ADVERTISEMENT

கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அமைச்சர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்துவிடப் போகிறார்..? - கோவி. லெனின் கேள்வி!

03:04 PM May 28, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


மத்திய அரசு கரோனா நிவாரணம் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளைக் கடந்த சில நாட்களாக மத்திய நிதியமைச்சர் மூலம் அறிவித்து வந்தது. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளார்களுக்கு நிவாரணம் அளிப்பதை விட அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை அனுமதிப்பது என்னும் முடிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக இருந்தது. இது தொடர்பாக பத்தரிகையாளர் கோவி.லெனின் கூறியதாவது,

ADVERTISEMENT


"மத்திய அரசு இந்தக் கரோனா வந்த பிறகு இதைச் சாதித்துவிட்டோம், அதைச் சாதித்துவிட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்கள் கூறுவது அனைத்தும் வடிகட்டிய பொய் என்று நமக்கு ஏதாவதொரு சம்பவங்கள் தொடர்ந்து காட்டி விடுகின்றன. உண்மையான இந்தியாவின் நிலையைக் காட்டுவது இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைதான். எல்லோரும் வீட்டில் இருங்கள், அமைதியாக அரசு சொல்வதைக் கேட்டால்தான் இந்தப் போரில் வெற்றி அடைய முடியும் என்று முதல் ஊரடங்கு ஆரம்பிக்கப்படும் முன் பிரதமர் அவர்கள் பேசினார்.

உடனே அவர் பேச்சைக் கேட்டு சென்னை, மும்பை போன்ற நகரங்கள் எல்லாம் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதைத் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டினார்கள். ஊரடங்கு ஆரம்பித்த சில நாட்களில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலார்கள் எங்களை எங்கள் வீடுகளுக்கே கொண்டு சேர்ந்துவிடுங்கள் என்று சாலைகளில் குவிந்து, கிடைத்த பேருந்துகளில் ஏறிக்கொண்டது தான் உண்மையான இந்தியாவின் நிலையாக இருக்கின்றது. இங்கே எங்களுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை, எங்கள் வீட்டுக்குச் சென்றால்தான் எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்ள முடியும் என்ற குரலே இந்தியாவின் மொத்த குரலாக அப்போது இருந்தது. இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அம்பானிகளோ அதானிகளோ இல்லை என்பதை அந்த நிகழ்வு நம் எல்லோருக்கும் காட்டியது.


புலம் பெயர்ந்த மக்கள் படுகின்ற அவதிகளைப் பார்த்து பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். நடந்து செல்பவர்களின் பாதம் கொப்பளித்து அப்படியே சதை தனியாகப் பெயர்ந்துவிடுகின்றது. அவர்களுக்குத் தங்களாலான காலணி போன்றவற்றைப் பொதுமக்கள் வழங்குகிறார்கள். இரக்கப்பட்டு, நம்மைப் போல அதுவும் சக உயிர் ஆயிற்றே என்று அந்த உதவிகளைச் செய்கிறார்கள். அந்த மனித உணர்வே இல்லாமல் இருப்பவர்கள் ஆட்சி நடத்துவதால், "அப்படி உங்களுக்கு வருத்தமாக இருந்தால் நீங்கல் சூட்கேஸைத் தூக்கிச் செல்ல வேண்டியது தானே" என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். ஒரு குழந்தை நடக்க முடியாமல் அந்த ஒரு சூட்கேஸ் மேலேயே படுத்துள்ளது. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து விடுவார்கள். இப்படியான நிலையில் சூழ்நிலைகள் இருக்க ஆறுதல் சொல்பவர்களை, சூட்கேஸை இழுத்துச் செல்ல சொல்வது எல்லாம் எந்த மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.

பா.ஜ.க.-வை சேர்ந்த பல அமைச்சர்கள் இந்த மாதிரியாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நிர்மலா சீதாராமன் தொடர்ந்து இதே மாதிரியாகப் பேசி வருவதை நாம் காணலாம். ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி. வசூலிக்கிறார்களே என்று கேள்வி எழுப்பிய போது இதே மாதிரி பொறுப்பில்லாமல் அப்படி என்றால் நீங்கல் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதானே என்று கேட்டார். இதே மாதிரி வெங்காய விலை அதிகம் விற்கின்றதே என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று பதில் கூறுகிறார் நிர்மலா சீதாராமன். இந்த மாதிரியான கொடூர பதில்கள் வேறு யாரும் கூற முடியாது. இவர்கள் கையில் ஆட்சி இருந்தால் மக்களுக்கு என்ன நன்மை வந்துவிடப் போகின்றது", என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT