Advertisment

திமுக அமைச்சரவையில் எட்டு முன்னாள் அதிமுக பிரமுகர்கள்...

ex admk members in dmk cabinet

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் தலைமையில் கீழ்- பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, பொதுநிர்வாகம், உள்துறை, மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்புத் திட்டச் செயலாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இலாகா,

நீர்பாசனத்துறை - துரைமுருகன்,

நிதித்துறை - பழனிவேல் தியாகராஜன்,

உள்ளாட்சித்துறை - கே.என்.நேரு,

மின்சாரத்துறை - செந்தில் பாலாஜி.

சுகாதாரத்துறை - மா.சுப்ரமணியன்,

பொதுப்பணித்துறை - ஏ.வ.வேலு,

பள்ளிக்கல்வித்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

கூட்டுறவுத்துறை - ஐ.பெரியசாமி,

உயர்கல்வித்துறை - பொன்முடி,

வீட்டுவசதித்துறை - முத்துசாமி,

சட்டத்துறை - ரகுபதி,

ஊரகத் தொழில்துறை - தா .மோ.அன்பரசன்,

செய்தி,விளம்பரத்துறை - மு.பெ.சாமிநாதன்,

மீன்வளத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்,

போக்குவரத்துத்துறை - ராஜகண்ணப்பன்,

வனத்துறை - க.ராமச்சந்திரன்,

உணவுத்துறை - சக்ரபாணி,

தகவல் தொழில்நுட்பத்துறை - மனோ தங்கராஜன்,

சுற்றுலாத் துறை - மதிவேந்தன்,

ஆதிதிராவிடர் நலத்துறை - கயல்விழி செல்வராஜ்,

வருவாய்த்துறை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,

சுற்றுச்சூழல் துறை - வி.மெய்யநாதன்,

பால்வளம் - சா.மு.நாசர்,

அறநிலையத்துறை - சேகர்பாபு,

தொழில்துறை-தங்கம் தென்னரசு,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - எஸ்.எஸ். சிவசங்கர்

வேளாண்துறை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

ஊரகவளர்ச்சித்துறை - கே.ஆர்.பெரியகருப்பன்,

சமூக நலத்துறை - கீதாஜீவன்,

கைத்தறித்துறை - ஆர்.காந்தி,

வணிகவரித்துறை - பி.மூர்த்தி,

சிறுபான்மை நலத்துறை - கே.எஸ்.மஸ்தான்,

தொழிலாளர் நலத்துறை - சி.வி.கணேசன்.

இதில் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எஸ்.ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் இதற்கு முன்பு அதிமுகவை இருந்து பல்வேறு காலகட்டங்களில் திமுகவிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe