Advertisment

தயாராகிறது 10 தூக்குக்கயிறுகள்! பட்டியலில் நிர்பயா குற்றவாளிகள்?

h

தெலுங்கானா பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதும், குற்ற வாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைத்துவிட்டதை தெலுங்கானா மக்கள் கொண்டாடித்தீர்த்தனர். ஆனால், ஏழு ஆண்டுகள் ஆகியும் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது என்ற ஆதங்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

Advertisment

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. 10 தூக்கு கயிறுகள் தயாராகிக்கொண்டிருப்பதை வைத்துதான் அந்த பேச்சு எழுந்திக்கிறது. பீகாரில் உள்ள பக்சர் சிறையில் தற்போது 10 தூக்குக்கயிறுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறுகள் தயாரிக்கப்படுகிறது. அதில், பீகாரில் உள்ள பக்சர் சிறை குறிப்பிடத்தக்கது. இந்த சிறையில், வரும் 14ம் தேதிக்குள் 10 கயிறுகள் தயாரித்து தரும்படி ஆர்டர் தரப்பட்டுள்ளது. அதனால், 10 கயிறுகள் தயாராகி வருகிறது. தயாரிக்கப்படும் தூக்கு கயிறுகளை உடனடியாக பயன்படுத்திவிட வேண்டுமாம். நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் கயிற்றின் உறுதித்தன்மை போய்விடுமாம். ஆகவே, உடனடியாக 10 பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப் படவிருக்கிறது. அப்பட்டியலில், நிர்பயா குற்றவாளிகளும் அடங்குவார்கள் என்று பேசப்படுகிறது.

ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதால் நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.

Advertisment

Hanging rope
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe