Advertisment

'அழிவை கடவுள் தள்ளிப் போட்டுவிட்டார்'- ஜம்ப் அடித்த எபோ நோவா

193

'God has postponed the destruction' - preacher who jumped Photograph: (ghana country)

2025 டிசம்பர் 25 அன்று இந்த ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்று பெரும் பீதியை கிளப்பிய கானா நாட்டைச் சேர்ந்த ஆன்மிக பிரச்சார மதபோதகர் எபோ நோவா என்பவர் திடீரென அடித்த பல்டி அவரை பின்பற்றுவோருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisment

டிசம்பர் 25 முதல் இந்த ஒட்டுமொத்த உலகம் நீரால் அழியத் தொடங்கும் என கடந்த சில மாதங்களாகவே கானா நாட்டைச் சேர்ந்த மதபோதகர் எபோ நோவா என்பவர் தெரிவித்து வந்தார். தொடர்ச்சியாக மழை பொழியும் சூழல் ஏற்பட்டு உலகம் அழியத் தொடங்கும் எனச் சொல்லி வந்தார். இது அவரை பின்பற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது கருத்து மேற்கு ஆப்ரிக்கா முழுவதும் தீவிரமாக பரவியது.

Advertisment

'உங்களை அழிவிலிருந்து தப்பிக்க நான் உதவுகிறேன்' எனக் கூறி கோடிக்கணக்கில் நிதி திரட்டி வந்துள்ளார் எபோ நோவா. இதற்காக பொதுமக்கள் பலர் தங்களுடைய வீடு, நிலம், ஆடு, மாடு என அனைத்து சொத்துக்களையும் விற்று எபோ நோவாவிற்கு பணம் கொடுத்துள்ளனர். 

அந்த பணத்தை வைத்து பிரம்மாண்ட அளவில் மர பேழைகளை கட்டி வந்துள்ளார் எபோ நோவா. உலகம் அழியும் நேரத்தில் தன்னை நாடி வரும் மக்களை அந்த மரப்பேழையில் ஏற்றி தப்ப வைக்கிறேன் எனவும் தெரிவித்து வந்துள்ளார். அவரது பேச்சை நம்பி கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அண்டை நாடுகளான நைஜீரியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு மற்றும் நிலங்களை விற்று விட்டு பணத்தோடு கானாவிற்குள் தஞ்சமடைந்தனர். எபோ நோவா கட்டியுள்ள பேழையில் இடம் பிடித்து உலக அழிவிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.

டிசம்பர் 25 நெருங்க நெருங்க அழிவு தொடங்கிவிடும் என்ற அச்சத்திலும் இருந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நாளான டிசம்பர் 25 ஆம் தேதி எபோ நோவா சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய தொடர் பிரார்த்தனையால் கடவுள் மனமாற்றம் அடைந்து உலக அழிவைத் தள்ளி வைத்திருப்பதாக எபோ நோவா அறிவித்துள்ளார். 'ச்ச்சே இவர் பேச்சைக் கேட்டு சொத்துக்களை விற்று விட்டு வந்தோமே' என அதிருப்தியில் ஏமாந்த மக்கள், உடைமைகளை இழந்து ஊர் திரும்பி வருகின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக மோசடி என உலக அளவில் கண்டங்கள் எழுந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் எத்தனையோ சாதனைகள் சாத்தியமாகி வரும் இந்த காலகட்டத்தில் கூட மக்கள் இப்படி போலி ஆன்மீகவாதிகளின் பேச்சைக் கண்மூடித்தனமாக நம்புகிறார்களே என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

africans country Superstition
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe