Skip to main content

புதிய பெட்ரோலால் வண்டிக்குப் பிரச்சனையா?

Published on 02/02/2019 | Edited on 04/03/2019

புதிய பெட்ரோலை போட்டால் வாகனங்கள் பாதியிலேயே நின்றுவிடும்’ என்ற பகீர்த்தகவல் டூவீலர்,… த்ரீவீலர்,… ஃபோர்வீலர் என ஏ டூ இசெட் வாகன ஓட்டிகள் மத்தியில் பலத்த சர்ச்சையை உண்டாக்க விசாரணையில் இறங்கினோம். அப்போதுதான்… வாகன ஓட்டிகளை ஏமாற்றும் டுபாக்கூர்த்தனமும் அம்பலமானது.

மத்திய அரசின் ஒப்புதலோடு பெட்ரோலில் 10% "எத்தனால்' எனப்படும் வேதிப்பொருளை கலந்து பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன பெட்ரோலிய நிறுவனங்கள். அதாவது, 1 லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி லிட்டர். 10,000 லிட்டர் பெட்ரோலில் 1,000 லிட்டர் எத்தனாலை கலந்துகொள்ளலாம். "எத்தனால்' என்பது சர்க்கரையிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள்.

 

petrol



"இந்த எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் வாகனம் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளது'’என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரிடமும் புகார் கொடுத்த தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முரளி நம்மிடம், “""எத்தனால் கலந்த புதிய பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசானது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இல்லை. இதனால், சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலை பார்த்து "கலப்பட பெட்ரோலா?' என்று சந்தேகிக்கிறார்கள் வாகன ஓட்டிகள். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் விலை கூடுதலானது. அதுவே, இந்தியாவில் கரும்பிலிருந்து கிடைக்கும் விலைகுறைந்த எத்தனால் கலந்தால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாது. எஞ்சினும் மாசுபடாமல் ஸ்பீடு மற்றும் மைலேஜ் கிடைப்பதோடு புகை குறைந்து சுற்றுச்சூழலும் மாசுபடாமல் இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால், எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் பெட்ரோலிலுள்ள எத்தனால் அப்படியே தண்ணீராக மாறிவிடும் தன்மை கொண்டது''’’ என்று ஷாக் கொடுத்தவர், “""பெட்ரோல் பங்குகளிலுள்ள டேங்குகளின் அடியில் சுமார் 5 அங்குலம் (ஒய்ஸ்ரீட்ங்ள்) தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான், பெட்ரோலை உறிஞ்சக்கூடிய பம்பை 5 அங்குலத்துக்கு மேல் வைத்திருப்பார்கள். அதை உள்ளே சென்று சுத்தம் செய்து நீரை வெளியேற்றவும் இயலாது. மேலும், வழக்கமான பெட்ரோலில் தண்ணீர் கலந்தாலும் மிக்ஸ் ஆகாது. அடர்த்தி குறைவாக இருப்பதால் தண்ணீர் அடியிலேயே தங்கிவிடும். அதையும் மீறி மிகக்குறைவான அளவு தண்ணீர் மிக்ஸ் ஆனாலும் வாகனத்திற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஆனால், எத்தனால் கலந்த 10,000 லிட்டர் புதிய பெட்ரோல் என்றால் 9,000 லிட்டர் பெட்ரோலில் 1,000 லிட்டர் எத்தனால் கலந்திருக்கும். பெட்ரோல் பங்க் டேங்கிற்கு அடியிலுள்ள தண்ணீர் அதில், கலந்துவிட்டால் 1,000 லிட்டரும் தண்ணீராக மாறிவிடலாம். பெட்ரோலில் இவ்வளவு தண்ணீர் கலந்துவிட்டால் ஓட்டிச்செல்லும்போது வாகனங்கள் பாதியிலேயே நின்றுவிடும் நிலை ஏற்படும்''’என்று எச்சரிக்கிறார்.

petrol"எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்த ஆபத்துமில்லை. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அம்பானி போன்றவர்களுக்குத்தான் ஆபத்து'’என்கிற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் டி. ரவீந்திரன் நம்மிடம், ""உலக நாடுகளிலேயே கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியாதான். நம்பர்-1 இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் பெட்ரோலில் 50 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்கிறார்கள். எத்தனால் உற்பத்தியாளர்களிடம் ஒரு லிட்டர் எத்தனால் 43.46 பைசாவிலிருந்து 59.19 பைசாவரை விலை நிர்ணயம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதற்காக, 6 ஆயிரத்து 139 கோடி ரூபாய் வட்டியில்லா கடனையும் கொடுத்துள்ளது. உள்நாட்டு தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதால் நமது நாட்டில் 10 சதவீதம் எத்தனால் கலப்பது என்பதை 20 சதவீதம் ஆக்கினால் அந்நிய செலாவணியையும் குறைக்க முடியும்''’என்கிறவர் பெட்ரோல் இறக்குமதியாளர்கள் செய்யும் டுபாக்கூர் தனத்தையும் விவரிக்கிறார். “""2012 மே மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 109.45 பைசா என சர்வதேச மார்க்கெட்டில் விற்றபோது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 73.18 பைசாவுக்கு விநியோகித்தார்கள். 2016-ல் 40.68 என விலை குறைந்தபோதும் 2017-ல் 52.51 க்கு விற்றபோதும் பெட்ரோல் விலையை குறைக்காமல் வரியை உயர்த்தி வருடத்துக்கு 1 லட்சம் கோடி கூடுதலாக வரி வசூல் செய்துவிட்டார்கள். வருடத்துக்கு ஒவ்வொரு இந்தியரிடமும் 4,250 ரூபாய் பெட்ரோலிய வரியை கூடுதலாக வசூலிக்கிறார்கள். ஆனால், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கூட்டிக்கொண்டே போவதுதான் மிகப்பெரிய மோசடி''’என்கிறார் அவர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திற்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்தான் "எத்தனால்' கலந்த பெட்ரோலை விநியோகிக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிட்டெட் நிறுவனம் சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பெங்களூருவிலும் பிரித்துக்கொண்டு விநியோகிக்கின்றன. அதனால், சென்னை ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பொதுமேலாளர் சந்தீப்பை தொடர்புகொண்டபோது, அவர் வெளியூரில் இருப்பதால் துணை பொதுமேலாளர் பென்னிதாமஸ் பேசினார். “""எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால் எத்தனாலும் தண்ணீராக மாறிவிடும் என்பது உண்மைதான். ஆனால், ஏற்கனவே 5% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விநியோகத்தில் இருந்தபோது எந்த வாகனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டதில்லை. அதற்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்கிவருகிறோம்''’என்றார்.

10% எத்தனால் கலப்பது தற்போதுதான் ஆதாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது என்கிறார்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஐ.ஏ.எஸ். மதுமதியிடம் கேட்டபோது, ""எத்தனாலில் தண்ணீர் கலந்துவிட்டால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஆராயப்படும்''’என்று உறுதியளித்தார்.

எத்தனாலில் தண்ணீர் கலந்துவிட்டால் என்ன செய்வது என்பது ஆராயப்படவேண்டும். அதேபோல், விலைகுறைவான எத்தனாலை 10 சதவீதம் கலந்து விற்றால் பெட்ரோல் விலை நியாயமாக குறைந்திருக்க வேண்டும். ஆனால் அதே 74 ரூபாய் 3 பைசாவுக்கு பெட்ரோலை விற்பது என்ன நியாயம்? நியாயம் கேட்கிறார்கள் பொதுமக்கள்.



 

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.