Skip to main content

ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் - பிரபல ஹேக்கர் சிவ பாலாஜி பதில்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

வாட்ஸ் அப் மூலம் பெகாசஸ் என்ற வைரஸை பரப்பி இந்தியாவில் பலரது தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் கடந்த வாரம் வெளியானது. இதனை வாட்ஸ் அப் நிறுவனமும் ஒத்துக்கொண்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பன பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார் பிரபல ஹேக்கர் சிவ பாலாஜி. வைரஸ் ஊடுறுவல் பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு அவரின் விரிவான பதிலை பதிலை இங்கு காணலாம்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருனை வைத்து இந்தியாவில் முக்கியமானவர்களாக கருத்தப்படும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் முதலானவர்களின் செல்போன் தகவல்களை உளவு பார்ப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இந்த பெகாசஸ் என்பது ஒரு வைரஸ். இதை இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனம் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு தகவல்களை கொடுக்கும் ஒரு உளவு அமைப்பு. அவர்கள் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஊடுறுவலை செய்துள்ளார்கள். அவர்களுக்கு கூட யார்யார் முழுவதுமாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியாது. இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் மக்கள் இதனால்vபாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சாதாரண மக்களை அவர்கள் கண்காணிக்கப் போவதில்லை. அவர்களுக்கு தேவையான முக்கிய நபர்களை டார்கெட் செய்து அவர்களின் வாட்ஸ் அப் தகவல்களை ஒட்டுக்கேட்பார்கள். பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பதாக பிரச்னை எழுந்ததை போன்று, பிரதமர் முதல் எடப்பாடி வரை இந்த மாதிரி ஒட்டுகேட்பு சம்பவங்கள் நடக்கலாம். அவர்களின் பேச்சை கவனித்தால் ஒட்டுமொத்த அரசின் பேச்சை கேட்பது போலதானே?
 

dg



அடுத்து அவர்களின் திட்டம் என்ன என்பதை எறிந்து அதனை மற்ற நபர்களுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ தகவல்களை தெரிவித்து ஆதாயம் அடையலாமே? அவர்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு இதனை பயன்படுத்துவார்கள் என்பது இனிவரும் காலங்களில் படிப்படியாக தெரியவரும்.  இதை ஆறுமாதம் முன்பே வாட்ஸ் அப் நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்த மாதிரியான ஹேங்கிங் வேலைகளில் ஈடுபடுவது வழங்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த விஷயத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் ஏன் பயந்தது என்றால், இந்த முறை தகவல்களை திருடியது இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு துறைக்கு செய்திகளை தரும் நிறுவனம். அதனால், இதன் காரணமாக புதிய அரசியல் சிக்கல்களோ அல்லது போர்களோ வருவதற்கு நாம் காரணமாக இருந்து விட போகிறோம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக இந்த விஷயஙங்களை முன் கூட்டியே சொல்லிவிட்டார்கள்.

சமூக செயற்பாட்டாளர்களின் இமெயிலில் தவறான செய்திகளை அனுப்பி அவர்களை வழக்கில் சிக்கவைக்க இது உதவிபுரியம் என்று சொல்கிறார்களே?

இந்த வைரஸ்களை வைத்துத்துதான் ஒருவருக்கு சிக்கலான செய்திகளை அனுப்ப வேண்டும் என்ற தேவையில்லை. ஒருவருடைய இமெயில் அட்ரெஸ் தெரிந்தல் போதுமானது. அவருக்கு யாரும் எந்த மாதிரியான தகவல்களையும் அனுப்ப முடியும். அந்த மாதிரியான வைரஸ்களை உருவாக்குவர்கள் இந்த மாதிரியான தகவல்களை அரசு கேட்டுள்ளது என்று சொல்கிறார்களா? அப்படி ஏதும் இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் வேறு. பெரிய நாடுகளின் அரசியல் தலைவர்களின் வாட்ஸ் அப் தகவல்களை கிடைக்கு வகையில் அவர்களுக்கு ஸ்சோஸ் இருப்பதால் அவர்கள் அதனை வைத்து என்ன செய்வது என்றுதான் பார்ப்பார்கள். இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு அவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது. எனெனில் அனைத்து நாடுகளுமே தற்போது சூப்பர் பவர் நாடுகளாக வரவேண்டும் என்று விரும்புகின்ற நிலையில், அதில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் நாம் ஈடுபடலாம் என்பதை மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும்.

இந்த மாதிரியான ஹேக்கிங்கில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது?


முதலில் செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுப்பதை நிறுத்திவிடுங்கள். எனெனில் சில வினாடிகளில் உங்கள் செல்போனை கண்காணிக்கும் வைரஸ்களை அதில் இன்ஸ்டால் செய்துவிட முடியும். ஆகையால் முகம் தெரியாத நபர்களிடம் செல்போன்களை தருவதை தடுப்பதன் மூலம் இதனை குறைக்கலாம். அடுத்து, தேவையில்லாத லிங்களில் இருந்து உங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களின் தகவல்கள் மூன்றாவது நபருக்கு செல்ல வாய்ப்பு அதிகம். இதன் மூலம் உங்கள் தொலைப்பேசியில் என்ன டைப் செய்கிறீர்கள் என்று கூட அவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். உங்களின் செல்போன் தகவல்களை முழுவதுமாக இதன் மூலம் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். ஆகையால் நாம் விழிப்பாக இருப்பது மட்டுமே இந்த மாதிரியான ஹேக்கில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வதற்கு வழியை ஏற்படுத்தும்.  

 

 

 

 

 

 

Next Story

#GO BACK SADIST MODI எங்கிருந்து வந்தது தெரியுமா... தரவுகளை வெளியிட்ட ஃப்ரான்ஸ் ஹேக்கர்...

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

hashtag


 

எலியாட் ஆல்டெர்சன் என்ற பெயர் முன்பே நமக்கு அறிமுகமானதுதான். இந்த பெயருக்கு பின் இருக்கும் ஹேக்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், உங்கள் 13 அடி பாதுகாப்பு அமைப்பு சுவற்றின் மீது உங்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை வெளியிடுங்கள் என சவால் விட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, தனது ஆதார் எண்ணையும் சேர்த்து பதிவிட்டார். மேலும் அவர், “நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முடிந்தால் என் ஆதார் எண்ணை வைத்து எனக்கு ஏதாவது தீங்கு விளைவிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள் பார்ப்போம்” என பதில் கூறினார்.
 

ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே எலியாட் ஆல்டர்சன் என்ற பெயர் கொண்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, தொலைபேசி எண், பான் எண், பிறந்தநாள், மற்றும் அவருடைய வாட்ஸ் அப் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களையும் வரிசையாக பதிவிட்டார். அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் லிங் செய்யப்படவில்லை என்றும் ட்வீட் போட்டுள்ளார். இதற்கு அந்த தொலைபேசி எண் என்னுடையதல்ல என டிராய் தலைவர் மறுத்துகூற, அது உங்களுடைய உதவியாளருடையது என அந்த மர்மநபரிடமிருந்து பதில் ட்வீட் வந்தது. மேலும் அவர் “நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணை பதிவிடுவது நல்ல முறை அல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள் என நான் நம்புகிறேன், உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியுள்ளார். இது குறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடி உங்கள் ஆதார் எண்ணை பதிவிடமுடியுமா? (உங்களிடம் இருந்தால்) எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், “நான் ஆதாருக்கு எதிரானவன் கிடையாது. ஆதாரை யாரும் எதுவும் செய்யமுடியாது, அது மிகமிக பாதுகாப்பானது என்று கூறுபவர்களுக்குதான் நான் எதிரானவன்.” எனவும் கூறியுள்ளார்.


 

hashtag


 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பாப்டிசைட் என்பவர்தான் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் இந்தத் தகவல்களை வெளியிட்டதாக அப்போது கூறப்பட்டது. 
 

தற்போது இவர்தான் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக் குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த 6ம்தேதி நான் கோ பேக் சேடிஸ்ட் மோடி என்ற ஹேஷ்டேக்கை கவனிக்க தொடங்கிவிட்டேன் என பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, ட்வீட்களின் வருகை அதிகமாக இருந்தபோது நான் கவனித்தேன், ஒரு நிமிடத்திற்கு 250 ட்வீட்களும், ஒரு மணிநேரத்திற்கு 12000 ட்வீட்களும் வருகின்றன. இதில் 41174 ட்வீட்கள் #gobacksadistmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 16818 ட்வீட்கள் #gobackmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 1631   #gobackmodii என்ற ஹேஷ்டெக்கிலும் வந்துள்ளது என அதன் வரிசைகளை குறிப்பிட்டிருந்தார். 
 

அதன்பின் மொத்தம் வந்த 68544 ட்வீட்களில் 30% பேர் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து வைத்திருந்தனர். அதாவது 20629 பேரின் லொகேஷன்களை வைத்து பார்க்கும்போது, பெரும்பான்மையானவை தமிழ்நாடு மற்றும் சென்னையிலிருந்தே வந்துள்ளன. அதற்கடுத்து அதிக ட்வீட்கள் முறையே பெங்களூரிலிருந்தும், டெல்லியிலிருந்தும் வந்துள்ளன. மேலும் இந்தியா முழுமைக்குமிருந்தும் கிட்டதட்ட 2590 ட்வீட்கள் வந்துள்ளன. இதற்கடுத்து அவர் எந்த கணக்கிலிருந்து அதிக ட்வீட்கள் வந்தன என்பது விஷயங்களை வெளியிட்டார். 


 

hashtag




கடைசியாக அவர் கூறியது இதுதான்... மன்னிக்கவும், உங்கள் கனவுகளை கலைத்துவிட்டேன். இந்த ஹேஷ்டேக்குகள் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை. நான் இதோடு முடித்துக்கொள்கிறேன். 
 

ஆனால் இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது அந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகமாக பரவியுள்ளது. இது மக்கள் கொந்தளிப்பின் வெளிப்பாடு. தமிழ்நாடு பிரச்சனைகளை சந்தித்தபோதெல்லாம் வராதவர், தேர்தல் நேரங்களில் மட்டும் வரும்போது கோ பேக் மோடி உலக ட்ரெண்ட் ஆனாலும் அது ஆச்சர்யம் இல்லை. 

 

 

 

Next Story

தகவல் மோசடியில் லிங்க்டு-இன் நிறுவனம்...!

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் தகவல் மோசடியில் சிக்கியது. அதன் பின் கடந்த வாரம் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இ-மெயில் தொடர்பான விவரங்கள் வெளியேறியுள்ளது என்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது லிங்க்டு-இன் நிறுவனம் தகவல் மோசடியில் சிக்கியுள்ளது. 

 

 

kk

 

ஐயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் லிங்க்டு-இன் நிறுவனம் இ-மெயிலை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என கண்டுபிடித்துள்ளது. இதில் 1.8 கோடி இ-மெயில்கள் தவறாக பயன்படுத்தியுள்ளது என்றும், அது எதுவும் லிங்க்டு-இன் பயன்பாட்டாளர்களின் கணக்கு இல்லை என்றும் ஐயர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.