Advertisment

எம்.பி , எம்.எல்.ஏ.வில் எத்தனை சீட் கிடைக்கும் விசாரிக்கும் ஸ்டாலின்!

"அதுசரிப்பா, இந்தியா முழுக்க 7 கட்டமா நாடாளுமன்றத் தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கு. இதுவரை நடந்த 3 கட்ட வாக்குப் பதிவுகளில் மக்கள் மனநிலை எப்படி இருந்ததாம்?' "இதே கேள்வியைத்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தனக்குத் தெரிந்த அகில இந்திய அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கிட்டு இருக் காராம். 11-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில் அன்றே 91 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. 18-ந் தேதி தமிழகம், புதுவை உள்ளிட்ட 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க, 23-ந் தேதி 116 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடந்தது.

Advertisment

stalin

இப்படி இதுவரை 302 தொகுதி களில் மக்கள் தங்கள் ஜனநாயக ஆயுதமான வாக்குச்சீட்டை உற்சாகமாகப் பயன்படுத்தியிருக் காங்க. அவங்க மன நிலையை கவனிச்ச அகில இந்தியத் தலைவர்கள் பலரும் மக்களிடம் அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு மௌனச் சூறாவளி வீசியதை உணரமுடியுது. அந்த வகையில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரியுதுன்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்காங்க. இந்த நிலையில் தி.மு.க. தரப்பி லோ, மத்திய காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என் றும், தமிழ்நாட்டில் எம்.பி.- எம்.எல்.ஏ. இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமா இருக்கும்னு கணக்குப் போட்டிருக்காங்க. அதோடு தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றும் பலமான எதிர் பார்ப்பு நிலவுது. சபரீசனின் ஓ.எம்.ஜி. டீம் மூலம் 10-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் சீட் வாங்கிய தால், அவர்களிடமும் அமைச்சர் பதவி குறித்த எதிர்பார்ப்பு பலமாவே இருக்கு. இதற்கிடையே நெல்லை தி.மு.க. வேட்பாளரான ஞானதிரவியம், தேர்தலில் 50 "சி'யை அள்ளி இறைச்சேன். ஆனால் அதில் பெரும் பகுதி கீழ்மட்டம் வரை போய்ச் சேராமல், அங்கங்கே முடங்கிடிச்சி. தேர்தல் முடிவு வந்ததும், அறிவாலயத்தில் பஞ்சாயத்து வைப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்காராம்.''

vijayakanth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"நானும் தேர்தல் தொடர்பா ஒரு தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த், கடைசி நேரத்தில் ஒருநாள் பிரச்சாரத்துக்கு வந்தார். அவருடைய குடும்ப மருத்துவர்கள் தடுத் தும், அவர் பிரச்சாரக் களத்துக்கு வந்து மைக் கைப் பிடிச்சதால், தொண்டையில் கடும் இன் பெக்ஷன் ஏற்பட்டிருக்குதாம். அவர் சரியா பேசத் தொடங்குற நேரத்தில் அவரைப் பிரச்சாரத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போய் இப்படி இன்பெக்ஷ னுக்கு ஆளாக்கிட்டீங்களே. அவரை மேல்சிகிச் சைக்காக உடனடியா அமெரிக்காவுக்கு அழைச் சிக்கிட்டுப் போங்கன்னு மருத்துவர்கள் பிரேம லதாவை எச்சரிக்கை செஞ்சிருக்காங்களாம். 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இருக்கேன்னு பலத்த யோசனையில் இருக்குதாம் கேப்டன் குடும்பம்.

stalin 40 seats MLA parliment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe