Skip to main content

பி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...?

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

EPF

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 2017-2018-ம் நிதியாண்டில் 8.55 சதவிகிதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அதில் 0.10 சதவிகிதம் உயர்த்தி 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அதிகரித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. 
 

கடந்த மூன்று நிதியாண்டுகளாக உயர்த்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும், இந்த 8.65 சதவிகிதம், 2018-2019 நிதியாண்டுக் கணக்கிலிருந்து அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு வாயிலாக சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஐந்து நிதியாண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் எப்படி இருந்தது என்பதன் புள்ளிவிவரம்,
 

2012-2013 நிதியாண்டில் - 8.50%

2013-2014 நிதியாண்டில் - 8.75%

2014-2015 நிதியாண்டில் - 8.75%

2015-2016 நிதியாண்டில் - 8.80%

2016-2017 நிதியாண்டில் - 8.65%

2017-2018 நிதியாண்டில் - 8.55%

2018-2019 நிதியாண்டில் - 8.65%

 

 

 

 

Next Story

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Futures Deposit Fund Interest Rate Reduction

 

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

2021-2022ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே வருங்கால வைப்பு நிதியின் குறைந்தபட்ச வட்டிவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

பி.எஃப் மீதான வட்டி விகிதம் குறைப்பு - தொழிலாளர்கள் அதிர்ச்சி 

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

Reduction of interest rate on PF

 

பி.எஃப் மீதான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி விகிதம், 2020-21 நிதியாண்டில் 8.5 சதவிகிதமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த வட்டி விகிதத்தை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பி.எஃப் மீதான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக குறைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்தப் பரிந்துரைக்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வட்டி விகித குறைப்பு அமலுக்கு வரவுள்ளது.

 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவருவதால் பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்திவரும் நிலையில், இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃப் மீதான வட்டி விகித குறைப்பு தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.