை பதுக்குகின்றனர். அதன் வழிகளை அடைக்க வேண்டும் என கடந்த மாதம் நீங்கள் அனுப்பிய ரிப்போர்ட்படிதான் தமிழகத்தில் வருமானவரித்துறை ஆக்ஷனில் இறங்கியுள்ளது'' என்றும் கவர்னரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர்.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் கோர்ட் சொல்லியிருப்பதை வருத்தப்பட்டு பேசிய கவர்னர், மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின்படிதான் அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்தார். நீதிமன்றங்கள் என்னை நோக்கி விமர்சனங்கள் செய்வதை தமிழக முதல்வரும் அமைச்சர்களும் ரசிக்கின்றனர் எனவும் சொல்லியிருக்கிறார். மென்மையாக சிரித்த பிரதமர் மோடி, பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகம்தான் நம் இலக்கு என சொல்லி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்திக்க கவர்னரை அனுப்பி வைத்தார்.

மோடியிடம் கூறியதையே அமித்ஷாவிடமும் ஒப்புவித்துள்ளார் கவர்னர். அப்போது, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை முற்றுபெறாமல் இருப்பதால் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) கருத்தைக் கேட்போம். அதன் பதிலைப் பொறுத்து முடிவெடுத்து, கோர்ட்டில் தெரிவிப்போம் என கவர்னருக்கு தெம்பூட்டியிருக்கிறார் அமித்ஷா.

மேலும், தமிழக அரசின் டெண்டர் ஊழல்கள் முதல் கொரோனா ஊழல்கள் வரை அனைத்தும் ஆராயப்படுவதையும், உங்களின் ரிப்போர்ட்டுகளுக்கும், ஐ.பி. (மத்திய உளவுத்துறை) அனுப்பும் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் கவர்னரிடம் அமித்ஷா பகிர்ந்துகொள்ள, ராஜ்பவனை எடப்பாடி மதிப்பதில்லை என்கிற தனது கோபத்தை அமீத்ஷாவிடம் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

மோடி மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, எடப்பாடிக்கு பயத்தை டெல்லி விரைவில் காட்டும் என்கிற நம்பிக்கையில் கவர்னரின் கோபம் தணிந்திருக்கிறது. இந்த நிலையில், கவர்னர் கொடுத்துள்ள எடப்பாடி அரசின் ஊழல் ரெக்கார்டுகளை ஆராயுமாறு மோடியின் செயலாளர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் ஒப்படைத்திருக்கிறது பிர தமர் அலுவலகம்‘என்று கவர்னரின் டெல்லி பயணத் தில் நடந்தவைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லிக்கு கவர்னர் அழைக்கப்பட்டதிலிருந்தே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முன்னாள் கேரளா கவர்னரும் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியுமான சதாசிவத்தின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. அதேபோல, பிரதமர் அலுவலகத்தில் தொடர்புவைத்துள்ள தனது சமூக தொழிலதிபர்கள் மூலமாகவும் முயற்சித்தார்.

அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கு அனுப் பும் நடவடிக்கைகள் டெல்லியில் துவங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் எடப்பாடியையும் மூத்த அமைச்சர்களையும் டென்சனாக்கியிருக்கிறது. இதனால் சில முக்கிய டெண்டர் விவகாரத்தில் கூட எடப்பாடியால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த விவகாரத்தை கிடப்பில் வைத்துவிட்டு டெல்லியை சமாதானப் படுத்தும் ரகசிய முயற்சிகளில் குதித்துள்ளார் என்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர்.




 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.