Advertisment

பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுத்தது சரியா? - மனநல மருத்துவர் ஷாலினி பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய இரண்டு சீசன்களிலும் கலந்துகொண்டவர்கள் அதற்கு பிறகு புது அடையாளங்களை பெருகின்ற அளவுக்கு பிக் பாஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருந்தது. அதேபோல், தற்போது நடந்துவரும் பிக் பாஸ் 3வது சீசன் முந்தைய சீசன்களைவிடவும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. இன்நிலையில் பிக் பாஸ் 3-யின் போட்டியாளர்கள் குறித்தும், அவர்களின் செயலுக்கான விளைவு குறித்தும் மனநல மருத்துவர் ஷாலினியுடன் நடந்த உரையாடலின் தொகுப்பு.

Advertisment

Dr.shalini about big boss

முந்தைய சீசன்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் படுக்கையறை, பெண்கள் படுக்கையறை என்று பிரித்துவைத்திருப்பார்கள். தற்போது அப்படி பிரிக்காமல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? இது ஒரு கலாச்சார சீர்கேடு இல்லையா?

இது கலாச்சார சீர்கேடு என்று சொல்லமுடியாது. எப்போதும் கலாச்சாரம் சிறப்பான நிலையில் இருந்ததாக நான் நம்பவில்லை. அது தொடந்து சீர்கேட்டில்தான் இருக்கிறது. சீர்கேடுகளும் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் இறங்கவேண்டுமா? வியூவர் ஷிப்பை அதிகப்படுத்துவதாக நினைத்து அதை செய்கிறார்கள். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கப்போவதில்லை. ஆனால், இது பேசுபொருளாக மாறும் என்பதற்காக ஒரே அறையை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு அல்பத்தனமாக செய்திருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.

Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எல்லோரும் நடிகர்கள். அவர்களுக்கு கேமரா இருப்பது தெரியும். ஆனால், கமல் கூறும்போது, அவர்கள் கேமரா இருப்பதை மறந்துவருகிறார்கள் என்கிறார். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

கண்டிப்பாக கேமரா இருப்பதை அவர்களால் மறக்கமுடியாது. வெளியில் வந்தபிறகும் எல்லா இடங்களிலும் கேமரா இருப்பதாகவே அவர்கள் பயப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்க நாங்கள் நிறைய போராடவேண்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கேற்பவர்களுக்கு மனதளவில் மிகுந்த பாதிப்புகளைக் கொடுக்கிறது. அது கமலுக்கும் தெரிந்திருக்கும். இருந்தும் அவரது சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் ஆடைகள் குறித்தும் பல சர்ச்சைகள் எழுகின்றன. அப்படி உடை அணிவது அவர்களின் உரிமை, சமத்துவம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சிலருக்கு ‘எக்ஸ்டாப்லிஷ் டெண்டன்சி’எனப்படும் என்னைப்பார், என் அழகைப்பார் என்று தன்னை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ளும் மன நோய் இருக்கும். இந்த நோய் இருக்கும் ஆண்கள் பெண்களின் முன் தன் ஆடைகளை கழற்றிவிட்டு என்னைப்பார்த்தாயா நான் எவ்வளவு பெரிய ஆண் என்று கேட்பார்கள். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, ஆபாசமாக உடையணியும் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு எல்லோரும் இதைப் பார்க்கிறார்கள், இதனால் என்ன விளைவு நடக்கும் என்று தெரியும், அந்த விளைவை தூண்டுவதற்காகவே அவர்கள் இப்படி உடையணிகிறார்கள்.

மதுமிதா நான் தமிழ் பெண், எனக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று கூறும்போது, “தமிழ்பொண்ணா இருந்தா ஏன் நடிக்கவர”என்று கேட்கிறார்கள். இது சரிதான?

ஏன் தமிழ்பெண் நடிக்க கூடாதா? அவர்களுக்கு நடிப்பு வராதா? சினிமா என்றால் வேறெதற்காகவோ என்று நினைத்துக்கொண்டு அவர்கள் அப்படி பேசியிருக்கிறார்கள். அதற்கு சினிமா காரர்கள்தான் எங்களை எப்படி இழிவாக பேசலாம் என்று சண்டைப்போட வேண்டும். நான் ரொம்ப பெரிய பணக்காரன் என்பதற்காக ஒரு ஆண் நிறைய நகைகளை போட்டுக்கொண்டு வந்தால், உன்கிட்ட பணம் இருந்தால் அதை இப்படி காட்டிகொள்ளவேண்டுமா என்று கேட்பார்களோ, அப்படித்தான் நான் ஒரு பேரழகி, மிக வனப்பான உடலைக் கொண்டவள் என்று காட்டிக்கொள்வதும் சீப்பான விஷயம் தானே. எல்லா பெண்களிடமும் இருப்பது தானே இவர்களிடமும் இருக்கிறது, அதைப்போய் அல்பமாக வெளிப்படுத்தவேண்டுமா?

kamalhassan kamal bigboss Biggboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe