Advertisment

கேள்விக்குப் பதில் சொல்ல திராணி இல்லாதவர்கள், தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள் - மருத்துவர் ஷாலினி பேச்சு!

ஸ

Advertisment

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பேராசிரியர் சுந்தரவள்ளிக்கும், இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாருக்கு இடையே விவாதத்தில் சச்சரவு ஏற்பட்டு விவாதக் களமே போர்க்களமானது. இருவருக்கும் ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என அனைவரும் தங்களின் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சச்சரவு தொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேள்வியைமுன்வைத்தோம்,அவரின் பதில்வருமாறு,

தொலைக்காட்சி விவாதங்களில் சமீப காலமாகச் சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சில தினங்களுக்கு முன்பு கலந்துகொண்ட விவாதத்தில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்று அவர் அரங்கில் இருந்து வெளியேறினார். அதைத் தொடந்து சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாரும், பேராசிரியர் சுந்தரவள்ளியும் கலந்துகொண்ட விவாதத்தில் இருவர் பேசியதும் சர்சையானது. இருவரும் அதிகப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியது பார்வையாளர்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

"பேராசிரியர் சுந்தரவள்ளி தொலைக்காட்சி விவாதத்தில் பேசிக்கொண்டு இருந்த போது ராம.ரவிக்குமார் தொடர்ந்து குறுக்கீட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனால் சுந்தரவள்ளி அவர்கள், அண்ணே! நீங்கள் நோட்ஸ் எடுத்துக்கோங்க, உங்களுக்கான நேரத்தில் நீங்கள் பேசலாம் என்று கூறினார். ஆனால் அவர் அது எதைப் பற்றியும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? உங்களை நாம் தமிழர் கட்சியினர் எப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியாதா? என்று கூறியுள்ளார். இவர் இப்படிப் பேசியதும் அவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார், அதன்பிறகுஅவர் பேசிய டோன்பிறகு மாறியது. இதன் பிறகுதான் அவர்களுக்குள் வார்த்தை போர் வந்தது. பொறுத்துப் பார்த்த அவர் கட் பண்ணி விடுவேன் என்று கூறினார் என்றால் இந்த வார்த்தைகளை அவர் எங்கே கற்றுக்கொள்கிறார் ஆண்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.

Advertisment

ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் ஆண் ஒருவர் ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார். இந்தக் கிராமத்தில் பாட்டிகள் எல்லாம் இட்டுக்கட்டி பேசுவதுபோல் அவர் எதையாவது சேர்த்துப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதை நாம் அந்தப் பேட்டியை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும். இந்த மாதிரி ஒரு சம்பவம் தான் ஜோதிமணி எம்.பிக்கும் நடைபெற்றது. அவர்கள் இங்கே இப்படி நடக்கின்றது, அங்கே இப்படி நடந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாகப் பேசக்கூடியவர்கள். அவர்களின் கேள்விக்கு இவர்களிடம் எப்போதும் பதில் இருக்க போவதில்லை. கேள்விக்குப் பதில் சொல்ல திராணி இல்லாதவர்கள் பெண்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள். தங்கள் வீடுகளில் பெண்கள் இருப்பதைக் கூட இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்தினால் தான் உண்டு" என்றார்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe