atm Photograph: (money)
திருப்பூரில் ஏடிஎம் மெஷினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மளிகைக் கடைக்காரர் போலி நோட்டுகளை தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் 12 எண்கள் கொண்ட 500 ரூபாய் போலி நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதை வங்கி மேலாளர் மணிமாறன் கண்டுபிடித்தார். இதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரித்ததில் கௌதம் என்பவர் கணக்கில் இருந்து இந்த போலி நோட்டுகள் வந்தது தெரிந்து. இது தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
கௌதமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நோட்டை கொடுத்தது யார் என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முருகம்பாளையம் பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கும் ராஜேந்திரன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். அவரிடம் வட்டிக்கு கடனாக 40,000 ரூபாய் வாங்கிய பணத்தில் 12 ஐநூறு நோட்டுகள் போலி நோட்டாக இருந்துள்ளது. அந்த பணத்தை ஏடிஎம் மூலமாக கவுதம் டெபாசிட் செய்த போது மெஷினே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த போலி நோட்டுகள் இருந்துள்ளது.
இதில் மளிகைக் கடைக்காரர் ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து மளிகைக் கடையை போலீசார் ஆய்வு செய்த போது கடையில் போலி நோட்டுகள் அடிக்க பயன்படுத்தப்பட்ட மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் எவ்வளவு நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது, எத்தனை பேரிடம் இதுபோல் போலி நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ராஜேந்திரனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சாதாரணமாக ஏடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்யும் போது கொஞ்சம் கிழிந்த நோட்டாக இருந்தாலே ரிஜெக்ட் ஆகும் சூழலில் மிகவும் அக்யூரட்டாக ஏடிஎம்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மளிகைக் கடைக்காரர் துல்லியமாக போலி நோட்டுகளை அடித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் வியப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us