Skip to main content

"உயிரைக் கொல்ல வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வக்கிரம் காவல்துறையில் சிலருக்கு.." - மருத்துவர் ஷாலினி ஆவேசம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

f


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு மனநல மருத்துவர் ஷாலினி பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

கடையை மூடுவதில் பிரச்சனை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்ப உயிருடன் வரமாட்டார்கள்  என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு கொடுமைக்குப் பிறகும், இந்தக் காவல்துறையும் அரசும் என்ன செய்கின்றது என்ற கோபம் பொதுமக்களுக்கு நிச்சயம் ஏற்படும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிகக் கோபம் வெளிப்பட வாய்ப்பு இருக்கின்றது. இது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மனநிலையாக இருக்கும். அந்தக் கோபத் தணல் எரிந்துகொண்டே இருக்கும். இந்தச் சம்பவத்தைச் செய்த போலிசார் கட்டாயமாக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.  இதற்கு உரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். காவல்துறையில் இந்த மாதிரியான ஆட்கள் இருப்பது அந்தத் துறைக்கே ஒரு அவமரியாதையைப் பெற்றுத் தந்துவிடும். 

 

மற்ற உயிரைக் கொல்ல வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வக்கிரம் காவல்துறையில் சிலருக்கு இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இந்த மாதிரி சம்பவங்களில் ஈடுபட்டால் மக்களிடம் காவல்துறையினர் மீது நல்ல எண்ணம் எப்படி வரும். அவர்களை எப்படி நண்பர்களாக பார்க்க முடியும். அவர்கள் போலிஸ்காரர்கள் என்பதால் அவர்களைக் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. அவர்கள் நமக்கு பாதுகாப்பு தருவார்களா என்பதை உறுதி செய்யவேண்டியது மிக அவசியம். போஸிஸ் துறைக்கே இது ஒரு அதிர்ச்சிகரமான ஒரு விஷயமாகத்தான் இது இருக்கும். அவர்களே கூட இதனை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எனவே அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

 

எங்களுக்குச் சேவை செய்வதுதான் காவல்துறையின் முழு நேர வேலையே. அதை விட்டுவிட்டு எங்களை அடித்துக் கொல்வதற்கு நீங்கள் பணிக்கு வரவில்லை. அரசு மக்களுக்குத்தான் விஸ்வாசமாக இருக்க வேண்டும். காவலர்கள் செய்யும் அநீதிக்குத் துணை போகக் கூடாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கருணை காட்டக்கூடாது. அவ்வாறு கருணை காட்டினால், மக்களை அரசே கைவிட்டது போல் ஆகிவிடும். போலிஸுக்கு அவர்கள் உறுதுணையாக தொடர்ந்து இருப்பார்கள் என்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகிவிடாதா? எனவே மக்கள் பக்கமும் நாங்கள் இருப்போம் என்பதை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும். இந்த மாதிரியான மனித உரிமை மீறல் செயல்களைச் செய்பவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள், என்றார்.

 

 

 

 

Next Story

பாதுகாப்பு தேடி காவல்நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கே பாதுகாப்பில்லை - மருத்துவர் ஷாலினி வேதனை!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

kl;


சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் மருத்துவர் ஷாலினி அவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாரக அவர் பேசியதாவது, "பலரும் இங்கே செந்தமிழில் பேசினார்கள், என்னால் அப்படி எல்லாம் பேச முடியாது. எனக்குத் தெரிந்த சென்னை தமிழில்தான் பேசுவேன். ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்றதும் இவர்கள் எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என்று நீங்கள் சற்று குழம்பி கூட போக வாய்ப்பிருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நீங்கள் ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்ற தலைப்பையே வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அதற்கும் பெண்களுடைய தற்போதைய நிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் பேச வேண்டும். அதற்கு முன் பெண்களுடைய தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இங்கே பேசியவர்கள் பலரும் கூறினார்கள் பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று. நான் தற்போது ஒன்று கூற விரும்புகிறேன். உலகில் கர்ப்பமாக இருக்கும் எந்தப் பெண்ணும் 5 மாதம் ஆனவுடன் மருத்துவரிடம் சென்று தனக்கு எந்த குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி  மருத்துவர் பதில் கூறினார் அவர் சிறைக்குச் செல்ல வேண்டும். 

 

ஏனென்றால் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் காட்டப்படும் பாகுபாடு. பெண் குழந்தைகளை சமூகம் சுமை என்று நினைக்கிறது. பெண் குழந்தைகள் செலவு வைப்பார்கள் என்ற எண்ணம் எல்லாம் சமூகத்தில் புரையோடி இருக்கிறது. அவர்கள் படித்தாலும் சம்பாதித்து யாரோ ஒருவருக்கு கொடுக்க போகிறது. அதற்கு நாம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த முதலீடு திரும்ப கிடைக்கப் பெறாது என்று நினைக்கிறார்கள். சரி, பெண்கள் படித்து வேலை செய்யும் இடங்களில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தால் அங்கும் நம்மால் இருக்க முடியவதில்லை. மீ டூ தொல்லைகள் தொடர்கிறது. அதைப் பற்றி வெளியே சொன்னால், ‘தற்போது ஏன் கூறுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள், எப்போது ஒரு பிரச்சனையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் பெண்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். அதற்குக் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. உடனே சொன்னாலும் பிரச்சனை, லேட்டா சொன்னாலும் பிரச்சனை. போலீஸ்காரர்களிடம் சொல்லலாம் என்று பார்த்தால் போலீஸ்கார அம்மாவுக்கே பிரச்சனை. இப்போது இதை எங்கே போய் சொல்வது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஏன் நாம் இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் இருக்கிறோம், நமக்கு என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும். நாம் அறிவியலை இடையில் மறந்துவிட்டோம் என்பது மட்டுமே காரணமாக இருக்கும். அது எப்போதிலிருந்து காணாமல் போய்விட்டது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா மனித குலங்களும் அறிவியல் ரீதியாகத்தான் யோசிக்கிறார்கள். பிறகு அதில் மாற்றங்கள் வந்துவிடுகிறது. ஆனால், அது பெண்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

 

 

Next Story

'மக்கள் பண்பு கொண்ட தலைவர்தான் தேவை... 56 இன்ச் மார்பு இல்லை" - மருத்துவர் ஷாலினி!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

fhj


அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், தற்போது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும்  நபர்களுடன் பிரியாணி சமைத்து உண்டார். இந்த பிரச்சாரம் பலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் விமர்சனமும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதா, அவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

எப்போதுமே தேர்தல் வரும் நேரத்தில் இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லோருக்கும் வருவதுண்டு. பாஜக மோசமான கட்சி என்றால் அதற்காக காங்கிரஸை ஆதரிக்க முடியுமா? காங்கிரஸ் நல்ல கட்சியா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. மேலும் பாஜக இந்துத்துவா என்றால் காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

அப்படி என்றால் அதையும் எதிர்க்க வேண்டும்தான். நாம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடையப் போவதில்லை. முடிந்தால் காங்கிரஸ் கட்சியை நம்முடைய கோட்பாடுகளுக்கு கொண்டு வர முயற்சிப்போம். எரியிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். எந்தக் கொள்ளி நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம் வாழ்க்கை தரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது என்பதைப் பார்த்து நாம் அந்த கொள்ளியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சர்வாதிகார தன்மையில் இருக்கிறவர்களை நம்பி நாம் பயணிக்க முடியாது. அடுத்த முறை மாறிவிடுவார்கள் என்று நாம் யாரையும் நம்ப முடியாது. தொடர்ச்சியாக அவர்களின் செயல்பாடு மதத்தை நோக்கியதாக இருக்கும்போது அவர்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள். 

 

இருக்கிற கொள்ளியில் பெட்டர் கொள்ளியை நாம் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது நமக்கு ஏற்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். எனவே மக்கள்தான் நம்மை யார் வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டியது பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நபர். அந்த வகையில் ராகுல் காந்தி டிக் வாங்குகிறார். ஒரு சின்ன பெண் அவருடன் புகைப்படம் எடுக்க அவரின் வண்டியில் ஏறும்போது அந்தக் குழந்கையின் உயரத்துக்கு குனிந்து, அந்த பெண்ணின் ஆடையை சரி செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த மாதிரியான மக்கள் பண்பு கொண்ட ஒருவர்தான் வேண்டும். 56 இன்ச் மார்பு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

 

அந்த ராகுல் காந்தியையே ஒரு குழந்தை என்ற குற்றச்சாட்டைத்தானே பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது?

 

பாஜக மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இந்த மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கிறது. அதாவது ஒருவரை இவர் இப்படிதான், இவருக்கு ஒன்றும் தெரியாது, அவருடைய அறிவு இவ்வளவுதான் என்று அவரது மதிப்பை குலைக்கும் நோக்கில் எதிராளிகள் செயல்படுபவாா்கள். அதுவே பெண்ணாக இருந்தால் அவரின் கற்பு நெறியைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். இது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சிலர் இந்த மாதிரியானடிவேலைகளை செய்து வருகிறார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபடியும் தவறானவர்களைத் தேர்வு செய்யக் கூடாது. ராகுலுக்கு என்ன டெஸ்ட் வைத்து அவரை தோற்றுப் போய்விட்டார் என்று கூறுகிறார்கள்? அதில் எதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் அவர் முன்னேறிக் கொண்டுதான் வருகிறார். தான் தோல்வி அடையவே இல்லை என்று சொல்லும் நபர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய் சொல்கிறார். நாம் சொல்வதைக் கேட்கும் மனிதர்களை சற்று உயர்த்தி விடுவதுதான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும். 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை. கட்சியில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி இருக்கையில் நாம் அவரை எப்படி நம்ம முடியும்? 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை, உண்மைதான். ஆனால் ராகுல் காந்தி நம்மை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாம்தான் அவரை பயன்படுத்திக் கொள்கிறோம். அவருக்கு இடமே இல்லை என்றாலும் நாம்தான் ஒரு இடத்தை ஏற்படுத்திக் தர விரும்புகிறோம். இந்தப் பையனுக்கு மனித பண்பு நம்மை ஆள்பவர்களை விட அதிகம் இருக்கிறது என்று மனதில் தோன்றுகிறது. இரக்க சுபாவம் இருக்கிறது, இவருக்கு நாம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே நம்முடைய பாதுகாப்பை சார்ந்தே அவரின் மீது நம்பிக்கை பிறக்கிறது.