Skip to main content

"எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி முதல்வரானாரே அது எப்படி?; கட்சியில் சேர்ந்த உடனே ஜெயலலிதா எம்பி ஆனாரே அது வாரிசு அரசியலில் வராதா...?" - கோவி. லெனின் அதிரடி

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

ரகத

 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டி பேசியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதியை குறிவைத்து அதிமுக, பாஜக தரப்பிலிருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். அவருக்கு அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதிமுகவில் இதுவரை அமைச்சரானவர்களுக்கு முதல்வரானவர்களுக்கு என்ன தகுதி இருந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது ஜெயலலிதா கட்சியில் இருந்தாரா? இல்லை அவர் ஆட்சியில் இருந்த முதல் இரண்டு முறை அவர் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லையே, 81ல் அதிமுகவுக்கு வருகிறார், 84ம் ஆண்டுக்குள் கட்சியில் அனைத்து விதமான முக்கிய பொறுப்புக்களிலும் நியமிக்கப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்குச் செல்கிறார்கள். 

 

இந்த இடைப்பட்ட காலங்களில் அவருக்கு என்ன தகுதி வந்துவிட்டது என்று நினைக்கிறீர்கள். அதைக்கூட விட்டுவிடலாம், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்றது, ஜானகி அம்மையார்தானே, அவர் எம்ஜிஆர் மறைவுக்கு முன்பு என்ன பொறுப்புக்களிலிருந்தார். ஏதாவது கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலோ அல்லது அமைச்சரவையில் அமைச்சராகவோ அவர் இருந்தாரா? அப்புறம் எப்படி அவர் முதல் அமைச்சராக மாறினார். 

 

இது எல்லாம் வாரிசு அரசியலில் சேராதா? எம்ஜிஆர் மறைந்த பிறகு தானும் உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று ஜெயலலிதா கூறினாரே? அதை இல்லை என்று எடப்பாடி சொல்வாரா? அதிமுகவின் வரலாற்றை இப்படி வைத்துக்கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் என்று எடப்பாடிக்குச் சொல்ல எவ்வித தார்மீக தகுதியும் இல்லை. எனவே வாரிசு என்பதை அடிப்படையாக வைத்து இவரை விமர்சனம் செய்பவர்கள் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற ஒன்றாகவே கருத முடியும். 

 

 

Next Story

"அதிமுகவுக்கு துணிவு இருக்கா... ஜெயலலிதாவை வாரிசு இல்லை என்று சொல்வதற்கு..." - கோவி. லெனின் கேள்வி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

ிு

 

தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்களிடம் கேட்டபோது, "உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இவர்கள் தலைவியாகச் சொல்கிறார்களே, அந்த ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் பதவி வாங்குவதற்கு என்ன தகுதி இருந்தது என்பதை முதலில் பார்க்க வேண்டும். 

 

திமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1972 இல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது ஜெயலலிதா கட்சியிலிருந்தாரா? இல்லை. அவர் ஆட்சியிலிருந்த 1977,1980 என இரண்டு முறையும் அவர் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லையே, 81 இல் அதிமுகவுக்கு வருகிறார். 84 ஆம் ஆண்டுக்குள் கட்சியில் அனைத்து விதமான முக்கியப் பொறுப்புக்களிலும் நியமிக்கப்படுகிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்குச் செல்கிறார். இந்த மூன்று வருடங்களில் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த ஞானியாக அவர் வந்துவிட்டாரா? இந்த இடைப்பட்ட காலங்களில் அவருக்கு என்ன தகுதி வந்துவிட்டது என்று அதிமுக தலைவர்கள் சொல்வார்களா? அதைக்கூட விட்டுவிடலாம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்றது. ஜானகி அம்மையார்தானே. அவர் எம்ஜிஆர் மறைவுக்கு முன்பு என்ன பொறுப்புக்களில் இருந்தார். ஏதாவது கட்சியின் முக்கியப் பொறுப்புக்களிலோ அல்லது அமைச்சரவையில் அமைச்சராகவோ அவர் இருந்தாரா? அப்புறம் எப்படி அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

 

இது எல்லாம் வாரிசு அரசியலில் சேராதா? எம்ஜிஆர் மறைந்த பிறகு தானும் உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று ஜெயலலிதா கூறினாரே? அதை இல்லை என்று எடப்பாடி சொல்வாரா? அதிமுகவின் வரலாற்றை இப்படி வைத்துக்கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் என்று எடப்பாடிக்குச் சொல்ல எவ்வித தார்மீக தகுதியும் இல்லை. உதயநிதி தற்போது ஒரு புதிய பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் துறை ரீதியாக ஏதாவது ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அதை விமர்சனம் செய்யுங்கள். அது எதிர்க்கட்சியாக ஆரோக்கியமான போக்கு. அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட திமுக வெறுப்பின் காரணமாக அவரை விமர்சனம் செய்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார். 

 

 

Next Story

"நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம்; நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை; இதை பாஜகவால் தாங்க முடியவில்லை..." - கோவி. லெனின் பேட்டி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

xf

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். முத்தமிழ் அறிஞர் மகனான ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியைத் திராவிட மாடல் என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அதற்கு வேறு தமிழ்ப் பெயரைக் கொண்டு அழைக்கலாம் அல்லவா என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பான கேள்வியைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கோவி. லெனின் அவர்களிடம் முன்வைத்தோம். 

 

அதில் பேசிய அவர், " தமிழிசை அவர்கள் தற்போது என்னவாக இருக்கிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர். இதற்கு முன்பு முதலில் என்ன பதவியில் அமர்த்தப்பட்டார். தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக உள்ள தமிழிசை தன் பெயருக்கு முன்னாள் என்ன போடுகிறார். டாக்டர் தமிழிசை என்று போடுகிறாரா? இல்லை மருத்துவர் தமிழிசை என்று போடுகிறாரா என்று பார்க்க வேண்டும். டாக்டர் என்ற வார்த்தை தமிழா? இவர்களுக்குத் திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்ல முடியவில்லை. அதனால் வேறு எந்த வகையில் இதைக் குறை சொல்லலாம் என்று பார்க்கிறார்கள். இதே மாதிரியான உப்பு சப்பில்லாத விஷயங்களை முன்வைத்துப் பேசுகிறார்கள். 

 

திராவிட மாடல் என்று ஏன் சொல்ல வேண்டும், அதுவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இவ்வாறு சொல்லலாமா என்று தமிழிசை அக்கா கேட்கிறார்கள். இவர்கள் வாயைத் திறந்தால் குஜராத் மாடல் என்கிறார்களே, அதனைக் குஜராத்தி மொழியில் சொல்லலாமே? இதைத் தமிழிசை அக்காவுக்குத் தெரியாது. அவரது கவனத்துக்கு வராமல் போய்விட்டதா? இவர்களுக்கு எதுவும் கவலை இல்லை. புயல் மழை எது வந்தாலும் இந்த திராவிட மாடல் ஆட்சி சமாளித்து ஆட்சி நடத்துகிறது. நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம். நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை., இதை பாஜகவால் தாங்க முடியவில்லை. எனவே இவர்கள் அது சரியில்லை இது சரியில்லை என்று அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்" என்றார்.