தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்பொருட்டு இன்று காலை தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவர் கவனித்து வரும் துறைகளை யாரிடம் முதல்வர் ஒப்படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் தனது துறைகளை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. அவரது துறைகளை யாராவது கவனிப்பார்களா? என்ற செய்தி கூட இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இதற்கு முன்னால் தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள் வெளிநாடு சென்றபோது என்னென்ன நடந்தது என்பதை பார்ப்போம் 1968-ல் முதல்வராக இருந்த அண்ணா அமெரிக்க சென்றபோது அமைச்சர்களாக இருந்த நெடுஞ்செழியன் மற்றும் கலைஞரிடம்தனது துறைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு சென்றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
1969-ல் அண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது அவரது துறைகள் நான்கு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு முதல்வர் பொறுப்பு தற்காலிகமாக நெடுஞ்செழியனுக்கும் கொடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு கலைஞர்வெளிநாடு சென்றபோது அவரது துறைகள் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்றபோது அவருடைய துறைகள் நாஞ்சில் மனோகரனிடமும் கொடுக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது துறைகள் நெடுஞ்செழியனிடம் துறைகள் ஒப்ப்டைக்கப்பட்டன. அதேபோல் 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு ஜானகி முதல்வராக பொறுப்பேற்கும் வரை அவரது பொறுப்புகளை நெடுஞ்செழியனே கவனித்து வந்தார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது துறைகள் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது