பொக்கிஷம், புதையல் என்பது தங்கங்கள், வைரங்கள் மட்டுமல்ல நம் வீட்டின் பரண் மேல் தூசி தட்டி தூங்கிக் கிடக்கும் புத்தகங்கள் கூட பின்னாளில் பொக்கிஷம் ஆகலாம் என சிந்திக்க வைத்திருக்கிறது அசல் சூப்பர்மேன் காமிக் புத்தகம். அதுவும் கிடைத்தது இந்திய மதிப்பில் 81 கோடியாம்.
Advertisment
2கே, ஜென்சி என போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 80ஸ், 90ஸ் கிட்ஸின் காமிக் உலகம் என்பது மிகவும் பரந்து விரிந்தது. இணையமே இல்லாத அந்த நேரத்தில் சிறுவர்களுக்கு அம்புலி மாமா, மாயாவி உள்ளிட்ட காமிக்ஸ்களும், பெரியவர்களுக்கு ராஜேஷ்குமாரின் திகில் நாவல்களும்தான் தான் அன்றைய வீடுகளின் பிரிண்ட் மீடியா எண்டெர்டெயினர்கள். இதேபோல் வீட்டில் கிடந்த பழைய காமிக்ஸ் புத்தகம் ஒன்று 81 கோடியை கொடுக்கும் பொக்கிஷமாக மாறியிருக்கும் சம்பவம் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்திருக்கிறது.
Advertisment
1939 ஆம் ஆண்டு DC காமிக்ஸ் நிறுவனத்தால் அச்சிடப்பட்ட அசல் 'சூப்பர் மேன்' நம்பர் 1 காமிக் புத்தகம், கடந்த வியாழக்கிழமை உலக சாதனையாக $9.12 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இந்திய மதிப்பில் 81,40,46,640.00 ரூபாய்க்கு விற்றுள்ளது. ஒரு காமிக் புத்தகம் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுதான் முதல் முறை என ஹெரிடேஜ் ஏலங்கள் தெரிவித்துள்ளது. இதில் புத்தகத்தை விற்றவர் மற்றும் வாங்கியவரின் தகவல்களை வெளியிட ஏல நிறுவனம் மறுத்துள்ளது.

 

119
Heritage auction made possible by the non-existent 'Superman' for Rs 81 crore Photograph: (super man)
Advertisment
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவில் மூன்று குழந்தைகளுடன் ஒரு தாய் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வீட்டை விற்கும் நிலை வந்துள்ளது. ஆனாலும் அந்த வீட்டில் ஒரு மதிப்புமிக்க காமிக் புத்தகத் தொகுப்பு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தன் குழந்தைகளிடம் தாய் சொல்லியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது 50 மற்றும் 60 வயதுகளில் உள்ள அந்த சகோதரர்கள் தாய் சொன்னதை மறக்கமால் நினைவுபடுத்தி அந்த வீட்டிற்கு சென்று சிதிலமடைந்த தாயின் அறையில் தேடியுள்ளனர். அப்படி தேடுகையில் 1939 ஆம் ஆண்டு DC காமிக்ஸ் நிறுவனத்தால் அச்சிடப்பட்ட அசல் 'சூப்பர் மேன்' நம்பர் 1 காமிக் புத்தகத்தை கண்டுபிடித்தனர். அப்போது குழந்தைகளின் மாமாவால் அந்த புத்தகம் வாங்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக டெக்சாஸை தலைமையகமாக கொண்ட அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெரிடேஜ் ஏலங்களின் துணைத் தலைவர் ஆலன் இதுகுறித்து கூறுகையில், ''ஒரு அறையில், ஒரு பெட்டியில் இந்த புத்தகம் இருந்துள்ளது. எளிதாக தூக்கி எறியப்பட வாய்ப்புகள் இருந்தும் தப்பியுள்ளது. ஆயிரம் விதங்களில் எளிதாக இந்த காமிக்ஸ் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் செய்தித்தாள்கள், தூசி மற்றும் சிலந்தி வலைகளின் அடுக்குகளுக்கு அடியில் ஒரு அட்டைப் பெட்டியில் பத்திரமாக இருந்ததால் இதனை ஆண்டுகள் பாதுகாப்புடன் இருந்துள்ளது.

 

118
Heritage auction made possible by the non-existent 'Superman' for Rs 81 crore Photograph: (super man)
இதற்கு முன்னரே உலகின் மிக விலையுயர்ந்த காமிக் புத்தகத்திற்கான சாதனை படைக்கப்பட்டது. முதன்முதலில் சூப்பர்மேனை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆக்ஷன் காமிக்ஸ் எண்.1  $6 மில்லியனுக்கு விற்கப்பட்டது.  2022 ஆம் ஆண்டில், மற்றொரு சூப்பர்மேன் எண். 1 $5.3 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
இந்தப் பிரதிக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. குளிர்ந்த வடக்கு கலிபோர்னியா காலநிலை அதைப் பாதுகாக்க உதவிய இருக்கிறது. துடிப்பான வண்ணங்கள் மற்றும் தெளிவான மூலைகளுடன் இருந்தது. இந்த பிரதிக்கு காமிக்ஸ் தரப்படுத்தல் நிறுவனமான CGC 10க்கு 9.0 மதிப்பீடு அளித்துள்ளது. காரணம் புத்தகத்தின் தேய்மானம் மற்றும் வயது ஆனதற்கு சிறிதளவு அறிகுறிகள் மட்டுமே இருந்தால் இந்த மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
எதுவுமே பழைய காகிதம் அல்ல... காலப்போக்கில் எல்லாமே பொக்கிஷம் தான் என  உணர்த்தியுள்ளது இந்த சூப்பர் மேன் காமிக்ஸ் 81 கோடிக்கு ஏலம் போன சம்பவம்.