Advertisment

"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்!"  -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்!

கேட்டது கிடைக்கவில்லையெனில் அதிமுகவை தூக்கிச் சுமக்க வேண்டாம் என பாஜகவின் தேசிய தலைமைக்கு மெசேஜ் தந்திருக்கிறார்கள் தமிழக பாஜகவினர் !

Advertisment

 bjp

மூன்றாண்டுகளாக முடங்கி கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக, திமுக கட்சிகளின் கூட்டணிகள் பரபரப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. விருப்ப மனுவை பெறுவதில் இந்த கட்சிகளிடம் வேகம் கூடியுள்ளது.

admk

Advertisment

தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சி கூட்டணியும் இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகமும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவே செய்கின்றன.

Narasimhan bjp

இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்தார். தமிழக அரசியல் குறித்து சுமார் 40 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார் சந்தோஷ்.

அப்போது, பல புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி பேசிய நரசிம்மன், ‘’ உள்ளாட்சி தேர்தல்தான் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும். பாஜகவின் அரசியல் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த சமரசத்துக்கும் இடம் தந்து விடக்கூடாது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக போட்டியிட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் பதவிகளில் 35 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுவது அவசியம். அதனால், அதிமுக கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த 35 சதவீத இடங்களை கேட்டுப்பெற வேண்டும். இதற்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவது மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் வலிமையை பலகீனப்படுத்தும். அதனால், 4 மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் 35 சதவீத இடங்களை பெறுவதில் அதிமுக தலைமையிடம் கறாராக இருக்க வேண்டும். கேட்டது கிடைக்கவில்லையெனில் தனித்து போட்டியிடவும் பாஜக தயங்கக்கூடாது. பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாக அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். பாஜகவை அதிமுக சுமப்பதாக சொல்வது தவறு. பாஜகதான் அதிமுகவை தூக்கிச் சுமக்கிறது. அதனால், கேட்டது கிடைக்காது போனால் அதிமுகவை தூக்கி சுமப்பதை தவிர்க்க வேண்டும் ‘’ என விவரித்திருக்கிறார் நரசிம்மன்.

அவருடைய கருத்தினை உற்று கவனித்து கொண்ட சந்தோஷ், நரசிம்மனை பாராட்டியதுடன், " இந்த தகவல்களை தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவேன் " என கூறியுள்ளார் மிக அழுத்தமாக! நரசிம்மனின் கருத்துக்களை போலவே தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பலரும் டெல்லிக்கு தகவல்களை பாஸ் பண்ணி வருகின்றனர்.

Delhi local body election Tamil Nadu admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe