ADVERTISEMENT

கரோனா உச்சக்கட்டத்தில் இருக்கும்போது டாஸ்மாக் திறப்பு ஏன்? - கோவி.லெனின் பேச்சு!

10:54 AM May 06, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT



மத்திய அரசு இந்த மூன்றாவது கட்ட ஊரடங்கில் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதுக்கடைகளைத் திறந்துள்ளது. தமிழக அரசும் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுடொர்பாக பத்திரிகையாளர் கோவி.லெனின் பேசும்போது,

ADVERTISEMENT

"கரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் என்று தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் கோரிக்கை வைத்திருந்தார். ஆரம்பத்தில் கரோனா பாதிப்பு வரும்போதே அவர் இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார். இதுவரைக்கும் எதுவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இயற்கை மருந்துவம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மாத்திரையைத்தான் தற்போது வரையிலும் பயன்படுத்துகிறார்கள். கரோனா பாதித்த மக்களுக்கும் அதைத்தான் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனாவை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்று தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்ததன் விளைவாகத் தற்போது டாஸ்மாக் கடைகளை எல்லாம் வரும் 7 ஆம் தேதி திறக்கப் போகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது. மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவே இந்த டாஸ்மாக் கடை திறப்பு இருக்குமோ என்று நம்மையெல்லாம் இது யோசனை செய்ய வைக்கிறது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் சென்னையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்கள். ஏனென்றால் சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் எப்போது எந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வரும் என்று தெரியாமல் உள்ளது. அப்படி நோய்த் தொற்றுக்கு உள்ளானால் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அந்தப் பகுதி முடக்கப்படும் அபாயமும் உள்ளது. அதனால் சென்னைக்கு மட்டும் பிறகு அறிவிக்கலாம் என்ற முடிவைத் தற்போது எடுத்துள்ளார்கள். டாஸ்மாக் சரக்கே தரமாக இல்லை என்பது குடிமக்களின் நீண்டகாலக் குற்றச்சாட்டாக இருக்கின்றது. இத்தகைய நன்றாக இல்லாத சரக்கையே சாப்பிட்டு நாம் வாழும்போது, இந்தக் கரோனாவை எதிர்த்து வாழ முடியாதா என்று தமிழக அரசின் முடிவை நாம் மனதளவிலான பாசிட்டிவாகப் பார்க்க வேண்டும்.

டாஸ்மாக் திறக்கலாம் என்ற முடிவைத் தற்போது எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அவர் எந்த முடிவையும் தானாக எடுக்க மாட்டார். மத்திய அரசு அந்த முடிவை எடுத்ததால் அவரும் கடைகளைத் திறக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். அதன்படி இந்த மூன்றாவது ஊரடங்கின் போது எதை எதைத் தளர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிவித்ததில் இந்த டாஸ்மாக் கடைகளும் இடம் பெற்றிருந்தது. இந்த மதுபானம் என்பது ஒரு சிலருக்குப் பழக்கம், ஒரு சிலருக்கு வாழ்க்கை, சிலருக்குப் பொழுது போக்கு. மது இல்லாமல் வாழ முடியாது என்று இருப்பவர்களுக்கு இது மருத்துவ ரீதியான சிக்கலை ஏற்படுத்துகின்றது. இதுதொடர்பாக பத்திரிகைகளில், சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது. கேரளாவில் கூட மது நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மது கொடுக்கலாம் என்று பேச்சு எழுந்த நிலையில் அது நீதிமன்றம் சென்று சிக்கலானது. தற்போது தமிழ்நாட்டில் குடிமக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளார்கள். பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு கெட்டு விடுவதைக் காட்டிலும், சமூக விலகளோடு நாமே மது விற்பனை செய்யலாமே என்று எடப்பாடி இந்த முடிவுக்கு வந்துள்ளார்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT