Advertisment

"நித்யானந்தாவிடம் உயர்பதவியில் இருப்பவர்களே காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது..." - மருத்துவர் ஷாலினி பேச்சு!

நித்யானந்தா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இந்திய காவல்துறையோ அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்துள்ளது. இந்நிலையில் அவரின் நான் தான் கடவுள் என்ற பேச்சுக்கு என்ன பொருள், அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பது குறித்து மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

Advertisment

தொடர்ந்து சர்ச்சைகளில்சிக்கி வரும் சாமியார் நித்யானந்தா தற்போது குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் இந்தியாவில் இருந்து தப்பித்து ஈக்வடார் பக்கத்தில் தீவு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் கூறுகிறார்கள். தான் கடவுளின் அவதாரம் என்றும் கூறுகிறார். இதை பற்றிய உங்களின் கருத்து?

Advertisment

மதம் என்பது பல பேருக்கு பெரிய போதையாக இருக்கின்றதால் இந்த மூன்றாவது கண் என்று சொல்வது, மத நம்பிக்கை இதெல்லாம் மக்களிடம் பெரும்பாலும் இணைந்தே இருக்கிறது. யார் நமக்கு அதை சொல்லி தருவார்கள் என்று என்ற ஆவல் பல பேருக்கு நிதர்சனமாக இருக்கிறது. அதனை இந்த மாதிரியான ஆட்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலகதைகளை படிக்கும்போது அதில் வருகிற தெய்வக சக்தி நிஜமாகவே இருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை யார் வெளிக்கொண்டு வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளைகளில் இந்த மாதிரியான தவறான ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவரை விட கடவுள் நான்தான் என்று சொல்பவர்கள் அதீத மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். எங்கள் வேலையில் தினமும் ஒருவர் நான்தான் கடவுள் என்று சொல்பவரை நாங்கள் தினமும் பார்க்கிறோம். மன அழுத்தத்தின் உச்சம் என்றே அதனை நாம் கருத வேண்டும். இவர் தான் கடவுள் என்று கூறுவது மன ரீதியாக பேசுகிறாரா அல்லது ஏதேனும் போதை வஸ்துக்களின் உதவியுடன் பேசுகிறாரா என்பதை நாம் தெரிந்தால்தான் அதுபற்றி விரிவாக பேசமுடியும். மேலும் உயர் பொறுப்பில் இருப்பவர்களே அவரை வணங்குவது, அவரது காலில் விழுவது என்பது அவருக்கு கூடுதல் தெம்பை கொடுக்கும். இந்திய போலீஸ் வேண்டுமானால் அவருக்கு பயப்படலாம். இண்டர்நேஷ்னல் போலீஸ் அவரை சாமியாக பார்க்காது. புகாரை புகாராக மட்டுமே பார்ப்பார்கள்.

tgh

சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ரொம்ப வருத்தமான ஒரு நிகழ்வு. நிர்பயா படுகொலைக்கு பிறகு இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நிதி வசூல் கூட செய்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது, சட்ட திட்டங்கள் இருந்தும் எதுவுமே பலனளிக்கவில்லை. இது மாதிரியான தொடர் உயிர்பலிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில், நீ பெண் தானே என்ற மனநிலையில் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த மனநிலையில் ஆண்கள் இருக்கும் வரையில் இந்த சூழலை மாற்றுவது கடினம். பெண் ஒருவர் இந்த மாதிரி பெண்கனை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறையில் இருக்கும் நூறு நபர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டபோது, அவர்கள் இந்த பலாத்காரத்துக்கு இதே போன்றதொரு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை தெரிவித்துள்ளார்கள். தாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு பெண்கள் ஒரு காரணம் என்ற கோணத்தில் அவர்களுடைய பதில் இருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கு அவர்கள் வளர்ந்த சூழல், குடும்ப சூழ்நிலை, அவர்களின் கல்வி என பல காரணங்கள் அவற்றை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் அது எதனையும் உணராமல் மற்றொருவரின் மீது பழிபோடுவது மிகவும் கொடூரமான மனநிலையின் வெளிப்பாடு ஆகும். ஆனால், நாங்கள் ஆண்கள், இந்த சமூகமோ அல்லது பெண்களோ எங்களை மதிக்கவில்லை என்றும், தங்களுக்கான மரியாதை அவர்கல் தரவில்லை என்றும் சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் கூறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. ரேப்பிஸ்ட்டுகள் இந்த மாதிரி பேசுவது ஒருபுறம் என்றால், அதை தடுத்து எதிர்குரல் கொடுக்க வேண்டியவர்களும் பெண்களுக்கு அறிவுரை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதிரி நேரத்தில் காண்டம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோ அல்லது பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வதோ அபத்தமான ஒன்றாகத்தான் இருக்கும். இன்னும் எவ்வளவு காட்டு மிராண்டி கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் தானாக அவனிடம் வர வேண்டும் என்று நினைக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது? இந்த மனநிலையில்தான் பெருபாலான ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்கு நாம் எந்த மாதிரியான படிப்பினையும் சொல்லிதரவில்லை. அவர்களின் மனமாற்றத்திற்கு நாம் எதுவும் செய்யவில்லை என்று நம்முடைய கூட்டு தோல்விதான்.

nithiyandha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe