Skip to main content

நீட் விவகாரத்தில் நாங்கள் செய்ததைத்தானே திமுகவும் செய்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

ரகத

 

 

தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான இன்று நீட் விலக்கு கேட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவைத் தவிரப் பெருவாரியான கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேரவை வாயிலில் பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பேசினார், அதில், "  இன்று காலை அவை தொடங்கியதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்சனைகள் பற்றி அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். முதலாவதாக வாணியம்பாடி அருகே வாசீம் என்ற நாற்பது வயதுடைய இளைஞர் கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டுள்ளார். தன் மகனுடன் மசூதிக்கு வந்து தொழுகை செய்துவிட்டுச்  செல்லும்போது மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினேன். 

 

அடுத்து இன்றைக்கு நீட் தேர்வு காரணமாக ஒரு உயிர் போய் உள்ளது. அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. இதனால் மாணவர்கள் மனம் வெதும்பி இருக்கிறார்கள். மாணவர்களின் பயத்தினை போக்கும் வகையிலான எந்த முயற்சியையும் இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாணவர்களின் உயிரோடு விளையாடுவது போன்று அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு. இதைத் தமிழக அரசு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.  

 

அவ்வாறு செய்யாமல் விட்டதன் விளைவு தற்போது வரை அது எதிரொளித்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்கள் அனைத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் தான் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறது. எனவே நாம் விலக்கு பெறுவதைக் காட்டிலும், நாம் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை அழைத்த செல்ல வேண்டும். கடந்த காலங்களில் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக விலக்கு வேண்டி பேரவையில் மசோதா தாக்கல் செய்த நிலையில், அதனை திமுகவைத் சேர்ந்த ஆ. ராசா கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது இவர்கள் மீண்டும் நாங்கள் மசோதா தாக்கல் செய்து உள்ளார்கள். நாங்களும் இதனை அதனை ஆதரிக்கிறோம். ஆனால் திமுகவினர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்" என்றார்.

 

 

 

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.

Next Story

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.