ஈழத்தில் நடந்த அரசு...
வங்கி, தபால் நிலையம், போக்குவரத்துக் கழகம்...
இன்னும் என்ன?
இன்று (27.11.2017) மாவீரர் நாள். இந்த நாள், விடுதலை புலிகளால் 1989ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை அனுசரிக்கப்பட்டது வருகிறது. இந்த நாளில் ஈழத்தமிழ் மக்கள் மாவீரர் இல்லத்துக்கு சென்று, போராடி உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவர். 2009ம் ஆண்டு யுத்தத்திற்கு பிறகு மாவீரர் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னும் மக்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த நாள் மாவீரர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுக்குப்பின் ஒரு வரலாறு உண்டு. ஆம், சங்கர் என்ற போராளி அன்றுதான் உயிரிழந்தார். ஈழப்போராட்டத்தில் பலியான முதல் உயிர் அதுதான்.
Advertisment
இன்று பலருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பாகவும், சிறிய குழுவாகவும் சுருக்கிக் காட்டப்படும் ஒரு இயக்கம் நேர்த்தியும் ஒழுக்கமுமான ஒரு அரசை நடத்தியிருக்கிறது. அதன் அங்கங்களாக செயல்பட்ட சில நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தமிழீழ வைப்பகம்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/tamileela govt/1.jpg)
யாழ்ப்பாணத்தில் 1994ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த இந்த வைப்பகத்தில் கிட்டத்தட்ட 100 பேர் பணியாற்றினர். இது வங்கியாகவும், நிதி சேவை வழங்கும் இடமாக செயல்பட்டு வந்தது.
தமிழீழ போக்குவரவுக்கழகம்
Advertisment
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/tamileela govt/2.jpg)
விடுதலை புலிகளால்தமிழீழ மக்களின் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.
செஞ்சோலை இல்லம்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/tamileela govt/3.jpg)
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இல்லம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இல்லங்கள் இருந்தன.
தமிழீழ நீதி மன்றம்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/tamileela govt/5.jpg)
தமிழீழ நீதிமன்றம், சட்ட ஆக்க கழகம், புலனாய்வு துறை என மூன்று இருந்தது. இதன் கீழ் நீதி விசாரணைகள் நடந்தன. தமிழீழ சட்டக்கல்லூரியும் இருந்தது.
தமிழீழ காவல்துறை
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/tamileela govt/6.jpg)
1991ம் ஆண்டுமுதல் 2009 வரை செயல்பட்டு வந்தது. இது பிரபாகரனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது.
இது தவிர, தபால் நிலையம் போன்றவைகளும் இருந்தன. தமிழீழ பகுதியில் ஒரு முழு அரசின் செயல்பாடுகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பில் மிக கவனமாக இருந்த இவர்கள் கிட்டத்தட்ட 18 தரைப்படை பிரிவுகள், ஏழு கடற்படை பிரிவுகள், இரண்டு வான் படை பிரிவுகளையும் கொண்டிருந்தனர். மருத்துவம், அரசியல், அறிவியல் என பல துறைகள் இருந்தன. இதைத்தவிர ரகசிய பிரிவுகளும் இருந்தன. வரலாறு, எப்பொழுதும் யாரால் நிகழ்த்தப்படுகிறதோ, அவர்களை விட யாரால் எழுதப்படுகிறதோ அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
கமல் குமார்