Skip to main content

திராவிட கலாச்சாரமும் ஆரிய கலாச்சாரமும் – எஸ்.வி.சேகருக்கு விளக்கம்!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

 

லஞ்சம் வாங்குவதுதான் திராவிட கலாச்சாரம் என்று ஆரிய கலாச்சாரத்தில் வளர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். இவரெல்லாம் ஒரு ஆளா என்று இந்தச் செய்தியை போகிறபோக்கில் தள்ளிவிட்டு போய்விடலாம்.


 

s.v. sekar

 

ஆனால், ஆரியர்கள் யார்? அவர்களுடைய கலாச்சாரம் என்ன என்பதை வரலாற்றுபூர்வமாக அறிந்திருப்பதால் அப்படி விட்டுவிட்டு போக முடியவில்லை.

 

ஆரியர்கள் எனப்படுவோர் கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவிலிருந்து மாடு மேய்த்துக்கொண்டு வந்தவர்கள். அவர்கள் வருகைக்கு முன்னரே சிந்து சமவெளியில் திராவிடர்களுக்கு சொந்தமான அழகிய நாகரிக வாழ்க்கை இருந்தது. இதெல்லாம் வரலாறு.

 

அந்த வரலாறை திருத்தி எழுதும் ஆரியரின் முயற்சி பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் வாழ்ந்த மக்களை ஏமாற்றி இடம்பிடித்து, பிறகு அவர்களுக்குள் மோதலை உருவாக்கி பிளந்து வயிறு கழுவியவர்களே ஆரியர்கள் என்கிறார்கள்.

 

அவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியாது. ஆனால் உழைப்போரை ஏமாற்றி பிச்சையெடுத்து வாழத் தெரிந்தது. இதை அவர்கள் அறிவு என்று சொல்லிக் கொண்டார்கள். தங்களை ஏற்காதோரை, மற்றவர்களிடம் கோள்மூட்டி சண்டையிட்டு அழிக்கும் இழிகுணம் மிக்கவர்களாக ஆரியர்கள் இருந்தார்கள்.

 

விரிவாக நிறையச் சொல்லலாம். ஆனால், எஸ்.வி.சேகருக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் ஆரியர்கள் தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள மேற்கொண்ட தந்திரங்கள் ரொம்ப கீழ்த்தரமானவை என்பது எஸ்.வி.சேகருக்கும் தெரியும். அதை மறைக்கவே அவர் திராவிட கலாச்சாரத்தை விமர்சிக்கிறார். அவர் பேச்சிலேயே, தமிழகத்தில்தான் பார்ப்பனர்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார். அதுவும் உண்மைதான், ஏனென்றால் பார்ப்பனர்களின் அடிப்படை கலாச்சாரம் என்ன என்பதை தமிழர்களுக்கு நன்கு புரிய வைக்க இங்கே தந்தை பெரியார் இருந்தார்.

 

தமிழ் மன்னர்களையும், நில உடமையாளர்களையும் அண்டிப் பிழைத்தவர்களே ஆரியர்கள். அவர்கள் வருகைக்கு பின்னரே, தமிழகத்தின் சமத்துவம் பறிபோனது. மக்களை பிரித்து, மக்களுக்கும் மன்னர்களுக்கு இருந்த நெருக்கத்தை ஒழித்தவர்கள் ஆரியர்கள்.

 

மன்னர்களை புகழ்ந்து பிச்சையெடுத்து, கடவுளுக்கு புரோக்கர்களாகி, பூஜை செய்வதற்கு காணிக்கை என்ற பேரில் பிச்சையெடுத்து, கடவுளிடமும், மன்னர்களிடமும் காரியம் சாதித்துக் கொடுப்பதாக லஞ்சம் பெற்று வாழ்க்கையை ஓட்டிய கலாச்சாரத்தை பெரியார் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

 

தன்னைத் தவிர யாரும் படித்துவிடக்கூடாது என்று விதிகளை வகுத்து, அதன்மூலம் தான்மட்டுமே அறிவாளி என்று அலப்பறை செய்த ஆரியத்தை, இடைக்காலத்தில் பவுத்தமும், சமணமும் ஒழித்த கதையையே இருட்டடிப்பு செய்தவர்கள் ஆரியர்கள். அவர்கள் இருட்டடிப்பு செய்த வரலாற்றை அறிந்தவர்கள் திராவிடர்கள். திராவிட கலாச்சாரம் என்பது யாதும் ஊரே யாவரும் உறவினர்களே என்ற பரந்த சிந்தனையை உள்ளடக்கியது.

 

ஆனால், ஆரிய கலாச்சாரமோ, மக்களை சாதியாய் பிரித்து மோதலை ஏற்படுத்தி ரத்தம் சிந்த வைத்து வேடிக்கை பார்த்தது. அதுமட்டுமின்றி, தீண்டத்தகாதவர்கள் என்று தான் வகுத்த விதிகளையே மீறி, அந்த மக்களிடம் பிச்சையெடுத்து வாழும் கீழ்த்தரமான குணம் கொண்டது என்பது திராவிடர்களுக்கு தெரியும்.

 

இதனால்தான் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு மரியாதை இல்லை என்பது எஸ்.வி.சேகருக்கு தெரியும். ஆனாலும், அந்த இழிகுணத்தை கைவிட்டு, எல்லோரும் சமம் என்ற மனப்பான்மையோடு, பிறரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நூலையும், பாஷையையும் கைவிட அவர் சம்மதிக்க மாட்டார்.

 

கோவிலில் தீபாரதனைத் தட்டில் தீண்டத்தகாத மக்கள் போடும் பிச்சைக் காணிக்கையிலும், திருமண காரியத்திலிருந்து கருமாதி காரியம் வரை தீண்டத்தகாதவர்களிடம் பெறும் லஞ்சக் காணிக்கையிலும் ஆரியரின் கலாச்சாரம் வாழ்கிறது.

 

திராவிட கலாச்சாரமோ, அவர்களுக்கு பிச்சையும், லஞ்சமும் கொடுத்து நீடிக்கிறது. ஒருவகையில் திராவிடர்களுக்கு லஞ்சம் வாங்க கற்றுக்கொடுத்ததே ஆரியர்கள்தான் என்றுகூட சொல்லலாம்.

Next Story

நான் விசுவாசி கிடையாது... நான் திரும்பித் தர மாட்டேன்... எஸ்.வி.சேகர் பதில்

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

s.ve.shekher   jayakumar

 

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  

 

அதற்கு ஜெயக்குமார், '' மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார், அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். உண்மையிலேயே எஸ்.வி.சேகர் மானம், ரோஷம், சூடு உள்ளவராக இருந்தால், அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன். இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் கொடுக்கப் படுகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கும் அவரை பதில் சொல்லச் சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். 

 

அதில், நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் இந்தச் சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படி திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும். 

 

மக்களின் கருதுக்களை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக நேற்றைய வீடியோவைப் பயன்படுத்திக் கொண்டேனே தவிர, நான் மூன்றாம் தர அரசியல் செய்பவன் அல்ல. அதனால் நீங்கள் தி.மு.க.வைவிட வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் நான் சொன்ன விசயங்கள் ரைட். 

 

அதலாம் இல்லை. கூட்டணி இல்லை. ஒன்றும் இல்லை. நாங்கள் எங்கள் இஷ்டம்போல பண்ணுவோம் எனச் சொல்லுங்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். அவ்வளவுதான். நீங்கள் இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை. 

 

நான் யாருக்குமே விஸ்வாசி கிடையாது. ஒரு தடவை நமது எம்ஜிஆரில் அம்மாவின் உண்மை விஸ்வாசி என போட்டதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொன்னேன். எழுதிக் கொடுக்காத வார்த்தையைப் போடக் கூடாது. அப்படியென்றால் நான் 30 ஆயிரம் பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னேன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

நிறைய பேர் அம்மா இருக்கிற வரைக்கும் அம்மா முகத்த நிமிந்துக்கூட பார்த்தது கிடையாது. பாதங்களை மட்டுமே பார்த்து வணங்கி பலன்களை அனுபவித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை.

 

எம்.எல்.ஏ. சம்பளம், ஓய்வூதியம் நான் திரும்பித் தர மாட்டேன். அது என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். அ.தி.மு.க. கட்சியில் வவுச்சர் போட்டு காசு வாங்கின மாதிரி சொல்றீங்க. தேர்தல் நேரத்தில் எனக்கு கொடுத்த பணத்துக்கு வவுச்சர் போட்டு கொடுத்தவன் நான். நீங்க யாராவது ரெக்கமன்ட் பண்ணி எனக்கு சீட் கிடைச்சதா? பணமே கட்டாமல் எனக்கு எலெக்சன்ல சீட் கொடுத்தது ஜெயலலிதா. 

 

நீங்க நினைச்சா திடீன்னு அவுங்கள தூக்கி சுமப்பீங்க. வேண்டாம் என்றால் தொப்புன்னு போட்டு, ஸ்டாலின் வழிதான் என் வழி என்று போனீங்கன்னா, எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

 

கரோனா ஆரம்பத்தில் நீங்கள் செய்ததைத் பார்த்து தேர்தலில் 120 சீட்டுக்கு மேலே வரும் என்றார்கள். இப்ப என்ன கணிப்பு இருக்கிறது என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் வெற்றி தோல்வி மக்கள் கையில் உள்ளது. 100 ஓட்டில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். 10 ஓட்டில் தோற்றவர்களும் இருக்கிறார்கள். 

 

http://onelink.to/nknapp

 

ஒரு ஆன்மீக அரசியலாக, ஒரு கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மாறினால் உங்களுக்கு நல்லது. கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு நல்லது. இல்ல இல்ல உங்கள சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும் 2021. என்ன இருந்தாலும் நீங்கள் என்னுடை அருமை நண்பர் ஜெயக்குமார். டென்ஷன் ஆகாதீங்க. இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

Next Story

பக்கத்து பக்கத்து பெஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். இப்படி கேட்க வேண்டியதில்லையே ஜெயக்குமார்... எஸ்.வி.சேகர் பதில்

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

jayakumar s.ve.shekher

 

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  

 

அதற்கு ஜெயக்குமார், ''எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இவர் எந்தக் கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார் அ.தி.மு.க. கொடி. அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்ப கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன், இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். இரண்டாவது, எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், நான் என்ன சொன்னேன். தி.மு.க.வின் கொள்கைகளைப் போலவே அ.தி.மு.க. இருந்தால் அ.தி.மு.க. ஜெயிப்பது கடினம். அதனால் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நான் சொன்னேன். சொன்ன கருத்துக்கு ஏதோ பதில் சொல்வதாகக் கூறி, மான ரோஷம் இருந்தால் ஐந்து வருட பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்கிறார்.

 

நான் ஒரு பைசாக் கூட அ.தி.மு.க.வில் இருந்து வாங்கவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக இருந்து, நேர்மையாக உழைத்து, ஒரு பைசாக் கூட கமிசன் வாங்காமல் இருந்து, அரசு கொடுக்கக் கூடிய பணத்தை ஓய்வூதியமாக வாங்கிக்கொள்கிறேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. நான் எங்காவது ஒரு பைசா கமிசன் வாங்கியிருக்கிறேன் எனத் தெரியுமா? நாம எல்லோருமே பக்கத்து பக்கத்து பென்ஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். அவ்ளோ விரோதியா என்னைப் பார்த்து வெட்கம், மானம், ரோசம் இருக்கான்னு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே ஜெயக்குமார்.

 

ஜெயக்குமார் உங்களை நான் நல்ல நண்பராகத்தான் பார்க்கிறேன். நான் சொன்னது, இந்த அ.தி.மு.க. தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்தே தவிர வேறு ஒன்றுமே கிடையாது. எப்போது தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை அ.தி.மு.க.வில் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்களோ, எம்.ஜி.ஆர். எப்போ மூகாம்பிகை கோயிலுக்குப்போய் வைரவால் சாத்திட்டு வந்தாரோ, எப்போது ஜெயலலிதா எல்லா கோயிலுக்கும் போய் ஆமாம் நான் ஆன்மீகவாதி அப்படின்னு உரக்கச் சொன்னார்களோ, அப்பவே அறிஞர் அண்ணான்னு நீங்கள் கொண்டாடுகின்ற அண்ணா கொள்கையும், ஈ.வே.ரா. கொள்கையும் புதைக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியும். ஆனால் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் என்னை சொந்தச் சகோதரனைப் போல என்னைப் பார்த்துக்கொண்டார். இவ்வாறு கூறியிருக்கிறார்.