Advertisment

அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல்! வாரிசுகளுக்கு எம்.பி. சீட்?

எம்.பி. சீட்டுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனு கொடுப்பது திங்கட்கிழமையன்னைக்கு தொடங்கிடிச்சி.''

Advertisment

""சிட்டிங் எம்.பி.க்கள் ஆர்வமா இருக்காங்களா? புதுசா யார் யார் விருப்பமனு கொடுத்திருக்காங்க?''

""பெரிய இடத்து வாரிசுகள்தான் வரிசை கட்டி நிற்குது. தி.மு.க. ஒரு குடும்பக் கட்சின்னு புகார் சொல்லித்தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சார். ஜெ. காலத்தில் பி.ஹெச்.பாண்டியன், ஜெயக்குமார் போன்றவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எச்சரிக்கையாவே இருந்தார். ஓ.பி.எஸ்.சின் மகனுக்கு அம்மா பேரவையில் மாவட்டப் பொறுப்பு கொடுக்கப்பட்டதை அறிந்தபோது கூட, ஓ.பி.எஸ்.சைக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டிச்சார் ஜெ. இப்ப நிலைமை மாறிடிச்சி.''’

""யார் யாரோட வாரிசுகள் போட்டி போடுறாங்க?''’

ops-son

Advertisment

""பிசினஸில் பிஸியா இருக்கும் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் இந்த லிஸ்ட்டில் இல்லை. பிப்ரவரி 4-ந் தேதி வழங்கப்பட்ட விருப்ப மனுக்கான விண்ணப்பத்தை முதல் ஆளாக வாங்கியவர் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத். போனவாரமே, அவர் எம்.பி. ஆய்ட்டதா நினைச்சி, ’எங்கள் ஓ.பி.ஆர்...., தேனி டூ டெல்லின்னு’ அதிரடிப் போஸ்டர்களை அவரோட ஆதரவாளர்கள் தேனி பகுதிகள்ல ஒட்டி, அப்பகுதி மக்களை அதிர வச்சிருக்காங்க. அதேபோல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெயிட்டான ministerஅமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரும் தங்கள் வாரிசுகளைக் களத்தில் இறக்கும் முயற்சியில் இருக்காங்க. அமைச்சர் சி.வி.சண்முகம், தன் அண்ணன் ராதாகிருஷ்ண னை நிறுத்தத் திட்டமிட, இவரைப் போலவே அமைச்சர் வீரமணியும் தன் சகோதரர் அழகிரி யை எம்.பி.யாக்கிடணும்னு மும்முரமா இருக்காரு.

“""அமைச்சர்கள் சைடில் இந்தளவு வாரிசுரிமையா?''

""இதுக்கு காரணம் என்னன்னா, மந்திரி கள்தான் அவரவர்களின் எம்.பி. தொகுதிகளில் தேர்தல் செலவைப் பார்த்துக்கணும்னு முதல்வர் எடப்பாடி சொல்லிட்டார். அதனால் யாருக்கோ சீட் கொடுத்து, நாம அதற்கு செலவு செய்றதுக்கு பதில், நம்ம குடும்ப வாரிசையே களத்தில் நிறுத்திச் செலவு பண்ணிடுவோம்ங்கிற எண் ணத்தில் இருக்காங்க நம்ம மாண்புமிகுக்கள். நிலைமை இப்படி ஏறுக்கு மாறா போவதால் அ.தி. மு.க.வின் சிட்டிங் எம்.பி.க்கள் பலரும் கொந்தளிப்பில் இருக்காங்க. கட்சிக்குள் இது முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கிட்டு இருக்கு.''’

ops son politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe