Skip to main content

எல்லாத்துக்கும் இந்த 'ஈஸ்ட்மன்'தான்யா காரணம்...

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

இன்று நாம் செல்ஃபி வாழ்க்கை வாழ்வதற்கும், போகும் இடத்திலெல்லாம் புகைப்படம்  எடுத்துத் தள்ளுவதற்கும்,  எப்போதோ வரும் கலைப்படங்களையும், எப்போதுமே வரும் வணிக  படங்களையும் தயாரிப்பதற்கும், கைபேசி  முதல் கண் லென்ஸ் கேமரா வரை  புகைப்படக்கலையில்  ஏற்பட்டிருக்கும்  அனைத்து வளர்ச்சிக்கும் இவர்தான் முக்கிய காரணம்.  மொத்தத்தில் 'எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்" ங்குறமாதிரி  புகைப்படம்  மற்றும் திரைப்பட துறையில் ஏற்பட்ட எல்லா வளர்ச்சிக்கும் இந்த ஜார்ஜ் ஈஸ்ட்மன்தான்  முக்கிய காரணம். இன்று அவரது 165வது பிறந்தநாள்...
 

george eastman


'ஈஸ்ட்மன் கோடாக்' என்ற ஒளிபடச்சுருள் நிறுவனத்தின் நிறுவனரான   ஜார்ஜ் ஈஸ்ட்மன்  ஃபிலிம் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். அதுவரை காகித  படச்சுருள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த  புகைப்படக்கலை அன்றுமுதல்  சாமானியர்களின் கைகளுக்கும் வந்தது.  

1914ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வண்ணப்புகைப்படத்திற்கான செயல்முறையை தான் கண்டுபிடித்துவிட்டதை அவர் அறிவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒட்டுமொத்த  ஒளிப்பட கலையுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தது. அதற்குமுன் புகைப்பட கலையில்  மாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இது ஒரு புரட்சியையே செய்தது. தன்  வாழ்நாளில் 100 மில்லியன் டாலருக்கும் மேல் உதவி செய்த இவர் 1932, மார்ச் 14ல் "என் வேலை  முடிந்தது, காத்திருப்பானேன்? (my work is done. why wait?)" என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 1954ல் இவரின் 100வது பிறந்தநாளில் இவரின் உருவம் பொறித்த அஞ்சல்  தலையை அமெரிக்க அஞ்சல்துறை  வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.