"இன்னும் அவர் ரொம்ப நாள் நம்முடன் இருந்திருக்கலாம்" - நடிகர் மௌலி நெகிழ்ச்சி

publive-image

மறைந்த நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனின்70- வது பிறந்தநாளையொட்டி, ஸ்ரீ தியாக ப்ரஹ்மா கான சபா மற்றும் கிரேஸி கிரியேஷன்ஸ் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மௌலி, "மோகனின் விருது எனக்கு அளிக்கப்பட்டதற்காகஅவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோகன் கூட இருந்துஅவரது கையால் விருதைப் பெற்றிருந்தால்இன்னும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்திருக்கும்.

மோகனும்நானும் அமர்ந்து பேசாத விஷயமே இருக்காது. அதேபோல், கமல்ஹாசன் அலுவலகத்துக்கு செல்வதாக இருந்தாலும் ஒன்றாகத்தான் செல்வோம். நான் கொட்டிவாக்கத்தில் இருக்கும்போது கூடஅங்கிருந்து வந்து மோகனை அழைத்துக்கொண்டு செல்வேன். நான் மோகனை ரெடி ஆகிட்டு வெளியே வந்துவிடு என்று கூறுவேன். அதற்கு மோகன் நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்பார். வெளியில் சாப்பிடவே மாட்டார்.

இன்னும் அவர் ரொம்ப நாள் நம்முடன் இருந்திருக்கலாம். அவரது மறைவு அதிர்ச்சியில் இருந்துஇன்னும் மீளவில்லை. கூடவே இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

actor Speech
இதையும் படியுங்கள்
Subscribe