ADVERTISEMENT

காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர் - கவிஞர் ந. பெரியசாமி

11:58 PM Oct 02, 2021 | sivarajbharathi

ADVERTISEMENT

ADVERTISEMENT

காந்தி - மறைந்து 73 ஆண்டுகளானாலும் தொடர்ந்து பலவகைகளில் நினைவுகூரப்படுபவர். அவர் மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் இந்தியச் சூழலில் தொடர் வாசிப்புக்கும் தொடர் பகுப்பாய்வுக்கும் உள்ளாகும் மூன்று முக்கிய தலைவர்களில் காந்தியும் ஒருவர் (மற்ற இருவர் - அம்பேத்கர், பெரியார்). அந்தவகையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்து நவீன ஆளுமைகளுடன் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். நவீன கோட்பாடுகளின் அடிப்படையில் காந்தியை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் நால்வரிடம் நான்கு கேள்விகளை முன்வைத்தோம். ஒரே கேள்விகளுக்கு நான்கு விதமான பதில்கள் என்ற ஆர்வம்தான் இந்த உரையாடலுக்கான மையப்புள்ளி.

தற்போது நம்முடன் உரையாடுபவர் கவிஞர் ந. பெரியசாமி. ஒசூரைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘நதிச்சிறை’, ‘மதுவாகினி’, ‘தோட்டாக்கள் பாயும் வெளி’, ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’ ஆகிய கவிதை தொகுப்புகளையும், ‘மொழியின் நிழல்’ எனும் கட்டுரை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

சமகாலத்தில் காந்தி எந்த வகையில் தேவைப்படுகிறார் அல்லது சமகாலப் பிரச்சனைகளுக்கு காந்தி எந்த மாதிரியான தீர்வாக இருக்கிறார்?

காந்தி எக்காலத்திற்குமானவர்தான். அவரது தீவிரம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. அவரது செயல்பாடுகள் எதிர்காலத்தையும் கணக்கில்கொண்டே இருந்தது. அப்போதைக்கான தீர்வாக அவர் எதையும் யோசிக்கவில்லை.

ந. பெரியசாமி

காந்தி காலத்திலும் அதற்கு முன்பும் அகிம்சையையும் சகோதரத்துவத்தையும் பலர் பின்பற்றியிருக்கிறார்கள் (புத்தர், குருநானக், பெரியார், அம்பேத்கர் உட்பட). இதில் காந்தியின் அகிம்சை எந்தவகையில் வேறுபட்டது?

காந்தியின் அகிம்சை சுயநலமிக்கது. தான் நம்புவதையே சிறந்தது என நம்பினார்

இறுதி காலத்தில், தன்னுடைய பல செயற்பாடுகள் குறித்து காந்திக்கு குற்றவுணர்வு இருந்ததுபோல் தோன்றுகிறது. இச்சமூகத்தை இதுவரையில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது போலான கருத்து அவர் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அம்பேத்கர் செயல்பாடுகளை மறுத்ததற்காகவும், தலித்துகள் மீதான பார்வையில் தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தியிருக்கலாம் என்றும் அவர் குற்ற உணர்வு கொண்டிருந்திருக்கலாம்.

இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காந்தி எதிர்மறையான பிம்பமாகவோ, 'பழைய ஆள்' பிம்பமாகவோதான் இருக்கிறார். வன்முறையைக் கொண்டாடுகிற இன்றைய, அடுத்த தலைமுறைக்கு எப்படி காந்தியை கொண்டு சேர்ப்பீர்கள்?

அகிம்சை போன்ற தீவிரவாதம் ஏதுமில்லை. காந்தி ஒரு அற்புதமான பிம்பம். அவரை மகாத்மா என்ற நிலையிலிருந்து தளர்த்தி, அவரின் ஆரம்பகால வாழ்வைக் கொண்டு சேர்ப்பதன் மூலம் இளைஞர்களிடம் காந்தியை பற்ற வைக்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT