smart phone

Advertisment

“மொபைலில் எண்ணம் அற்ற நிலையில் ஸ்க்ரோல் செய்வதைவிட போரிங்கான விஷயம் வேறு எதுவும் இல்லை என நாங்கள் நினைக்கின்றோம். இந்த வழக்கமான செயலில் இருந்து எதிராக செயல்பட ஒரு வாய்ப்பு அளிக்க இருக்கிறோம். 100,000 டாலரை ஒருவரிடம் தந்து அதன்மூலம் உறுப்படியான ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிப்பதற்கு உங்களின் நேரத்தை செலவிட அந்த பணத்தை தர உள்ளோம்” என்று விட்டமின்வாட்டர் நிறுவனத்தின் மேலாளர் நட்டாலியா சுவாரஸ் ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பேட்டி கொடுத்தார்.

இதனையடுத்து இந்த 100,000 டாலரை எனக்கு தருவார்களா? என்று பலர் யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள். பலர் எப்படி இது நமக்கு கிடைக்கும் என்று தேட தொடங்கியுள்ளனர். உடனடியாக ஒரு பம்பர் தொகை வேண்டுமா, பின் வருபனவற்றில் சொல்வதை செய்யுங்கள்....

கொக்ககோலா நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் விட்டமின்வாட்டர். இந்த நிறுவனம் புதிதாக ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு போட்டியை நடத்த இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றிபெறுபவருக்கு 100,000 அமெரிக்க டாலர் பரிசாம். இந்திய மதிப்பில் 72 லட்சம் ரூபாய் இருக்கும். இந்த போட்டியில் வெற்றிபெற்று 100,000 டாலரை பெற என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால், அது பலருக்கு கண்டிப்பாக முடியாத காரியம். வீட்லிருந்து அலுவலகம் வரை, ரோட்டிலிருந்து காடு வரை எல்லா இடத்திலும் தலையை குணிந்த மேனிக்கே செல்கின்றனர் அதற்கு முதல் காரணம் ஸ்மார்ட் மொபைல்கள். ஸ்மார்ட் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் பலர் இருக்க இந்த போட்டி ஒரு சவாலான போட்டியாகத்தான் இருக்கும்.

Advertisment

அப்படி என்ன போட்டி அது என்கிறீர்களா? ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தக்கூடாது இதுதான் விட்டமின்வாட்டர் நிறுவனம் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வைக்கும் சவால். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தொடர்பிற்காக விட்டமின்வாட்டர் நிறுவனம் தரும் 1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மொபைலை தருவார்கள் அதைதான் இந்த போட்டியை பின்பற்றுபவர்கள் பயன்படுத்த வேண்டுமாம்.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் தற்போது பார்த்துகொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என நினைத்தால் அது தவறு. நீங்கள் லேப்டாப் மற்றும் கணினியை பயன்படுத்தலாம், இவ்வளவு ஏன் ஸ்மார்ட் டிவைசஸ் என்று சொல்லப்படும் கூகுள் ஹோம் மற்றும் அமேசான் அலெக்ஸா ஆகியவற்றைகூட பயன்படுத்தலாம். எனினும் வெற்றிபெற்று 100,000 டலரை பெற ஸ்மார்ட் மொபைல்கள், டேப்லட்களை பயன்படுத்தக்கூடாது. மற்றொருவரை தொடர்புகொள்ள வேண்டுமானாலும் 1996 ஆண்டு வெளியான சாதாரண மொபைல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விட்டமின்வாட்டர் நிறுவனம், இந்த போட்டியில் பங்கேற்க கொடுத்திருக்கும் காலக்கெடு ஜனவரி மாதம் 8ஆம் தேதி வரை. போட்டியில் பங்குபெற செய்யவேண்டிய வழிமுறை, #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தி எதற்காக ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தாமல் இந்த போட்டியில் பங்கேற்க நினைக்கிறீர்கள் என்ற விளக்கத்தை சமூக வலைதளங்களான ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். விட்டமின்வாட்டர் நிறுவனத்தால் ஜனவரி 22ஆம் தேதிக்குள் மேல் சொல்லப்பட்டதை போன்று சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களை இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அவர்களிடம் பழைய மொபைல்களை பயன்படுத்த தரும்.

Advertisment

உங்களுக்கு ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது அதிகம் என்று யோசித்தால் அதற்கும் விட்டமின்வாட்டர் நிறுவனம் ஒரு மற்றொரு ஆப்ஷனை தருகிறது. அது என்ன என்றால், ஆறு மாதத்திற்கு ஸ்மார்ட் மொபைல்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், அதற்கு பரிசு தொகையாக 10,000 அமெரிக்க டாலர் தரப்படும். இந்திய மதிப்பில் 7.2 லட்சமாம். ஆனால் ஒன்று, இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தை ஏமாற்றி வெற்றிபெற்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். இறுதியாக லை-டிடெக்டர்(பொய்யை கண்டுபிடிக்கும் கருவி) வைத்து, நீங்கள் இந்த ஒரு வருடத்தில் ஸ்மார்ட் மொபைல்கள் உபயோகப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டுதான் இந்த பரிசு தொகையான 100,000 டாலரை தருவார்களாம்!