ADVERTISEMENT

துரோகத்தால் வீழ்ந்த மம்தா... மக்களவை தேர்தலில் நடந்த சதி...

12:12 PM May 26, 2019 | kirubahar@nakk…

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ருசித்த பாஜக குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. இப்படி பல மாநிலங்களை க்ளீன்ஸ்வீப் செய்திருந்தாலும் அவற்றை விட பாஜக -விற்கு அதிக மகிழ்ச்சியை தருவது மேற்கு வங்கத்தில் அந்த கட்சி பிடித்த இரண்டாவது இடம் தான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மம்தாவின் கோட்டையாகவும், பாஜக நுழைய முடியாததாகவும் இருந்த ஒரு மாநிலம் மேற்கு வங்கம். கம்யூனிஸ்ட்களும், திரிணாமூல் காங்கிரஸும் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கு வங்கம் எனும் கோட்டையில் தனது முதல் அடியை அழுத்தமாக எடுத்து வைத்துள்ளது பாஜக.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், சிபிஎம் 2, காங்கிரஸ் 4, பாஜக 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 17 சதவீத வாக்குகளை வென்ற பாஜக, இம்முறை 2ஆம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. இப்படி மம்தாவிற்கு சமமாக பாஜக வெறும் ஓரிரண்டு ஆண்டுகளில் மாறிவிடவில்லை. ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு, அவை கிராமம் கிராமமாக கொண்டு செல்லப்பட்டு. பள்ளி குழந்தைகள் வரை ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பல ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது பாஜக.

அதுமட்டுமல்லாமல் அந்த மாநிலத்தில் உள்ள 27 சதவீத இஸ்லாமிய வாக்குகள் எப்போதும் மம்தா கட்சிக்கே கிடைக்கும். எனவே இஸ்லாமியர்களை காக்கும் ரட்சகனாக திரிணாமூல் கட்சி தன்னை காட்டிக் கொண்டது. அதனால் பெரும்பான்மை இந்துக்களின் முழு கோபமும் திரிணாமூல் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டது. இதனை சரியாக பயன்படுத்திய பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மோடி ஆகியோர் தங்களது வலிமையான பிரச்சாரங்கள் மூலம் மம்தா எதிர்ப்பு வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பினர்.

ஆனால் இந்த தேர்தல் பாஜகவுக்கு கை கொடுத்தது அவர்களின் உழைப்பு மட்டுமல்ல, மம்தா கட்சியினரின் நம்பிக்கை துரோகமும் தான். மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்கள் மத்தியில் அண்மை காலங்களில் நடந்து வரும் பனிப்போரும் இந்த தோல்விக்கு ஒரு காரணம். கட்சிக்குள் கோஷ்டி மோதல் அதிகரித்ததால், அதிருப்தி அடைந்த தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டு பாஜக.வுக்கு வாக்களித்துவிட்டனர் என அக்கட்சி மூத்த தலைவர் ஒருவரே தெரிவித்தார்.

ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் கோஷ்டி மோதல் நடக்க மற்றொரு பக்கம் முகுல் ராய் போன்ற பல முக்கிய தலைவர்கள் மம்தா கட்சியை விடுத்தது பாஜகவுக்கு மாறினர். எனவே மம்தாவின் வியூகங்களை சரியாக அறிந்த இவர்கள் மம்தாவை தோற்கடிக்கும் யுக்திகளையும் சரியாக கையாண்டனர். இதன் வெளிப்பாடாகவே மேற்கு வங்கத்தில் ஒற்றை இலக்கத்தில் வாக்கு வங்கி வைத்திருந்த பாஜக இன்று 40 சதவீத வாக்குகளை தனது வசமாக்கியிருக்கிறது. பாஜக தொண்டர்களின் உழைப்பு , சொந்த கட்சியினரின் துரோகம் என பலவற்றால் தனது வாக்கு வங்கி சரிந்தாலும், அடுத்த தேர்தலுக்குள் அதனையெல்லாம் சரி செய்து மீண்டும் மம்தா வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரின் உண்மை விசுவாசிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT