Advertisment

பொய் சொல்வதற்கு எச்.ராஜா கூச்சப்படவே மாட்டாரா???

பொய் சொல்வதில் பாஜக தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடியே மிகச்சாதாரணமாக பொய்யான தகவல்களை சொல்லிவிட்டு, அது பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் எந்தக் கவலையும் படமாட்டார்.

Advertisment

h raja

பொய் சொல்வதில் அவரை மிஞ்ச வேண்டும் என்று பாஜகவின் முதல்வர்களும், மாநில அளவிலான தலைவர்களும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் பொய்கள் காமெடியாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பொழுபோக்கு அம்சமாகி வருவதும் அவ்வப்போது நடப்பதுதான்.

Advertisment

தமிழகத்தில் எச்.ராஜா வாயைத் திறந்தாலே பொய்தான் என்கிற அளவுக்கு புகழ்பெற்றுவிட்டார். இதற்கு முன் எத்தனையோ பொய்களில் அம்பலப்பட்டிருக்கிறார். இவர் சொல்லும் பொய்கள் பல சமயங்களில் மிகவும் கீழ்த்தரமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மிரட்டும் வகையிலும் இருந்திருக்கின்றன.

இன்று அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் அபத்தமானது. அதாவது, பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட இம்ரான்கான் தனது கட்சி வெற்றிபெற்றால் பாகிஸ்தானில் மோடியைப் போல ஆட்சியைத் தருவேன் என்று பிரச்சாரம் செய்தார் என்றும், அதனால் அவர் கட்சி அங்கு வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் எச்.ராஜா கூறியிருக்கிறார்.

இதிலெல்லாம் மோடிக்கு என்ன பெருமை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. ஆனால், இம்ரான் தனது தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் போக்கிற்கு தீர்வு காண்பதில் மோடிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றுதான் பேசியிருக்கிறார். அவர் மோடியை விமர்சனம் செய்து பேசிய பேச்சை ஆதாரமாக காட்டினாலும் எச்.ராஜா தனது தவறை ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்தாலும், அவருடைய பொய்யை அம்பலப்படுத்துவது நமது கடமை.

h Raja

மோடியும் நவாஸ் செரீபும் நட்பாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ராணுவத்துக்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், நான் பாகிஸ்தானின் நலனுக்காக மட்டுமே வேலை செய்வேன் என்றும் இம்ரான்கான் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு குறித்து இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் முதல் பக்கத்திலேயே பாக்ஸ் கட்டிப் போட்டிக்கிறார்கள். இதையெல்லாம் எச்.ராஜா பாப்பாரா பார்க்க மாட்டாரா தெரியவில்லை.

இதுபோலத்தான் சில நாட்களுக்கு முன், புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பத்திரிகை ஒன்றில் வந்த கவிதை வரிகளை சுட்டிக்காட்டினார். அதாவது, பெண்களின் மாதவிடாய்க் காலத்தை தீட்டுக்காலம் என்று சொல்லி கோவிலுக்குள் அனுமதி மறுக்கிறீர்களே, பெண் தெய்வங்கள் தங்கள் தீட்டுக் காலங்களில் கோவிலில் குடியிருக்காதா என்று யாரோ எழுதிய கவிதை வரிகளை கார்த்திகேயன் எடுத்தாண்டார். இதை அவருக்கு எதிராக ராஜா திருப்பிவிட்டார். கார்த்திகேயனை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று புதியதலைமுறை நிர்வாகத்துக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். அதாவது மதவாதிகளால் எளிதில் பதில்சொல்ல முடியாத கேள்விகள் எழும்போது, அதைத் திசைதிருப்ப இதுபோன்ற மிரட்டல்களை பதிவாக்குவது எச்.ராஜாவின் வழக்கம். ஆனால், கார்த்திகேயன் பயன்படுத்தியது வேறொருவரின் கவிதை என்று உடனடியாக தெளிவுபடுத்திய பிறகும் எச்.ராஜா தனது பதிவை நீக்கவில்லை.

பாஜகவின் பிறவிக்குணமே கோயபல்ஸிடம் பெற்ற பொய்ப்பிரச்சாரம்தான். அப்படி இருக்கும்போது எச்.ராஜா எப்படி தன்னை மாற்றிக் கொள்வார்?

H Raja Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe