உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்தக் கரோனா விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளன, அதன் போக்கு சரிதானா என சில கேள்விகளை முன்னாள் தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிடம் முன்வைத்தோம். அவற்றிலிருந்து ஒரு பகுதிபின்வருமாறு...

கரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்களே, அது பற்றி உங்களின் பார்வை என்ன?

நீங்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் உங்களிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நாங்கள் எவ்வளவு பணத்தைச் செலவு செய்துள்ளோம் என்று 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பயன்பெற்றவர்களைக் கேட்டால் அதுபற்றி விலாவாரியாகக் கூறுவார்கள். லட்சக்கணக்கான மக்களுக்குக் கழகத் தோழர்கள் தங்களின் சொந்தநிதியைப்போட்டு பண உதவி, பொருள் உதவி செய்து வருகிறார்கள். இன்று வரை என்னுடைய தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருளுதவி செய்து வருகிறேன். நாங்கள் களப்பணி மட்டும் தான் செய்ய முடியும். கரோனாவுக்கு நாங்கள் சிகிச்சை தர முடியாது. எங்கலால் முடிந்த ஒன்றைத்தான் எங்களால் கொடுக்க இயலும். அரசு கொடுக்க வேண்டிய சிகிச்சைகளை அவர்கள் எங்களைத் தரச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

Advertisment

எந்த அரசாங்கமும் நாங்கள் செய்வதைப் போன்று தொடர் உதவிகளைச் செய்யவில்லை என்பதை எங்களால் அறுதியிட்டு கூற முடியும்.எங்களால் முடிந்ததைச் செய்துகொண்டு இருக்கிறோம். தொடர்ந்து செய்வோம். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் நாங்கள் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் கூட அனைத்திலும் ஊழல் செய்திறார்கள். சத்துணவு முட்டையில் ஆரம்பித்துகேபிள் வரை தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்கள். அதனால் எங்களைப் பார்த்து அவர்கள் பேசுவதற்கு அவர்களுக்கு எவ்விதமான அருகதையும் கிடையாது. மக்களுக்காக ஆட்சி நடத்தியவர்கள் நாங்கள், அவர்களின் நலனுக்காக ஆட்சியை நடத்திவருபவர்கள் அவர்கள். எனவே கரோனாவில் கொள்ளை அடிப்பதை நிறுத்திவிட்டு மக்கள் நலத்திட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்றார்.