Skip to main content

2014-ல் ஊழல், விலைவாசி உயர்வு... 2019-ல் வேலைவாய்ப்பின்மை...

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவை தொடர்பான ஊழல் குற்றசாட்டுகளும், விலைவாசி உயர்வுகளும், வளர்ச்சி என்ற கோஷங்களுமே 2014-நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அதிகம் பேசப்பட்டது. 2014 தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானித்ததில் இந்த 3 காரணிகளும் பெரும் பங்கு வகித்தன. 

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வு 19%, ஊழல் 12%, வளர்ச்சியின்மை 11%, வேலைவாய்ப்பின்மை 8% ஆகியவை வாக்களிக்க முக்கிய பங்கு வகித்ததாக வளரும் சமூகங்கள் குறித்தான ஆய்வு மையத்தின் சர்வே தெரிவிக்கிறது. 

 

lok sabha election 2019

 

டெல்லியில் உள்ள வளரும் சமூகங்கள் குறித்தான ஆய்வு மையம் தன்னாட்சி பெற்ற சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். 1997-ஆம் ஆண்டிலிருந்து பல அரசியல் நிபுணர்களையும், ஆசிரியர்களையும் கொண்டு தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
 

சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 12%, குடிநீர் பிரச்சனை 11%, வளர்ச்சியின்மை 9% ஆகிய காரணிகள் பெரிதாக இருந்தன. சத்தீஸ்கர் தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 26%, விலைவாசி உயர்வு 17%, வளர்ச்சியின்மை 7%, ஊழல் 6% ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தது. 
 

மத்தியப்பிரதேச தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 21%, விலைவாசி உயர்வு 17%,  வளர்ச்சியின்மை 6%, இருந்தது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 26%, விலைவாசி உயர்வு 15%, ஊழல் 5%, வளர்ச்சியின்மை 5% ஆக இருந்ததாக சர்வே முடிவுகள் கூறுகின்றன.   

 

lok sabha election 2019


   
 

இந்த நிலையில் புதிதாகத் தொடங்கப்படாத வேலைவாய்ப்புகளும், பல படித்த இளைஞர்கள் அடிப்படை வேலை இல்லாமல் இருப்பதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஷிங்டனில் உள்ள பியூ ஆராய்ச்சி மையம் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சமூகப் பிரச்சினைகள், மக்கள் கருத்துகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

 

lok sabha election 2019


 

76% மக்கள் வேலைவாய்ப்பின்மையை பெரிய பிரச்சனையை கருதுகின்றனர். நாட்டில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலைவாய்ப்பு வாய்ப்பு முதலிடத்தில் உள்ளது. ஊழல் அதிகாரிகள், பயங்கரவாதம் மற்றும் குற்றம் ஆகியவை நாட்டின் அடுத்தகட்ட பிரச்சினைகளாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு நிலை முன்னேற்றமடைந்ததாக 21 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 67 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்ததாகத் தெரிவித்தனர். 
 

வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது  உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களில் 7.8% மற்றும் கிராமப்புறங்களில் 5.3% ஆக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. 
 

இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் சி.எம்.ஐ.இ. வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாகவும், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5.9 சதவீதமாகவும் இருந்தது. சி.எம்.ஐ.இ. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்கள் வேலை இழந்ததாகத் தெரிவித்திருந்து. பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை பெரும்பாலானோர் வேலை இழந்ததற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
 

இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. 

 

 

 

 

Next Story

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.

Next Story

முதல்வர் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; ஆதாரத்துடன் வெளியிட்ட எம்.பி.

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Allegation of sensationalism against Chief Minister's wife Published with evidence by M.P

 

அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

 

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெளரவ் கோகாய், “உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலமைச்சரின் மனைவியின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு ரூ. 10 கோடி மானியத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கவும்” என்று கூறி மானியம் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, ஹிமந்த பிஸ்வா, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.