Advertisment

அம்பானியை ‘ஓவர் டேக்’ செய்யும் அதானி... மோடி ஆட்சியில் அசுர வளர்ச்சியின் பின்னணி!

ambani adani

“எதிர்காலம் குறித்த குறுகிய திட்டம் உடைய, பணம் சம்பாதிக்க விரும்பும் அரசியல்வாதிகளால் நான் ஈர்க்கப்படுவதில்லை. எதிர்காலம் குறித்த சரியான திட்டம்உள்ளவர்களைத்தான்நான் விரும்புகிறேன்” என்று தனதுவளர்ச்சிக்கானபாதை குறித்த தெளிவான பார்வையை முன்வைத்தவர்அதானிகுழுமத்தின் தலைவர் கவுதம்அதானி. அண்மையில்தொழில் வளர்ச்சி குறித்து டைகுளோபல்கூட்டத்தில் பேசும்போது, “புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பின் வளர்ச்சிகாரணமாக, மின்சாரத்தின் விலை ஓரளவுவீழ்ச்சியடையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா மிகக் குறைந்த விலையில் ஆற்றலை உற்பத்தி செய்யும்” என்று தனது தொலைநோக்கு பார்வையை அவருடைய சில எ.கா மூலம் எடுத்துக்கூறினார். கடந்தஒருசிலஆண்டுகளில் மட்டும் தான் ஈடுபடும் தொழில்களில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளார்அதானி.கோடீஸ்வரர்கள்பட்டியலிலும்ஏறுமுகம்தான். ஆசியாவின்கோடீஸ்வரர்கள்பட்டியலில்முதலிடம் பிடித்திருக்கும் முகேஷ் அம்பானியின் அந்தரேங்கைவெகு விரைவில் தட்டிச் செல்வார் என்று பலரால்எதிர்பார்க்கப்படுபவர்கவுதம்அதானி.

Advertisment

கவுதம்அதானி, நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து இவரது பெயர் தினசரி ஒரு முறையாவது பலரால் பேசப்பட்டு வருகிறது. பிரதமரின் திட்டங்களெல்லாம்அதானிக்கும்அம்பானிக்கும் வேண்டுமானால் உதவலாமே தவிர, பாமர மக்களுக்கு உதவாது போன்ற வசனங்கள் யாராவதுபேசக்கேட்டிருப்போம். முகேஷ் அம்பானி, நரேந்திர மோடி, கவுதம்அதானி, இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு அது குஜராத்தி என்பதுதான். அம்பானியையும் தாண்டிய நட்புஅதானிக்கும்பிரதமர் மோடிக்கும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதுதான்,அதானியின்தொழில்கள் விரிவடையத் தொடங்கின.

Advertisment

அதானியின்அந்த திடீர் வளர்ச்சி குறித்துஃபோர்ப்ஸ்எழுதிய ஒரு கட்டுரையில், மோடியின் ஆட்சியில்கட்ச்வளைகுடா பகுதியில் மட்டும்அதானிகுழுமத்துக்கு 7,350ஹெக்டேர்நிலம், ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற தொகைக்கு30 வருஷக் குத்தகைக்குவழங்கப்பட்டது.அப்படி அளிக்கப்பட்டநிலத்தைசுமார் 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்குஅதானிகுழுமம்உள்குத்தகைக்குவிட்டுள்ளதாகக்குறிப்பிட்டிருந்தது. மோடியின் குஜராத் அரசுக்கும் அவருக்கும் தொழில்முறை உறவு இருக்கிறது என்று பல விமர்சனங்கள் அப்போதிலிருந்தே இவர்கள் மீது வைக்கப்பட்டு வருகின்றன. குஜராத் பாஜகவுக்குஅதானிதான்பல ஆண்டுகள் ஆதரவு கொடுத்ததாகவும் விமர்சனங்கள் உண்டு.

கரோனாவால்இந்தியக்குடிமகன்கள் ஸ்தம்பித்திருந்த அதே வேளையில்அதானிகுழுமத்தின் வளர்ச்சியில்எந்த தடையும் இன்றி மேல்நோக்கி சென்றுகொண்டேதான்இருந்தது. இதுமட்டுமல்லாமல் தனதுஇன்வெஸ்டர்ஸ்களைதக்கவைத்துக்கொண்டு, புது துறைகளிலும்காலெடுத்துவைத்துள்ளதுஅதானிகுழுமம். நிலக்கரி சுரங்கம், எரிவாயு, துறைமுகங்கள் உள்ளிட்ட அவருடைய நிறுவனங்கள் சம்மந்தப்பட்டஷேர்கள்வளர்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும்அதானிக்ரீன்எனர்ஜிலிமிடெட்நிறுவனம் ஆறு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதில் 6பில்லியனுக்குசோலார்பவர்டீல்ஒன்றையும் முடித்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்கஎரிசக்தித்துறையில்அதானியின்நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவாகுவதற்கு அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கொள்கைகளுடன் இக்குழுமம் மேற்கொள்ளும் திட்டங்களும் ஒத்துப்போவதால்,அதானிஸ்டாக்ஸ்எந்த பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது. இதனால் அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று சில பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர். இந்தியாவின் பெரிய பணக்காரர்கள்பட்டியலில்முதலிடத்தில் முகேஷ் அம்பானி இடம்பிடித்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவுதம் அம்பானி 32.6பில்லியன்டாலருடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த வருடத்தில் மட்டுமேஸ்டாக்கில்21.1பில்லியன்டாலர் வளர்ச்சியடைந்துள்ளார் கவுதம்அதானி. இது அம்பானியின் லாபத்தைவிட அதிகம்.

கல்லூரிட்ராப்அவுட்டானகவுதம்அதானி, 1980களில் வைர தொழிலில் சம்பாதிக்கலாம் என்கிற எண்ணத்தில் குஜராத்திலிருந்து மும்பை சென்றுள்ளார். அது சரிவரவில்லை என்றவுடன் ஊருக்கே திரும்பியஅதானி, தனது அண்ணனின்பிளாஸ்டிக்இம்போர்ட்தொழிலில் ஈடுபட்டுள்ளார். 1988ஆம் ஆண்டுஅதானிஎண்டர்பிரைஸஸ்என்றநிறுவனத்தைத்தொடங்கி,அடுத்த பத்து வருடங்களில்,அரபிக் கடல் பகுதியில் உள்ளமுந்த்ராவில்தனிதுறைமுகத்தையே கட்டமைத்தார். தற்போது இந்தியாவின் பெரிய தனியார்துறைமுகங்களைக்கொண்ட நிறுவனமாகியுள்ளதுஅதானிகுழுமம். இக்குழுமம் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தித்துறையிலும்காலெடுத்துவைத்தது. தற்போது நிலக்கரிசுரங்கத்துறையில்பெரும் புள்ளியாகியுள்ளது. இந்த தொழில் நீண்டு, வெளிநாடுகள் வரை சென்றுள்ளது.

அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கும் துறைகளில், திடீரென நுழைகிறதுஅதானிகுழுமம். அதேபோல அந்த துறைகளில் மிகவும் குறைவான போட்டிகள் இருக்கிறதாஎன்பதைத்தெரிந்துகொண்டுதான் களமிறங்குகிறது. இதுவே அதன் வழக்கமாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைவளர்ச்சிப்பாதைக்குகொண்டு செல்லப்போகிறேன் என்று சொன்னபோதுதான் கவுதம்அதானியின்தொழில்கள் பெரிய அளவில் பன்முகத்தன்மையுடையவையாக மாறின.

பாதுகாப்புத்துறை சார்ந்த தயாரிப்புகளைஇந்திய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும் என்றபோதுஅதானிபாதுகாப்புகருவிகளைத்தயாரிக்கும்நிறுவனத்தைத்தொடங்கினார். மூன்று வருடங்கள் கழித்து, எரிவாயு துறையை அரசுஊக்குவித்ததைத்தொடர்ந்து, எரிவாயுவைசில்லரைவிற்பனை செய்யும் பெரிய தனியார் நிறுவனமான தன்னை தகவமைத்துக் கொண்டது இந்நிறுவனம். 2019ஆம் ஆண்டு விமானநிலையங்களைக்குத்தகைக்கு எடுப்பதில் கவனம் செலுத்தினார். தற்போதுதரவுஸ்டோரேஜ், நிதிநிறுவனங்களைத்தொடங்க திட்டமிட்டுள்ளார்அதானி.பிரதமர் மோடியின் புதிய இந்தியா,டிஜிட்டல்இந்தியா,ஆத்மன்நிர்பார்உள்ளிட்ட ஸ்லோகங்களுடன்அதானியின்இந்த திட்டங்களைஒப்பிட்டுப்பார்த்தால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த சில விஷயங்கள் தெளிவாகலாம்.

இந்த குழுமத்திற்கு 17 பில்லியன் டாலர் கடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், இக்குழுமம் வளர்ச்சியடைந்துகொண்டேதான் இருக்கிறது. வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் வெளிநாட்டு வங்கிகளும் இவருக்கு கடன் கொடுத்து உதவத் தயாராக இருக்கின்றன. இவருடைய வளர்ச்சியைக் கவனிப்பவர்கள் வெகு விரைவில் இவர் அம்பானியின் சொத்து மதிப்பை எளிதில் தாண்டிவிடுவார் என்றும் சொல்கிறார்கள். அம்பானியுடன் இவர் தொடர்ந்து ஒப்பிடப்பட்டாலும், இருவரது தொழில் களங்களும் முற்றிலும் வேறானதே. தொலைத்தொடர்பு, சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபமீட்டும் நேரத்தில், துறைமுகம், ரயில்வேத்துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபமீட்டி வருகிறது அதானி குழுமம். அரசாங்கத்தின் புதிய கொள்கைகளும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்காற்றுவதாகக் கூறப்படும் நிலையில், அரசு கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஏற்பட்டதா அல்லது இந்த வளர்ச்சிக்காக அரசாங்க கொள்கைகள் ஏற்படுத்தப்பட்டனவா என்பது சார்ந்தோருக்கே வெளிச்சம்.

Gautam Adani mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe