Skip to main content

வாடிக்கையாளர்களின் வாசாப்பு தாங்க முடியல... கவலையில் தபால் ஊழியர்கள்

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

அஞ்சல்துறை ஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை துறையாக இருந்து வந்தது. கிராமங்களுக்கு தகவல்களை கொண்டுபோய் சேர்த்தது. தகவல்தொடர்பு நவீனமாகிவிட்டாலும் கூட இப்போதும் தபால், மணியாடர், பார்சல், விரைவு தபால், அதிவுரைவு தபால் என பணிகள் நடப்பதால் மக்கள் பயனடைகிறார்கள். இது மட்டுமா? அஞ்சலகம் மூலம் டெலிபோன் பில், தேர்வு கட்டணம் தொகை சேமிப்பு பணம், அயல்நாடுகளில் இருந்து பண பரிமாற்றம் என ஏகப்பட்ட சேவைகளை செய்து வருகிறது. 
 

 

 

அடுத்து வங்கிகள் போல வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்தை எடுக்க ஏடிஏம் கார்டு கொடுக்க உள்ளனர். இதன் மூலம் தங்கள் பணத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட பணிகளை செயல்படுத்திவரும் அஞ்சல்துறைக்கு போதுமான பணியாளர்களை நியமிக்கவில்லை. உதாரணமாக விருத்தாசலம் அஞ்சலக கோட்டத்தில், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, பெண்ணாடம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரண்டு மாவட்டங்கள் கலந்துள்ள 80க்கும் மேற்ப்பட்ட அஞ்சலங்கள் இயங்கி வருகின்றன. திட்டக்குடி தாலுக்காவில் உள்ள அஞ்சலகத்தின் மூலம் செவ்வேறு, இடைச் செருவாய், கீழ்ச் செருவாய், கீரணர், பெருமுளை, சிறுமுளை, கோடங்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கிளை அஞ்சலங்களுக்கு வெளியூர்களில் இருந்து வரும் தபால் கட்டுகளை பிரித்து அனுப்ப வேண்டும். உள்ளூர் தபால் கட்டுகளை சேர்த்து பல ஊர் அனுப்ப வேண்டும். மேற்படி பணிகளோடு அஞ்சகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.


 

Employee shortage in post office Customers feel grief!


 

திட்டக்குடி மாவட்ட எல்லையில் உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த, அகரம், சீகூர், அத்தியூர், வயலூர், வயலப்பாடி, கிரணூர், துங்கபுரம், கோவில்பாளையும், தேனூர், அங்கனூர், காலிங்கயராயநல்லூர் மற்றும் திட்டக்குடியை சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களும் இங்குதான் வந்து தங்கள் பணியை செய்ய சொல்கிறார்கள். இவ்வளவு வேலைகளையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிறகு 1.30 மணி முதல் 3 மணி வரையும் சேவை நேரம் என்பதால் எல்லா பணிகளையும் முடிக்க முடியாது. இங்கே ஒரு அஞ்சல் அதிகாரியும், இரண்டு உதவியாளர்கள் என மூன்று பேர் பணியாற்றினர். தற்போது  இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். இதிலே ஒருவர் விடுமுறை எடுத்தால் ஒரே ஒரு ஆள்தான். இத்தனையும் செய்ய வேண்டும். இதனால் இங்கே சேவை பணிக்காக வரும் வாடிக்கையாளர்கள் இங்கு பணிகள் காலதாமதம் ஆவதாலும், இன்று முடியாது நாளை வா என திருப்பி அனுப்புவதாலும் அஞ்சலக ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் சண்டைக்கு போகிறார்கள். இது தினசரி காட்சியாக உள்ளது.
 

 

 

ஏன் கால தாமதம் என்று கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல்துறையில் ஏன் பணிவரன்முறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலக ஊழியரிடம் கோட்டோம். ஏற்கனவே ஓய்வு பெற்று காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவில்லை. இன்னும் சில மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதனால் பலர் செய்த வேலையை ஒருவரே செய்ய வேண்டி வரும்.
 

அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் பணிகளை மட்டும் மேலும் மேலும் திணிக்கிறார்கள். இதனால் திணறிப்போன நான், எனது சம்பளத்தில் மாதம் 4,000 ரூபாய் கொடுத்து ஒரு படித்த இளைஞனை எனக்கு உதவியாக வைத்து பணிகளை முடிக்கிறேன். என்ன செய்வது வேலையைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி இல்லையே என்கிறார் வேதனையும், விரகத்தியுமாக. ஆகா, ஓகோ இந்தியா ஒளிர்கிறது என மோடியும் அவரது அரசும், மோடிமஸ்தான் வித்தை காட்டுகிறது. மோடியோ நாடு நாடாக போய் வித்தை காட்டி வருகிறார். இந்திய மக்களை பற்றிய கவலையே இல்லாமல்...

 

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.