அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து பற்றி உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்! பயத்தில் அதிமுகவினர்!

அமைச்சரவையிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்சியாகத்தான் பார்க்கிறார் கள் ஜூனியர் அமைச்சர்கள். அதேசமயம், "அமைச்சரவையை மாற்றியமைத்து புதியவர் களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற அழுத்தத்தை கொடுக்கத் துவங்கியுள்ள சீனியர் எம்.எல்.ஏ.க்கள், முதல்வரின் வெளிநாட்டு டூருக்கு முன்பாக இதனை எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பயணத்தை மிக முக்கியமாக கருதும் எடப்பாடி, வெளிநாட்டி லிருந்து தமிழகம் திரும்பும்வரை தனது பொறுப்பு களை ஒப்படைப்பது குறித்துதான் இறுதி முடிவை எடுக்க முடியாமல் தவித்தபடி இருக்கிறாராம்.

admk

நம்மிடம் பேசிய சீனியர் அ.தி.மு.க.வினர், "தமிழகத்தை விட்டு 7 நாட்களுக்கு அதிகமாக முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டால் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனியர் அமைச்சர்களில் ஒருவரிடமோ பலரிடமோ முதல்வரின் பொறுப்புகள் பகிர்ந்தளிக் கப்படுவது மரபு. அதற்கேற்ப சில ஏற்பாடுகளை முதல்வர் செய்துவிட்டு பயணத்தை மேற்கொள்வார். அந்த வகையில், எடப்பாடிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் அந் தஸ்தில் இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்புகளை கொடுப்பதுதான் இயல்பானது. அப்பல் லோவில் அட்மிட்டாகி செயல்படாமல் ஜெய லலிதா இருந்த போது, அவர் கவனித்து வந்த பொறுப்புகள் ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கட்டத்தில் மாற்றப்பட்டன. இதற்கான உத்தரவை அன்றைய கவர்னர் வித்யாசாகர் பிறப்பித்தார்.

admk

இப்போதோ "ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்புகளை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' என பா.ஜ.க. தலைமை அழுத்தம் கொடுத்த நிலையிலும் அதற்கு உடன்பட மறுத்த எடப்பாடி, "வெளிநாடுகளில் இருந்தபடியே என்னால் நிர்வாகத்தை கவனிக்க முடியும். நேரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் செல்லட்டும். மற்றபடி இந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்பட வேண்டிய நிலை வரப்போவதில்லை. ஒரு வேளை அவசர முடிவு எடுக்க வேண்டிய சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் என்னிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாமே!

இன்றைய டெக்னாலஜியில் எங்கிருந்து வேண்டுமானாலும் நிர்வாகத்தை கவனிக்க முடியும். அதனால் பொறுப்புகளை மாற்றி யமைக்க தேவையில்லையே என பிடிவாதம் பிடிக்கிறார். மரபுப்படி பொறுப்புகளை ஒப்ப டைக்க வேண்டுமெனில் ஓ.பி.எஸ்.சிடம் கொடுக்க தற்போது வரை தயாரில்லை. ஆனால், டெல்லியிலிருந்து வரும் கட்டளை யின் அழுத்தம் அதிகரித்திருப்பதால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறு கிறார். இந்த நிலையில்தான், "எங்களது இலாகாவை மாற்றிக் கொடுங்கள்' என அமைச்சர்கள் சிலரும், "எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்' என எம்.எல்.ஏ.க்கள் சிலரும் எடப்பாடியிடம் கொடி பிடிக்கிறார்கள். அதற்கு எடப்பாடி தந்த பதில் அவர்களை மிரள வைத்துவிட்டது''‘என்கின்றனர்.

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர்தான் அமைச்சரவையில் இடம் பெற முடியும். அந்த வகையில் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகபட்சம் 35 தான். தற்போது எடப்பாடியின் கேபினெட்டில் 31 பேர் அமைச்சர்களாக இருப்பதால் இன்னும் 4 பேர் அமைச்சராக வாய்ப்பு உண்டு. இதனை நினைத்துதான் வன்னியர், நாடார், தலித் சமூக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு எடப்பாடியை அணுகியுள்ளனர். அதேபோல, ஜூனியர் அமைச்சர்கள் 5 பேர், பெண் அமைச்சர்கள் 2 பேர் தங்களது இலாகாவை மாற்றிக்கொடுங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு எடப்பாடி, "உங்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அமைச்சர்களைப் பற்றியும் , அனைத்து எம்.எல்.ஏ.க்களைப் பற்றியும் பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் எத்தனை கோடிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது? அதில் அமைச்சர்கள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரை யார், யாருக்கு எவ்வளவு பங்கு பிரிக்கப்படுகிறது? அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரின் சொத்து விபரங்கள் என்ன? பினாமிகள் யார்? என்பதெல்லாம் எனக்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் தனி ரெக்கார்ட் போடுமளவுக்கு தகவல்கள் இருக்கின்றன. அதனால், அமைச்சர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கவோ, துறையை மாத்திக் கொடுக்கச்சொல்லி நச்சரிப்பதோ கூடாது. எல்லோரும் செல்வச் செழிப்புடன்தான் இருக்கிறீர்கள். அப்புறம் எதற்கு அமைச்சர் பதவி ? அமைச்சரவையை எப்போ மாத்தணும்ங்கிறது எனக்கு தெரியும்' என சொல்லியிருக்கிறார். அவருடைய இந்த பேச்சு அவர்களை மிரள வைத்துவிட்டது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பற்றிய ஊழல்கள், சொத்துக்கள், க்ரைம்கள், பினாமிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உளவுத்துறை மூலம் ஜெயலலிதா எப்படி சேகரித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பாரோ, அதே போல ஒவ்வொருத்தரைப் பற்றியும் நெகடிவ் தகவல்களை சேகரித்து வைத்துள்ளார் எடப்பாடி. உளவுத்துறை மட்டுமல்லாது எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் தகவல்கள் சேகரிப்பதில் உதவி புரிந்துள்ளனர். அதனால், ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடியை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ மிரட்டி பணியவைக்க முடியாது என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே, அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட மணிகண்டன், எடப்பாடியை சந்திக்க முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால், அவரை சந்திக்க எடப்பாடி மறுத்து வருவதால் அவர் மீது ஏக கடுப்பில் இருக்கும் மணிகண்டன், "எடப்பாடிக்கு எதிரான சீக்ரெட்டுகளை டெல்லிக்கு அனுப்பி வைப்பேன்' என தனது நட்பில் இருக்கும் அமைச்சர்களிடம் சொல்லியிருப்பதும் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒவ்வொருவரின் குடுமியும் இன்னொருவர் கையில்.

admk minister MLA property report
இதையும் படியுங்கள்
Subscribe