Advertisment

எல்லாத்துக்கும் இந்த 'ஈஸ்ட்மன்'தான்யா காரணம்...

இன்று நாம் செல்ஃபி வாழ்க்கை வாழ்வதற்கும், போகும் இடத்திலெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுவதற்கும், எப்போதோ வரும் கலைப்படங்களையும், எப்போதுமே வரும் வணிக படங்களையும் தயாரிப்பதற்கும், கைபேசி முதல் கண் லென்ஸ் கேமரா வரை புகைப்படக்கலையில் ஏற்பட்டிருக்கும் அனைத்து வளர்ச்சிக்கும் இவர்தான் முக்கிய காரணம். மொத்தத்தில் 'எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்" ங்குறமாதிரி புகைப்படம் மற்றும் திரைப்பட துறையில் ஏற்பட்ட எல்லா வளர்ச்சிக்கும் இந்த ஜார்ஜ் ஈஸ்ட்மன்தான் முக்கிய காரணம். இன்று அவரது 165வது பிறந்தநாள்...

Advertisment

george eastman

'ஈஸ்ட்மன் கோடாக்' என்ற ஒளிபடச்சுருள் நிறுவனத்தின் நிறுவனரான ஜார்ஜ் ஈஸ்ட்மன் ஃபிலிம் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். அதுவரை காகித படச்சுருள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த புகைப்படக்கலை அன்றுமுதல் சாமானியர்களின் கைகளுக்கும் வந்தது.

1914ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதிவண்ணப்புகைப்படத்திற்கான செயல்முறையை தான் கண்டுபிடித்துவிட்டதை அவர் அறிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒட்டுமொத்த ஒளிப்பட கலையுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. அதற்குமுன் புகைப்பட கலையில் மாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இது ஒரு புரட்சியையே செய்தது. தன் வாழ்நாளில் 100 மில்லியன் டாலருக்கும் மேல் உதவி செய்த இவர் 1932, மார்ச் 14ல் "என் வேலை முடிந்தது, காத்திருப்பானேன்? (my work is done. why wait?)" என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 1954ல் இவரின் 100வது பிறந்தநாளில் இவரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அமெரிக்க அஞ்சல்துறை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Photos Selfie film FLIM george eastman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe