Skip to main content

தேசிய தலைவர்களை ஜாதித் தலைவர்களாகப் பார்க்காதீர்கள்! - வானதி சீனிவாசன் பேட்டி

Published on 01/11/2018 | Edited on 02/11/2018
sardar vallabhbhai patel



குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். படேல் சிலை திறக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். தேர்தலையொட்டி வாக்குகளை கவருவதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாஜக நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன்.
 

குஜராத்தில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் படேல் வாக்குகளை குறிவைத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறுகிறார்களே?
 

நம்முடைய தேசிய தலைவர்களை இன்று ஜாதித் தலைவர்களாக பார்க்கின்ற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. படேல் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் நம்முடைய நாட்டிற்கு ஆற்றிய இந்த பணிக்காக நிச்சயம் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த பணியை மேற்கொண்டிருக்கும். நம்முடைய நாட்டினுடைய சுதந்திரத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக சீலர்களையெல்லாம் இன்று ஜாதி வழியாக பார்க்கின்ற வாக்கு வங்கி அரசியலாக இதனை பார்க்க வேண்டியதில்லை.

 

Vanathi Srinivasan


 

நர்மதை அணையால் பாதிக்கப்பட்ட 72 பழங்குடி கிராம மக்களுக்கு அறிவித்த திட்டங்களை கவனிக்காமல் இப்படி ஒரு சிலை தேவையா என்கிறார்களே?
 

அந்த திட்டங்கள் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பக்கமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய விஷயம். அந்த பழங்குடியின மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை, குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது தவறு. அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகளெல்லாம் அங்கு அமல்படுத்தப்பட்டு அந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 

சிலை திறப்பு அன்று அந்த மக்கள் உண்ணாவிரதம் அறிவித்தார்களே அதைக்கூட பாஜக அரசு கண்டுகொள்ளவில்லையா?
 

இந்த சிலையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். பட்டேல் சிலைக்காக விவசாயிகளிடம் இருந்து நாடு முழுக்க மண் மற்றும் இரும்பு சேமிப்பினுடைய தமிழ்நாட்டு பொறுப்பாளராக இருந்தேன். ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திற்குள் இருப்பதைப்போன்ற அந்த பகுதியில் பழங்குடியின மக்களுக்கு இந்த சிலை வாயிலாக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஒரு சில நபர்கள், அமைப்புகள் மோடி அரசுக்கு எதிராக அந்த மக்களை தூண்டிவிட்டார்கள். அவ்வளவுதான்.
 

எந்த விதத்திலேயும் அந்த மக்களுடைய இயற்கையான சூழல், இயற்கைக்கான பாதிப்பு வராமல் லட்சக்கணக்கானோரை திரட்டி இந்த நிகழ்வை கூட பிரம்மாண்டமாக செய்ய முடியும். இந்த துவக்க விழா இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெறும் 5 ஆயிரத்திற்கு உட்பட்டோரை மட்டுமே வைத்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது.
 

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் இப்போது உள்ளது. வரக்கூடிய காலங்களில் இயற்கை சூழல் கெடாதவாறு சுற்றுலா மேம்பாடு வளரப்போகிறது. இயற்கை சூழலை பொறுத்தவரை மிக மிக எச்சரிக்கையாக இந்த அரசு கையாளுகிறது.
 

சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிலையை அருகில் இருந்து பார்க்க ரூபாய் 120ம், மேலே ஏறிப்பார்க்க ரூபாய் 350ம் கட்டணம் என்பது சரியா?
 

நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்பது முழுமையாக இலவசமாக இருக்க வேண்டியது இல்லை. பல்வேறு சுற்றுலா தலங்களில் வருகை தரக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் குறைந்த அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அது பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு உயரமாக இருக்கக்கூடிய அந்த சிலைக்கு லிப்ட் பொறுத்தப்பட்டிருக்கிறது. சுற்றி இருக்கக்கூடிய மலர் பாதைகள், தோட்டங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க எந்த ஒரு சுற்றுலா தலமாக இருந்தாலும், வளர்ந்த நாடுகளிலும் கூட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆகையால் அர்ப்பணிப்பு என்பதால் அனைத்தும் இலவசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.