அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் முதல் எபிசோடில் பங்கேற்ற அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான புகழேந்தி பல்வேறு அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
'உங்கள் குழுவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு போய் இருக்கார். நீங்கதான் திமுகவுக்கு அனுப்பி வைத்ததாக சொல்கிறார்களே உண்மையா?'
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/18/033-2025-11-18-16-10-03.jpg)
நான் இன்னைக்கு ஒரு உண்மையை சொல்றேன். நான் எப்போதுமே உண்மையை தான் சொல்வேன். உங்களுக்கு தெரியும் நாம நூற்றுக்கணக்கான பேட்டி எடுத்திருப்போம். நாங்க எல்லாரும் ஒன்றாக இருப்போம். நான் ஜேசிடி பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், மிஸ்டர் வைத்தியலிங்க எம்எல்ஏ, மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி இப்படி ஒரு செட் நாங்க இருப்போம். ஒருநாள் பண்ருட்டியார் 'இனிமேல் பாஜகவிற்கு எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பாஜகவுடன் நாங்க தொடர முடியாது. எங்களை ஒழிக்கப் பார்க்கிறவரை (மோடியை) பழனிசாமி பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டாரு அப்படின்னு சொல்லி, பாஜக கூட செட் ஆகாது' எனச் சொல்கிறார். அன்று சண்டையே வந்துவிட்டது. அன்றைக்குத்தான் அவ்வளவு அதட்டிப் பேசினார் பண்ருட்டியார்.
''நான் வயசுல பெரியவன். அனுபவமிக்கவன் என் பேச்ச கேட்டா கேளுங்க. இல்லாட்டி என்னை விட்டுருங்க. ஆலோசகர் என்று என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். தயவுசெய்து கீழே புகழேந்தி உள்ளிட்டோரை கூட்டிட்டு போய் பிஜேபியோட தொடர்பு இல்லைன்னு சொல்லுங்க. அரசியல் எப்படி மாறுதுன்னு பாருங்க'' என பண்ருட்டியார் சொன்னார்.
பண்ருட்டியாரின் பேச்சை நான் சப்போர்ட் பண்ணேன். நான், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன் எல்லோரும் இதுதான் கரெக்ட் முடிவு என்றோம். தடுத்தது யார் தெரியுமா? வைத்தியலிங்கமும் மனோஜ் பாண்டியனும்.
பாஜக வேண்டாம் என்ற இந்த டிஸ்கஷன் போனபோது ''அண்ணா ப்ளீஸ் வேணாம் கொஞ்ச நாள் பாஜகவோடு தகராறு வேண்டாம். பாஜக சப்போர்ட்ல தான் நாம இருக்கணும்'' அப்படின்னு வைத்திலிங்கமும், அன்பு நண்பர் மனோஜ் பாண்டியனும் தான் சொன்னாங்க. என் முன்னாடி இல்லன்னு சொல்ல சொல்லுங்கப் பார்ப்போம். ஆனால் இப்போது அறிவாலயத்தில் நின்று கொண்டு 'அதிமுக பாஜகவின் பிரான்ச் ஆகிப்போச்சு'ன்னு மனோஜ் பாண்டியன் சொல்றாரு. மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு போனதைப் பற்றி ஓபிஎஸ்க்கே தெரியாத நிலைப்பாடு எனக்கு எப்படி தெரியும்?
ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட இயக்கம் அதிமுக. ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வர் ஆக்கப்பட்டவர் ஓபிஎஸ். அப்படிப்பட்ட ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் போறேன் என்று சொன்னால் ''மனோஜ் பாண்டியன் என்னை விட்டு பிரிஞ்சி போறது ரொம்ப வருத்தமா இருக்கு. கூட இவ்வளவு நாள் பயணம் பண்ணுனீங்க. நடுவுல கூட புகழேந்தி, ஜெசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் போன போது கூட நீங்க போகாம இருந்தீங்க. ஏங்க இப்படி பண்ணிட்டீங்க'' எனக் கேட்கணுமா? இல்ல நல்லபடியாக நீங்க போயிட்டு வாங்க அப்படினு சொல்லனுமா. நூறு சதவிகிதம் ஓபிஎஸ்ஸே திமுகவிற்கு மனோஜ் பாண்டியனை போகச் சொல்லியிருப்பார்.என் உயிரே போனாலும் இந்த இயக்கத்தை விட்டு போக மாட்டேன் என்பார்கள் அடுத்த நாள் காலையில் பேப்பர் பார்த்தால் வேறு கட்சியில் சேர்ந்திருப்பார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/18/031-2025-11-18-16-07-23.jpg)
யாருக்காவது சல்யூட் அடிக்கணும். யார் காலிலாவது விழனும். அவங்களோடு ஒத்துப்போகனும். அவங்க வீட்டு வாசற்படியில் நிக்கனும். இதுக்கெல்லாம் நான் ரெடியா இல்ல. எங்க அப்பா என்னை வளர்த்தது அப்படி. எங்க அப்பா மொழி போராட்டத்தில் ஏழு முறை ஜெயிலுக்கு போனார். அப்படி சுய மரியாதையோட வாழ்கிறோம். அதனால் அப்படி ஒத்து வர மாட்டேங்குது. அதனால் எங்கே போய் நின்றாலும் நம்மை யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. பேர் சொல்ல விரும்பவில்லை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே என்னை கூப்பிட்டாங்க. இன்றைய முதல்வரும் புகழேந்தி ஒரு பகுத்தறிவு திராவிட இயக்கத்தை சார்ந்தவர் திமுகவிற்கு வரவேண்டும் என்றெல்லாம் விரும்பினார். அது உண்மைதான். இங்க (அதிமுகவில்) சொத்தெல்லாம் கொடுத்துறேன். சொத்தெல்லாம் மாட்டிட்டு இருக்கு. அந்த நேரம் சசிகலா ஜெயிலில் இருந்தாங்க. என்னப் பண்றது அதெல்லாம் எப்படி விட்டுட்டு நான் வர முடியும்.
எல்லோரும் என்னை பெங்களூரு புகழேந்தின்னு சொல்றாங்க. நான் கள்ளக்குறிச்சி தான். என்னோட படிப்பு எல்லாம் முடிச்சிட்டு என்னுடைய மாமா டிவி கடையில ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கு பின்னாடி பெங்களூரில் ஒரு ஷோரூம் திறந்தார். ஷோரூம் ஒன்னு எனக்கு வைத்து கொடுத்தார். அரசியல் வேண்டாம்னு சொல்லிட்டு பெங்களூர் போனேன் என்பது உண்மையா தான். முன்பு இங்கு தலைமை கழகப் பேச்சாளராக இருந்தேன். இப்படி இருந்தா கெட்டுபோய்டுவன்னு எங்க அப்பா பெங்களூரு அனுப்பி வைத்தார்.
பெரியவங்க, பிரண்ட்ஸ் எல்லோரும் இப்போது என்னிடம் சொல்வது ''ஒரு இடத்துல் செட்டில் ஆயிடுங்க சார். சும்மா கத்திக்கிட்டு எவ்வளவு காலம் சார் இப்படி போராடுவீங்கே'' என நிறையப் பேர் என்னிடம் சொல்றாங்க. டிரெயின்ல போனா ஒரு 50 பேர் 60 பேராவது என்னிடம் பேசுவாங்க. மக்களிடம் இதை சம்பாதித்து விட்டேன். தமிழ்நாடு முழுக்க என்னை மூலை முடுக்கெல்லாம் தெரிகிற அளவுக்கு அதிமுகவில் பெயரை சம்பாதித்து விட்டேன். எனக்கு என்னைக்கும் அந்த பேர் நிற்கும்.
மனோஜ் பாண்டிய ரொம்ப அளவா பேசுவாரு. 'நான் அளவோடு பேசுபவன் ' என்கிற மாதிரி பேசுவார். போன் பண்ணினால் இரண்டு வார்த்தை பேசிட்டு கட் பண்ணிடுவாரு. அது அவருடைய பழக்கம். அடுத்த பக்கம் யாராவது பேசுவதை டேப் பண்றாங்களோ அப்படின்னு சொல்லி உடனே கட் பண்ணிடுவாரு. என்ன வருத்தம் என்றால் அவர் திமுகவில் போய் சேர்ந்தது அவருடைய சொந்த உரிமை. பி.ஹச்.பாண்டியன் ஸ்டெடியாக இருந்தார். வேற கட்சிக்கு போகவில்லை. மனோஜ் பாண்டியனின் பிரதர் அரவிந்த் பாண்டியன் நல்ல லாயர். ஆனா மனோஜ் பாண்டியனை பொறுத்தவரைக்கும் எனக்கு மனசு கஷ்டம். திமுக மனோஜ் பாண்டியனை நல்லபடியாக வைத்துக் கொள்ளட்டும்.
உங்களுக்கு யாரும் சொல்லாத விஷயத்தை நான் சொல்றேன். யாருமே சொல்லி இருக்க மாட்டாங்க. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் யுத்தக்களத்தில் உருவாக்கப்பட்ட இயக்கம் அப்படின்னு சொல்கிறோம். அந்த கிரெடிட் யாருக்கு போகும் என நினைக்கிறீங்க? எல்லோரும் எம்ஜிஆரைதான் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த கிரெடிட் கலைஞருக்கு தான் போகும். புரட்சி நடிகர், மக்கள் திலகமாக இருந்த எம்ஜிஆரை புரட்சி தலைவராக மாற்றிக் கொடுத்தவரே கலைஞர்தான்.ஏனென்றால் அன்று எம்ஜிஆரை கலைஞர் திமுகவில் இருந்து எடுக்காமல் போயிருந்தால் இப்படி ஒரு சரித்திரமே ஏற்பட்டிருக்காது. நீங்க நல்லா கவனிங்க. வரலாறை கவனிங்க. வைகோவை எடுத்ததால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வந்தது. அங்கேயும் ஒரு இயக்கத்தை அவர்தான் உருவாக்கி கொடுக்கிறார். அதே நாளடைவில் நமக்குள் இருந்த போட்டிகள் காரணமாக 58 வருடமாக திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது. மூலக் காரணம் கலைஞர்.
எனக்கு தீய சக்தி பழனிசாமி தான். எப்படியாவது பழனிசாமியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தணும்னு நினைக்கிற ஒரே ஆளா ஆரம்பத்தில இருந்து நான் போராடிட்டு இருக்கேன். சசிகலா சும்மா அப்படியே பேசிட்டு போய் வீட்டுக்குள் புகுந்துகொள்வார். ஓபிஎஸ் பேசவே மாட்டாரு . நாங்க தான் பேசுவேன். எடப்பாடி பழனிசாமியை ஸ்ட்ராங்கா ஒவ்வொரு நாளும் எதிர்த்துக்கொண்டிருப்பது புகழந்திதான்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/034-2025-11-18-16-14-35.jpg)