Skip to main content

விநாயகர் சிலைகள் கரைப்பு! அசம்பாவிதங்களை தவிர்க்க 15,000 போலீசார் பாதுகாப்பு!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

xெ

 

கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 


 
சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரகங்களை சேர்த்து சுமார் 21,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் இந்த பணியில் 2,650 ஊர்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர். சென்னையில் 1,362 சிலைகளும், ஆவடியில் 503 சிலைகளும், தாம்பரத்தில் 699 சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்விற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 


 

Next Story

"நாங்கள்  ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல"- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"We are not moderators of the voice of the media"- Union Minister L. Murugan

 

நாங்கள் மற்ற கட்சிகள் போல்  ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

விநாயகர் சதுர்த்தி தினம் நாடு முழுதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் அனைத்து  திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது அனைவரின் கடமை. தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து வாழ்த்து சொல்லவில்லை எனில் அது பரவாயில்லை. தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கையில் அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வது தான் முறையாக இருக்கும். 

 

சட்ட ஒழுங்கு தமிழகத்தில் மிக மிக சீரழிந்துள்ளது. யாரும் பாதுகாப்பாக நடக்க முடியவில்லை. காவலர்கள் மேல் தாக்குதல் நடக்கிறது. தமிழக அரசு குற்றம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை திட்டத்தில் நாடு முன்னேறுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும். தயவு செய்து அதில் அரசியல் பண்ணாதீர்கள். நாங்கள் மற்ற கட்சிகள் போல்  ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கின்றது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீதும் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

 

 

 

Next Story

விநாயகர் சதுர்த்திக்கு 350 சிறப்பு பேருந்துகள்!

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

350 special buses for Vinayagar Chaturthi!

 

கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்க தயாராகிக்கொண்டு இருக்கிறது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு, ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

 

அப்படி வைக்கப்படும் சிலைகளுக்காக வசூல் வேட்டைகளும் நடத்தப்படுகிறது. நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும், பயணிகள் திரும்ப வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.