Advertisment

"கட்சியில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை எதிர்த்து எப்படி காயத்ரி ரகுராம் கேள்வி கேட்கலாம்; அவரை நீக்கியது சரிதான்..." - காந்தராஜ் பேச்சு

kk

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மைபிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைகட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கியுள்ளார்.

Advertisment

இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, " காயத்ரி ரகுராமை நீக்கியது சரிதான், அவங்க கட்சியில் காலங்காலமாக நடப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது. கட்சியின் பழக்க வழக்கங்களை எதிர்த்துக் கிண்டல் செய்தால் அதனை எப்படிப் பொறுத்துக்கொள்வார்கள்.

Advertisment

கே.டி.ராகவன் என்ன செய்தார்.அது அவங்க கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதானே? அதைக் கிண்டல் செய்தால் எப்படி?இது கட்சி விரோதம் தானே! கே.டி.ராகவன் கட்சிக்கு விரோதமாகவா நடந்தார். அவங்க கட்சியில் பெண்களும் ஆண்களும் ஜாலியா இருப்பாங்க.இது அவங்க கட்சியோடகொள்ளை வெளிப்பாடு. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் வெளியே அனுப்பாமல் என்ன செய்வார்கள். திருச்சிசூர்யாகே.டி ராகவன் மாதிரி ஆக முயற்சி பண்ணியிருக்கிறார். அதைப் போய் கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள். இது அப்பட்டமான கட்சி விரோத நடவடிக்கை தானே? அவ்வாறு தான் அவர்கள் பார்த்துள்ளார்கள்.

இதுதான் பாஜக.அன்னைக்கு கே.டி.ராகவன் செய்ததுக்கு பாஜக மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் என்ன போராட்டம் நடத்தினார்கள். சும்மாதானே இருந்தார்கள். அப்படி என்றால் மகளிர் அணி அதை அங்கீகாரம் செய்துள்ளது என்றுதானே அர்த்தம். மகளிர் அணியே ஏற்றுக்கொண்ட அந்த விஷயத்தை எதிர்த்து அண்ணாமலை ஏன் இந்த அளவுக்கு குதிக்கிறார். யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட யோரோ பேசினத்துக்கு இவர் ஏன் குதிக்கிறாரு? இவருக்கு ஏன் இப்படி ஒரு அக்கறை, வானதி சீனிவாசனுக்கு வராத அப்படி ஒரு அக்கறை இவருக்கு ஏன் பொங்கி வருகிறது. எந்த மகளிருக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே இவரு பொங்கிடுவாரா?

ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர் இப்படிதான் பொங்குவாரா? ஆண்களுக்கு என்றால் ஒண்ணுமே சத்தம் வரமாட்டேன் என்கிறதே, பெண்கள் என்றால் உடனே கோபம் வருகிறதே அது ஏன்? பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தான் இவர் வாய் திறப்பாரா? அப்போது மட்டும் கண்டும் காணாமல் இருந்து விடுவதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை. அவரை நீக்கியது என்பது சரியானது. அந்தக் கட்சியில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது. அதான் நீக்கியுள்ளார்கள். இது அவர்கள் கட்சியின் உள் விவகாரமாகத்தான் பார்க்க வேண்டும்." என்றார்.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe