Advertisment

'குடியுரிமை குறித்த அச்சம்...'- எஸ்ஐஆர் மூலம் நிறைவேற்றப்படுகிறதா சிஏஏ?- உடைக்கும் புதுமடம் ஹலீம்

087

'Fear of citizenship...'- Will CAA be passed through SIR?- Haleem breaks new ground Photograph: (SIR)

அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அண்மையில் பேசுபொருளாக இருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மற்றும் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Advertisment

ஊடுருவல்காரர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வோம் என அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?

Advertisment

088
'Fear of citizenship...'- Will CAA be passed through SIR?- Haleem breaks new ground Photograph: (SIR)

2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களில் 2002-ல் பட்டியலில் இல்லாதவர்கள் பேரை நீக்கிட்டார்கள் என்றால் 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து பிரதமராக ஆகி இருக்கிறாரே மோடி, இதே அமித்ஷா 2024ல்  மக்களவையில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக இருக்கிறாரே இவர்களெல்லாம் பதவியை ராஜினாமா பண்ணுவார்களா? இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) 2019-ல் கொண்டு வந்ததுக்கு பிறகு, சிஏஏவை அமல்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையாக எஸ்ஐஆரை பயன்படுத்துகிறார்கள் என்று எல்லோருக்கும் இப்போது புரிந்துவிட்டது. பீகாரில் எஸ்ஐஆர்ஐை கொண்டு வந்த பிறகுதான் அங்கு 68 லட்சம் பேருக்கு வாக்கு இல்லை என்று தெரிந்த பிறகுதான் எல்லா மாநிலங்களும் இதை ஒரு பெரிய அச்சத்தோடு பார்க்கிறார்கள். இன்னைக்கு பீகாரில் 68 லட்சம் பேரில் எத்தனை பேர் ஊடுருவல்காரர்கள்? யார் இந்த இல்லீகல் இமிக்ரன்ஸ்?  அவர்களை களையெடுப்போம் அப்படின்னு அமித்ஷா சொல்கிறார். அமித்ஷாவின் இந்த பேச்சு ஒரு பெரிய அச்சத்தை கொடுத்திருக்கிறது. 

2024 வரைக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தவர்கள், கடந்த முறை பல்வேறு சமயங்களில் வாக்களித்தவர்களின் பெயர் இந்த எஸ்ஐஆர் நடத்தியதற்கு பிறகு பெயர் இல்லை என்றால் அவர்களுக்கு குடியுரிமை இன்று கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை. மேற்கு வங்காளத்தில் நேற்று ஹவுரா பகுதியைச் சேர்ந்த ஜாகிர்மல் என்ற 30 வயது இளைஞர் எஸ்ஐஆரை காரணம் காட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ''என்னுடைய ஆவணம் எல்லாம் தப்பு தப்பா இருக்கு. என் பேர் இருக்கு ஆனால் ஒரு ஆவணத்தில் தந்தையார் பெயர் வேற இருக்கு. இன்னொரு ஆவணத்தில் என்னுடைய பெயர் தவறுதலாக இருக்கிறது. எனக்கு இந்த எஸ்ஐஆருக்கு பிறகு வாக்குளிப்பு இல்லை என்றால் என் குடியுரிமையை நீங்க கேள்வி கேட்பாங்க. நான் எங்கே போவேன் என்ற அச்சம் உள்ளது'' என எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்து குடித்து இறந்துள்ளார்.

அதே மாதிரி கொஞ்ச நாளைக்கு முன் முர்ஷிதாபாத்தில் 45 வயது விவசாயி ஒருவர். அவருக்கு எல்லா டாக்குமெண்ட்களும் சரியாகதான் இருக்கு. ஆனால் 2002-ல் என் பேர் இல்லை. அப்போது நான் இந்திய குடிமகன் இல்லையா? ஒருவேளை நாட்டை விட்டு நீங்கள் வெளியேற்றி விடுவீர்களோ என்கிற அச்சத்தில் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை பண்ணிருக்கார். அதே மாதிரிதான் அக்டோபர் 27ஆம் தேதி எஸ்ஐஆர்ஐை பற்றி அறிவிப்பு வந்தவுடன் மேற்கு வங்காளத்தில் பர்கனாஸ் மாவட்டத்தைச் சார்ந்த பிரதீப் என்ற 57 வயது நபர் தற்கொலை பண்ணிருக்கார். இந்த அச்சத்தை விளைவித்தது யார்? என்ன வகையான பயத்தில் இதுபோன்ற தற்கொலைகள்  நடக்கிறது. இதற்கு முன்பே பலமுறை எஸ்ஐஆர் நடந்திருக்கு என சொல்றாங்க. 2002, 2005 அதற்கும் முன்னாடி பல முறை எஸ்.ஐ.ஆர் நடந்தது என்கிறார்கள். எந்த காலகட்டத்திலும் உங்களுடைய பழைய வாக்காளர் பட்டியலை ஃப்ரீஸ் பண்ணிட்டு எஸ்ஐஆர் நடத்தப்படவில்லை. வீடுவீடாக வருவார்கள் பெயரை கேட்பார்கள், உயிரோடு இருக்கிறார்களா இந்த முகவரியில் வசிக்கிறாரா? என்ற இந்த மாதிரியான தகவல்களை தான் கேட்பார்கள்.

089
'Fear of citizenship...'- Will CAA be passed through SIR?- Haleem breaks new ground Photograph: (SIR)

2002-ல் பட்டியலில் என் பெயர் இருக்கு என்று சொல்லி டிக்லரேஷன் கொடுக்க வைக்கக்கூடிய வேலயை எதுக்கு செய்றீங்க? இன்றைக்கு நாடு முழுவதும் எஸ்ஐஆர் மூலமாக ஒரு அச்சத்தை ஒன்றிய அரசு விதைத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் 5 பேர் தற்கொலை பண்ணிருக்காங்க. ஒருபக்கம் வாக்காளர்கள் தற்கொலை என்றால் இன்னொரு பக்கம் பிஎல்வோஸ் தற்கொலை நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில், தமிழ்நாட்டில் இப்படி பல்வேறு மாநிலங்களில் பூத் லெவல் ஆபீசர் என சொல்லக்கூடியவர்கள் வேலை நெருக்கடி காரணமாக தற்கொலை பண்ணிருக்காங்க.

நவம்பர் நான்கிலிருந்து டிசம்பர் நான்காம் தேதிக்குள் நீங்க இந்த வேலைய முடிக்கணும் என்கிறார்கள். ஒரு பக்கம் தமிழக அரசு இந்த மாதிரியான எதிர்ப்பை தெரிவித்தாலும், மேற்கு வங்காளத்தில் இருக்கும் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த எஸ்ஐஆர் வேலைகள் எதுவும் தடைபடவில்லை. நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த எஸ்ஐஆர் காரணமாக மக்களுக்கும் ஒரு பதற்றம். அதில் வேலை செய்யற அதிகாரிகளுக்கும் ஒரு பதற்றம். அவர்களுக்கு வேலை பளு அப்படிங்கிற நிலை வந்திருக்கு.  நீங்க கடந்த காலங்களில் தமிழகத்தில் 2002, 2005-ல் மற்ற மாநிலங்கள் 2003-ல் எஸ்.ஐ.ஆர் நடந்திருக்கு.  நடந்து 20 வருஷம் ஆயிடுச்சு. ஆனால் அந்த காலகட்டங்களில் இந்த எஸ்ஐஆர் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நடந்தது. அதுதான் முக்கியம். ஒரு வருட காலம் நடந்தது. இப்போது  ஒரு மாதத்துக்குள் முடிக்க வைக்கணும் என்றால் எப்படி?

6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களை நீங்கள் போய் சந்தித்து விண்ணப்பத்தை கொடுத்து  நிரப்பி வாங்கி இந்த ஒரு மாதத்திற்குள் எப்படி முடியும்? அதுதான் இப்போது ஒரு நெருக்கடி. இதனால் மக்களுக்கு குடியுரிமை சார்ந்த ஒரு பயம் வந்துடுச்சு. இன்னைக்கு இது வெறும் வக்காளர் பட்டியல் இல்ல ஒரு குடி குடியுரிமை சார்ந்த ஒரு அச்சத்தை கொடுத்திருக்கு. அதற்கு ஏற்ற மாதிரிதான் அமித்ஷாவுடைய பேச்சும் இருக்கு. இன்னைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார் ''மேற்கு வங்காளத்தில் நாங்கள் ஊடுறவுக்காரர்களை கண்டறிந்து வெளியேற்றுவோம்'' என்று சொல்கிறார். இன்னைக்கு பீகாருக்கும் மேற்கு வங்காளத்துக்கு இதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது.  

இதனை தமிழ்நாட்டுடன் பொருத்திப் பாருங்கள். சரியான டாக்குமெண்ட் இல்லை என்றால் நீங்கள் இலங்கையில் இருந்து வந்தவர்களா என கேட்க மாட்டாங்களா? இப்படி ஒரு அச்சுறுத்தலை இன்னைக்கு இந்தியா முழுவதும் அரசு ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. எஸ்ஐஆர் மூலமாக இன்னைக்கு குடியுரிமை திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதும் இது ஒரு பெரிய பதட்டத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவை, மதுரைக்கு மெட்ரோ வந்திடும் என வானதி சொல்லியுள்ளது பற்றி உங்கள் கருத்து?

வானதி சீனிவாசன் சொல்றாங்க, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோவையில் மெட்ரோ வந்துவிடும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுரையில் மெட்ரோ வந்துவிடும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்ஸ் மருத்துவமனை வந்துவிடும்' என்கிறார். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் தமிழகத்திற்கு விடிவு காலம் என்ன சொல்ல வருகிறார்களா? நாங்கள் ஆட்சிக்கு வராதவரை உங்களுக்கு கோவையில் மெட்ரோ கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வராதவரை மதுரையில் உங்களுக்கு மெட்ரோ கிடையாது என்கிற ஒரு பிளாக் மெயிலை கொடுக்கிறார்கள். நல்லா கவனிங்க முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டுடன் ஒன்றிய பாஜக அல்லது எந்த ஒன்றிய அரசுகளுமே மொழிக் கொள்கையில் முரண்படுவார்கள், சுகாதார விஷயங்களில் முரண்படுவார்கள். இப்பொழுதெல்லாம் நாங்கள் நிதியை கொடுக்க மாட்டோம் என மிரட்டுகிறார்கள்.  ஒன்றிய அரசு ஆரம்ப கல்விக்காக கொடுக்கும் 2,152 கோடியை நீங்கள் மும்மொழி கொள்கையில் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால் தான் நாங்கள் கொடுப்போம் என மிரட்டுறாங்க. நீங்கள் 10,000 கோடி நாங்கள் கொடுத்தால் கூட நாங்கள் வந்து மும்மொழி கொள்கையில் கையெழுத்து போட மாட்டோம் என தமிழக அரசு மறுத்துவிட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

090
'Fear of citizenship...'- Will CAA be passed through SIR?- Haleem breaks new ground Photograph: (KOVAI)

கோவைக்கு மெட்ரோவுக்கு வராததற்கு காரணம் 2011 மக்கள் தொகை கணக்கு பிரகாரம் கோவையில் 20 லட்சத்துக்கு கீழ இருக்கு. 2017ஆம் ஆண்டு மெட்ரோவுக்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தாங்க. அதில் 20 லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு நாங்கள் மெட்ரோ கொடுக்க மாட்டோம் என்றார்கள். வட இந்தியாவில் தாஜ்மஹால் இருக்கின்ற ஆக்ராவில் 17 லட்சம் பேர் கூட இல்லை ஆனால் மெட்ரோ கொடுத்துள்ளீர்கள். சரி அது வெளிநாட்டு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகம் என்றே வைத்துக்கொள்வோம். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் மெட்ரோ கொடுத்துருக்கீங்க. பாட்னாவில் மெட்ரோ கொடுத்துருக்கீங்க இங்கெல்லாம் வெளிநாட்டு பயணிகள் வந்து குவிக்கிறார்களா?  

இன்று இந்தியாவில் விமான போக்குவரத்தில் லாபமான விமான போக்குவரத்து தளத்தில் கோவையும் ஒன்று. கோவை என்பது தென்னிந்தியாவுடைய மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது. ஒரு தொழில் வளர்ந்த நகரம். பெங்களூர் மாதிரி ஐ.டி நகரம் கோவை. நீங்க கோவையில ஏன் கொண்டு வர தயங்குறீங்க? காரணம் இந்த வளர்ச்சி திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் கொண்டு வருவோம். எங்களுக்கு நீங்க வாக்களிங்க அப்பொழுதுதான் நாங்கள் இந்த திட்டங்களை கொண்டு வருவோம் என்கிறீர்கள்.

இதே மதுரையில எம்ஸ் வருவதற்கு எத்தனை வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் வரவில்லை. இன்னும் செங்கல்லாவே நிற்கிறது. இதே போன்றுதான் மெட்ரோவை நீங்க சுருக்குறீங்க. தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு நாங்கள் எந்த வகையிலும் உதவி பண்ண மாட்டோம்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் நாங்க உதவி பண்ணுவோம். நீங்க எங்க கொள்கையை ஏற்று எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஒன்றிய அரசாங்கம் சொல்கின்ற செய்தி என்னவென்றால் தமிழகத்தில் பாஜக கூட்டணி வந்தால் தான் நலத்திட்டங்களை நாங்கள் எளிதாக கொண்டு வருவோம். திமுக ஆட்சி செய்தால் நாங்க கொண்டு வர மாட்டோம் என்பதுதான். 

Bihar election commision of india Tamilnadu west bengal SIR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe