Advertisment

மேக்கப் போட்டு டான்ஸ் ஆடத்தான் வேல் யாத்திரையா..? -மருத்துவர் ஷாலினி கேள்வி!

jk

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா இதனை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே தமிழக பாஜகவினரும் மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை செய்கிறார்கள். இதற்கு தமிழக அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி நாம் பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

Advertisment

தமிழகத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தாலும் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்துகிறார்கள். அதில் அதிகப்படியான மக்கள் கலந்துகொள்வதாக பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதையும் தாண்டி தற்போது அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டு போய் இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

எனக்கு இவர்கள் செய்வதை பார்த்தால் ஒன்றுதான் நினைக்க தோன்றுகிறது. இங்கிருப்பவர்கள் அமித்ஷா மற்றும் பாஜகவினரை மிஸ் லீட் செய்வதாகத்தான் தோன்றுகிறது. அவர்கள் இந்த வேல் யாத்திரை என்பதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் காரின் மேல் பகுதியை மட்டும் திறந்துவிட்டு தங்களுடைய தரிசனத்தை மக்களுக்கு காட்டிகொண்டு ஆரம்பத்தில் சென்றனர். அதுவே தவறாகத்தான் இருந்தது. கொற்றவையின் மகனான நிஜ முருகன் தான் வேலை கையில் வைத்திருக்க வேண்டும். முருகன் என்று பெயர் இருப்பதால் மட்டும் வேலை கையில் வைத்திருக்கக்கூடாது. யாராவது சாமியின் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு சுத்துவதை பார்த்துள்ளீர்களா? நான் சங்கு சக்கரத்தை கையில் வைத்து சுத்தினால் என்னை பற்றி என்ன நினைப்பீர்கள். எனவே அவரை ஒரு ஆயுதமாக வைத்து இதை பாஜகவினர் செய்கிறார்கள். இது மக்கள் மனதில் எடுபடவில்லை என்பதையே நிஜ சூழ்நிலை நமக்கு காட்டுகிறது.

பாஜகவின் வேல் யாத்திரையில் பெருவாரியான மக்கள் கூடுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே?

இதெல்லாம் தமிழக பாஜக டெல்லி பாஜகவுக்கு சொல்ல விரும்புகின்ற செய்தி. அதற்காகத்தான் தமிழக பாஜகவினர் இதனை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன. பொதுமக்கள் அந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், இப்படி செல்வதனால் ஏழாவதாக முருகனுக்கு வீடா கட்டப்போகிறார்கள் என்ற தெளிவு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. எதாவது பயன் இருந்தால் தானே மக்கள் அதனை நோக்கி செல்வார்கள். கடவுளிடம் செல்வதே நாம் நினைப்பதை பெற வேண்டி வேண்டுதல் செய்யத்தானே? அப்படி இருக்கையில் தேவையில்லாத வேலைகளுக்கு சென்று அவர்கள் நேரத்தை எப்படி விரயமாக்க விரும்புவார்கள்.

அதையும் தாண்டி வேல் யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அலகு குத்த வேண்டும், அல்லது காவடி எடுக்க வேண்டும், செருப்பு போடாதவாறு செல்ல வேண்டும். இது எதையுமே அவர்கள் கடைபிடிக்கவில்லை. அதனால் அது பொதுமக்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை. எனவே பெண்களை அழைத்துவந்து இடுப்பு தெரிய டான்ஸ் ஆடவிட்டு கூட்டம் சேர்க்கிறார்கள். முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள் என்றால் பக்தி ஆட்டம் வேண்டுமானால் ஆடுவார்கள், இந்த மாதிரி குத்தாட்டம் எல்லாமா ஆடுவார்கள். இதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். எதற்காக இவர்கள் இந்த நாடகத்தை போடுகிறார்கள் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

பக்தியில் இருக்கும் பெண்களை நீங்கள் கொச்சைபடுத்துவது போல் இருக்கிறதே?

பக்தியில் பெண்கள் எப்படி நடனமாடுவார்கள் என்று நீங்கள் பார்த்ததே இல்லையா? தூரமாக உடுக்கை சத்தம் கேட்டதும் தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு ஆடுவார்கள். ஆனால் இவர்கள் செய்வது என்ன. வரிசையாக நின்று கொண்டு நடன பயிற்சி எடுத்துக்கொண்டு ஆடுவது போல் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். இதை எப்படி பக்தியில் ஆடுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியும்.

அவர்கள் அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படி தவறு என்று சொல்ல முடியும்?

அவர்களுக்கு தெரிந்த வழிமுறையில் வெளிப்படுத்தட்டும். ஆனால் இது நிஜ பக்தி இல்லை. எந்த ஊரில் மேக்கப் போட்டு சாமியாடுகிறார்கள். இவர்கள் செய்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களை ஏமாற்றாதீர்கள், நாங்கள் ஏமாளிகள் இல்லை என்று கூறுகிறோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து உண்மையான பக்தி உள்ளவர்களை அவமானப்படுத்துகிறார்கள். அதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறோம். பக்தி என்ற போர்வையில் செருப்புடன் சென்று பக்தி உடையவர்களின் மனதினை காயப்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe