Skip to main content

சரளை மண்ணிலும் திராட்சை.! சாதிக்கும் செட்டிநாடு..!!!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

    கல்வி, கட்டிடக்கலை, ஊருணி மற்றும் சாப்பாடு என தனித்துவ அடையாளங்களைப் பதித்தது செட்டிநாடு, இயற்கையிலேயே செம்பாறாங்கல் எனப்படும் ஒரு வகை கல் இந்தப் பகுதியில் அதிகம். செட்டிநாட்டின் ஊருக்கேற்ப செம்மண், களிமண், உலர் மண், உலர் களி மண் என மண் வகை மாறுபட்டாலும், பெரும்பாலும் இருப்பது மாவட்டம் முழுவதும் இருப்பது செம்மண் கலந்த சரளை மண்ணே.

 

 


எத்தைகைய இயற்கை சீற்றங்களுக்கும் இந்த மண் தாங்கும் என்பதாலேயே காவிரி பூம்பட்டிணத்திலிருந்து காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பிடங்களை அமைத்தனர் நகரத்தார்கள். இயற்கையை எதிர்க்கும் சரளை மண்ணிலும் திராட்சையை விளையவைத்து தனித்துவமாக மிளிர்கிறது செட்டிநாட்டு திராட்சை.

 

 


    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து குன்றக்குடி செல்லும் கிராமச்சாலைகளின் விளிம்பிலிருக்கின்றது பேயன்பட்டி கிராமம். அடர்த்தியான யூகலிபட்ஸ் மரம், அதனருகே மின்சார நிலையம். தடுக்கி விழுந்தால் முகம் உடையுமளவிற்கு செம்பாறாங்கல். இங்கு தான் இருக்கின்றது திராட்சைத் தோட்டம்.

 

 


"ஆரம்பத்தில் வீட்டு உபயோகத்துக்காக, 12 பன்னீர் திராட்சை குச்சிகளை தேனியில் இருந்து வாங்கி நட்டு வளர்த்தேன். பயனளித்தது. நல்ல விளைச்சலையும் தந்தது. தற்போது திண்டுக்கல், தேனியிலிருந்து குச்சி வாங்கி வந்து இப்பொழுது 85 சென்டில் பயிரிட்டுள்ளேன். ஆறு மாதத்தில் கொடி வந்து பூ பூக்க ஆரம்பித்து விடும். ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். >
ஒரு முறை முதலீடு தான். அதிக பட்சம் ஏக்கருக்கு எட்டு டன், குறைந்த பட்சம் 5 டன் விளைச்சல் எடுக்கலாம். ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..? " என்கிறார் தோட்ட உரிமையாளரும், கட்டிடப் பொறியாளருமான விடுதலை அரசு. வேலை இங்கு இல்லை.! வெளிநாடு தான் இலக்கு.! என நினைப்போருக்கு இவர் முன்னுதாரனம்.!
 

 

Next Story

ஜி20; உலகத் தலைவர்களுக்குக் காத்திருக்கும் சிவகங்கை மாவட்ட உணவு!

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Sivaganga district food waiting for world leaders at G20

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

இந்த மாநாட்டைத் தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களைக் கவரும் விதமாக உணவு ஏற்பாடுகளும் சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, உலகத் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காகத் தயாராகின்றன. 

 

பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை பிரபலமான தாஜ் ஹோட்டல் ஏற்றுள்ளது. இந்த ஹோட்டலில் இருந்து 120 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஜி-20 பிரதிநிதிகளுக்காக சுமார் 500 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அதில், ஒவ்வொரு நாளும் 170 உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அதில், பானிபூரி, சாட் போன்ற இந்தியாவில் பிரபலமான தெரு உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகளும் பிரத்யேமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

 

இதனையடுத்து,  திணை தாலி, திணை புலாவ் மற்றும் திணை இட்லி, திணை சூப் போன்ற திணை உணவுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், தென் இந்திய மசாலா தோசை, ராஜஸ்தானின் தால்பாடி, சுர்மா, பீகாரின் லிட்டி சோக்கா, பெங்காலி ரசகுல்லா, டெல்லி சாட், மஹாராஸ்டிராவின் பாவ் பஜ்ஜி, தமிழகத்தில் இருந்து பனியாரம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலமான உணவுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. மேலும், அசைவ உணவுகளான சிக்கன் கோலாபூரி, இந்தியன் மீன் குழம்பு, கோழிக்கறி போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன. 

 

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உணவுக்கு பேர் போன செட்டிநாடு பகுதியில் இருந்து செட்டிநாடு சிக்கன் உணவையும் ஜி20 பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மேலும், பல்வேறு இடங்களில் உள்ள பிரபலமான அசைவ உணவுகளும் தயாரிக்கப்பட இருக்கின்றன. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாத்திரங்கள், ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகா உள்படப் பல இடங்களில் உள்ள பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகின்றன. 

 

 

Next Story

செங்கல் சூளைக்கு அனுமதியின்றி மண் எடுக்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

 Soil can be taken for brick kiln without permission - Government of Tamil Nadu!

 

செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில், அதனைத் திருத்தி செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க சுதந்திரம் வேண்டும் என பல ஆண்டுகளாக அத்தொழிலில் ஈடுபடுவோர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

ஏரிகளை ஒட்டியப்  பகுதிகளில் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டருக்குள்ளும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.