ADVERTISEMENT

"கோயில்ல சட்டையை கழட்டச் சொல்வதே நூலைப் பார்க்கத்தான்; இதை இல்லன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்..." - காந்தராஜ் தடாலடி

12:07 AM Nov 26, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர், திருமாவளவன் மனுஸ்மிருதி அச்சடித்துக் கொடுப்பதைப் பற்றி பேச்சு வந்தபோது அவருக்குத்தான் வேலை இல்லை. அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "அதான் இவருக்கு நிறைய வேலை இருக்குல்ல, அதைச் செய்ய வேண்டியதுதானே? அண்ணாமலைக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால்தான் திருமாவளவன் என்ன செய்துகொண்டுள்ளார் என்பதைப் பார்த்துக்கொண்டுள்ளார். எனவே வேலை இல்லாதவர் இவர் தானே ஒழிய திருமா இல்லை.

உங்களுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் தான் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் என்ன கவலை; வெள்ளைக்காரன் மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தை யாருக்கோ திருமாவளவன் கொடுத்துவிட்டுப் போகிறார். நீங்கள் ஏன் லபோ திபோ என்று கத்துகிறீர்கள். உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வர வேண்டும். அதிலிருந்தே நீங்கள் பொய் சொல்லுவதை எளிதாகக் கண்டறிந்துவிடலாம். உங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் நீங்கள் அவரை எதற்குக் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும்.

இந்தக் கருத்து மக்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பிரதியெடுத்து மக்களிடம் சேர்க்கிறார். அதில் உங்களுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும். அண்ணாமலைதான் தெளிவாகக் கூறிவிட்டாரே எங்களுக்கும் மனுஸ்மிருதிக்கும் சம்பந்தமில்லை என்று, அதனால் அண்ணாமலை மத்திய அரசிடம் தெளிவாகக் கூற வேண்டும். அதன்படி இனி வரும் காலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களைக் கோயில்களில் அர்ச்சகராகவும், அனைவரையும் கோயில் கருவறை வரை செல்ல மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கடுமையாகச் சொல்ல வேண்டும். அண்ணாமலை இதைச் சொல்லத் தயாரா இருக்கிறாரா என்று கேளுங்கள். சொல்லிவிட்டு அவர் எங்கே போக முடியும். அதையும் பார்க்க வேண்டியுள்ளது.

அப்படி என்றால் அடுத்தவர்களை இவர் தேவையின்றி விமர்சிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். திருமா அவர் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார். நீங்கள் எங்களுக்கும் அந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டீர்கள். அப்புறம் அவர் என்ன செய்தால் உங்களுக்கு என்ன, அவரை எதற்காக அட்டாக் செய்ய வேண்டும். தரமில்லாமல் பேச வேண்டும். அப்புறம் பூணூல் போடுவதைத் தடை செய்ய வேண்டும். நாங்கள் உங்களை விட உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகத் தானே இந்தப் பூணூலை அணிகிறார்கள்.

நாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்றுதானே இவர்கள் கூறுகிறார்கள். அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். கருவறையில் கற்பழிப்பு வரையில் செய்யலாம்; ஆனால் தாழ்த்தப்பட்டவன் போகக்கூடாது. இதுதான் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் சட்டையைக் கழட்டச் சொல்லுவதே பூணூல் இருக்கா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குத்தான். இருந்தால் உள்ளே செல்லலாம்; இல்லை என்றால் வெளியே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதை அண்ணாமலையை ஒழிக்கச் சொல்லுங்கள். அப்புறம் அடுத்தவரைத் திட்டலாம்." என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT